மகனுக்காக எதையும் எதிர்கொள்ள தயார்

மதி­யி­றுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்ட மக­னுக்­காக தம் முழு­நேர ஆசி­ரி­யர் பணியை ராஜேந்­தி­ரன் கு சேது­ராஜ், 56, கைவிட்­டார்.

"என்­னு­டைய முழு கவ­னத்­தை­யும் மக­னின் மீது செலுத்தி, என் மொத்த வாழ்க்­கை­யை­யும் அவ­ரைச் சுற்­றித் திட்­ட­மிட்­டுக்­கொண்­டேன். மக­னின் தேவை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி நான் இன்­று­வரை மன­உ­று­தி­யு­டன் வாழ்ந்து வரு­கிறேன்," என்று கூறி­னார்.

மகன் கிருஷ்­ணா­வுக்கு இரண்டு வய­தாக இருந்­த­போது அவ­ரின் மாறு­பட்ட நட­வ­டிக்­கை­க­ளைக் கண்டு சந்­தே­கித்து மதி­யி­றுக்க மதிப்­பீட்­டிற்கு அழைத்­துச் சென்­றார்.

மதி­யி­றுக்­கக் குறை­பாடு உறுதி­செய்­யப்­பட்­டதை அறிந்த பெற்­றோர், மன­மு­டைந்து போனார்­கள்.

"எங்­கள் கிருஷ்­ணா­வுக்கு மதி­யி­றுக்­கக் குறை­பாடு உள்­ளது என்­பதை ஏற்க மனம் மறுத்­தது. இருந்­த­போ­தி­லும் பேச்­சுத்­தி­றன் சிகிச்சை, இசை மூலம் சிகிச்சை, இயக்­கத்­தி­றன் சிகிச்சை போன்ற சிகிச்சை முறை­களை மக­னுக்­குக் குறை­பாடு கண்­ட­றி­யப்­பட்ட முதல் மாதத்­திலிருந்தே தொடங்­கி­விட்­டோம். அது எங்­க­ளுக்­குப் பெரி­தும் பல­ன­ளித்­தது," என்று கூறி­னார்.

மகன் எட்டு வய­தாக இருந்­த­போது இவர்­க­ளுக்கு மகள் பிறந்­தார். மற்­றப் பிள்­ளை­கள் போல் ஏன் தன் அண்­ணன் இல்லை என்ற மக­ளின் ஐயப்­பாட்டை அந்­தச் சிறு வய­தில் புரி­ய­வைக்­கப் பெற்­றோருக்­குச் சிர­ம­மா­க­வும் இருந்­தது. எட்டு ஆண்­டு­க­ளாக தனக்­கென இருந்த இடத்தை பங்­கு­போட வந்த தங்கை மீது பொறா­மைப்­பட்ட மக­னுக்கு நிலை­மை­யைப் புரி­ய­வைப்­ப­தும் சவா­லாக இருந்­தது.

"ஆரம்­பத்­தில் குடும்­பத்­தார் ஆத­ர­வு­டன் நானும் என் மனை­வி­யும் வேலைக்­குச் சென்­று­கொண்டே பிள்­ளை­களை ஒரு­வாறு சமா­ளித்து வந்­தோம். நாள­டை­வில் மகன் பரு­வ­ம­டைந்த வேளை­யில் அவ­ரு­டைய குணா­தி­சய மாற்­றங்­களை எதிர்­கொள்­வது மிக­வும் கடி­ன­மாக இருந்­தது. அவ­ருக்­குக் கூடு­தல் கவ­னம் தேவைப்­ப­டு­வதை உணர்ந்து எங்­களில் இரு­வ­ரில் நான் பணி வில­கு­வதே மக­னைப் பரா­ம­ரிக்க ஏது­வாக இருக்­கும் என்று முடிவு செய்­தோம்," என்­றார்.

இருப்­பி­னும் தங்­கள் மகன் துவண்­டு­போ­கா­மல் வாழப் பல பயிற்­சி­களை அளித்து வரு­கி­றார். திறன்­பேசி செய­லி­க­ளைப் பயன்­படுத்­திச் சுய­மா­கப் பய­ணம் மேற்­கொள்­ள­வும் வேண்­டிய உணவை விநி­யோ­கச் சேவை மூலம் பெற்­றுக்­கொள்­ள­வும் அவர் கற்­றுக்­கொடுத்­தி­ருக்­கி­றார். யாரை­யும் சார்ந்­தி­ரா­மல் தனித்து வாழும் திறன்­களை மக­னி­டம் வளர்த்து வரு­கி­றார் திரு ராஜேந்­தி­ரன்.

'சர்­விங் பீபிள் வித் டிஸ்­ஸெ­பி­லிட்டி' என்­னும் உடற்­குறை உள்­ள­வர்­க­ளுக்­கான சேவை அமைப்­பில் தற்­ச­ம­யம் பயிற்சி பெற்­று­வ­ரும் இவ­ரு­டைய மகன் கிருஷ்ணா, 23, இன்­னும் சில மாதங்­களில் ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தில் பொட்­ட­ல­மி­டும் பணி­யில் சேர­வி­ருக்­கி­றார்.

"என் மக­னி­டம் தன்­னம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது. என் பணி­யை­யும் தனிப்­பட்ட வளர்ச்­சி­யை­யும் துறந்­த­தன் பய­னாக இவற்றை என்­னால் காண முடி­கிறது. என் மக­னின் நல்­வாழ்­வு­தான் என் வாழ்க்­கை­வின் அடை­யா­ளம்," என்று பெரு­மி­தத்­து­டன் கூறி­னார் இந்த முன்­மா­தி­ரித் தந்தை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!