என் மகனால் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறேன்

தமக்­கென இருந்த வாழ்க்கை இலட்­சி­யங்­க­ளைத் தம் மக­னுக்­காக விலக்கி வைத்­தார் ஆனந்த் லால், 52.

நிறு­வ­னம் ஒன்­றின் சுகா­தா­ரப் பிரி­வில் திட்ட நிர்­வா­கி­யாக தமது பய­ணத்­தைத் தொடங்­கிய அவர், 'அப்­ராக்­ஸியா', 'டிஸ்ப்­ராக்­ஸியா' ஆகிய நரம்­பி­யல் தொடர்­பான கற்­றல் குறை­பா­டு­கள் உள்ள மக­னுக்கு அதிக நேரத்தை ஒதுக்­கிட, தம் வேலையை விட்­டார்.

தம் பணி­யில் முன்­னே­றிச் சாதிக்க வேண்­டு­மென விரும்­பிய ஆனந்த், மகன் ஐந்து வய­தாக இருந்­த­போது அவ­ரின் குறை­பாடு­க­ளைப் பற்றி அறிந்­து­கொண்­டார். அப்­போது அவ­ருக்­கும் அவ­ரின் மனை­விக்­கும் இடியே விழுந்­த­து­போல் இருந்­தது.

மகன் க்ரி­ஷுக்­குக் கற்­ற­லின்­போது பல சிக்­கல்­கள் ஏற்­பட்­ட­போது அவ­ருக்­குத் தகுந்த உத­வியை வழங்கி இன்­று­வரை முடிந்த அள­வுக்கு வழி­காட்­டி­களாக இருக்­கின்­ற­னர் அவர்­கள்.

தம் 13வது வயது முதல் 'மைண்ட்ஸ் டௌனர் கார்­டன்' பள்­ளிக்­குச் செல்­லும் 16 வயது க்ரிஷ், சக மாண­வர்­க­ளோ­டும் ஆசி­ரி­யர்­க­ளோ­டும் குடும்ப உறுப்­பி­னர்­க­ளோ­டும் பணி­வன்­பு­டன் பழ­கு­வ­தற்­குச் சில முக்­கிய மனி­தர்­க­ளைச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார், ஆனந்த்.

இயக்­கத்­தி­றன் சிகிச்­சை­யாளர், உடற்­ப­யிற்சி சிகிச்­சை­யாளர், பேச்­சுத்­தி­றன் சிகிச்­சை­யா­ளர், பாடங்­கள் எழு­து­வ­தற்கு உத­வு­ப­வர், இல்­லப் பணிப்­பெண் என பல­ரி­ட­மி­ருந்து க்ரிஷ் ஆத­ர­வும் உத­வி­யும் பெற்று வரு­கி­றார்.

க்ரிஷ் போன்­ற­வர்­க­ளுக்கு நேரத்­தைத் திட்­ட­மிட உதவ வேண்­டும் என்று கூறிய ஆனந்த், அன்­றா­டப் பணி­க­ளைப் பழக்­கப்­படுத்­திக்­கொண்­டால் அவர்­க­ளின் தின­சரி வாழ்க்கை மேலும் சுமு­க­மாக அமை­யும் என்று நம்­பு­கி­றார்.

தற்­போது 'மைண்ட்ஸ் டௌனர் கார்­டன்' பள்­ளி­யில் ஆனந்த் நீச்­சல் பயிற்­று­விப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரி­வ­து­டன் செயலி விற்­ப­னை­யிலும் ஈடு­பட்டு வரு­கி­றார்.

"பல்­வேறு குறை­பா­டு­கள் உள்ள பிள்­ளை­க­ளுக்கு நீச்­சல் கற்­றுக்­கொ­டுக்­கும்­போது எனக்­குக் கிடைக்­கும் இன்­பத்தை வார்த்­தை­க­ளால் சொல்ல முடி­யாது.

"என் மக­னைப் போல சவால்­களைச் சந்­திக்­கும் இப்­பிள்­ளை­கள், என்­னி­டம் காட்­டும் அன்பு வேறு எங்­குமே கிடைக்­கா­தது," என்­றார் ஆனந்த்.

மக­னின் தேவை­க­ளுக்கு ஏற்­பத் தம் சொந்த வாழ்க்­கை­யைத் திட்­ட­மிட்­டுள்ள ஆனந்த், தம் இலக்­கு­களை வெகு­கா­லத்­திற்­குத் தள்­ளிப்­போட்­டி­ருந்­தா­லும் இன்று அர்த்­த­முள்ள வாழ்க்­கையை வாழ்­வ­தா­கக் கூறு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!