நிழல் தரும், நிஜக் கதை சொல்லும்

நிழல் தரும், நிஜக் கதை சொல்லும்

1 mins read
60f56eb7-fd21-4275-8830-818308d6999b
மக்கள் நடமாட்டம் மிகுந்த பஃப்ளோ ரோட்டில் அமைந்துள்ள மரபுடைமைக் குவிமாடம். -

லிட்­டில் இந்­தியா செல்­லும் நம்­மில் எத்­தனை பேர் பஃப்ளோ ரோடு நுழை­வா­யில் அரு­கில் அமைந்­தி­ருக்­கும் நீல­நிற மர­பு­டைமை குவி­மா­டத்­தைப் பார்த்­தி­ருப்­போம்?

புகைப்­ப­டங்­கள், வரை­ப­டங்­கள் நிறைந்த பல­கை­களில் லிட்­டில் இந்­தி­யா­வின் வர­லாறு இந்­தக் குவி­மா­டத்­தில் சுருக்கி எழு­தப்­பட்­டி­ருக்­கும். தஞ்­சோங் பகார் சமூக மன்ற ஏற்­பாட்­டில் இது உரு­வா­னது.

வேற்று இனத்­த­வ­ரும் இங்கு உள்ள வர­லாற்­றுத் தக­வல்­க­ளைப் படித்­துப் பயன்­பெ­று­கி­றார்­கள். சிங்­கப்­பூ­ரின் பல இன, பல சமய கலா­சா­ரத்­தைப் பிர­தி­ப­லிக்­கும் வித­மாக நம் முன்னோர்கள் எப்­படி ஒற்­றுமை­ யாக வாழ்ந்­தார்­கள் என்னும் விவ ரங்­களை இந்­தக் குவி­மா­டத் தக­வல் பல­கை­கள் மூலம் தெரிந்­து­கொள்­ள­லாம்.

இந்­தக் குவி­மாடத்தை அறிந்­தோ­ரி­டம் தமிழ் முரசு கருத்து திரட்­டி­யது. தேக்­கா­விற்கு அவ்­வப்­போது வந்­து­செல்­லும் ரா.ரேக்கா, 42, என்பவர், மழை அல்­லது வெயி­லுக்கு ஒதுங்க இடம் தேடி­ய­போது இந்த மண்­ட­பத்­துக்கு வந்­த­தா­கக் கூறி­னார்.

காத்­தி­ருக்­கும் சிறு­நேரத்­தி­லும் லிட்­டில் இந்­தி­யா­வைப் பற்­றிய வர­லாற்­றைத் தெரிந்­து­கொள்­வது நேரம் பய­னுள்ள வழி­யில் கழிக்க உத­வு­கிறது என்­றார் அவர்.

குவிமாடக் காட்­சிப் பல­கை­களில் உள்ள விவ­ரங்­க­ளைப் படித்த பின்­னர், தேக்கா பற்­றிய பல தக­வல்­களை அறிந்­து­கொண்­ட­தாக நூர் சயா­ஃபிகா, 19, என்­ப­வர் தெரி­வித்­தார். எழு­த படிக்­கத் தெரி­யா­த­வர்­கள்­கூட லிட்­டில் இந்­தியா மர­பு­டை­மைத் தக­வல்­களை இங்­குள்ள படங்­கள் மூலம் எளி­தாக அறிந்­து­கொள்­ள­லாம் என்­றார் ஜெய்­னோம் ஷேக், 65.