தமிழ் மெதடிஸ்ட் பள்ளி இருந்த இடத்தில் கார் காட்சியகம்

தமிழ் மெதடிஸ்ட் பள்ளி இருந்த இடத்தில் கார் காட்சியகம்

2 mins read
e2f80e73-a824-4457-aed4-47822343aa19
தமிழ் மெதடிஸ்ட் பள்ளி தொடங்கப்பட்ட இடத்தில் தற்போதுள்ள டென் ஸ்குவேர் கட்டடம் கார் விற்பனை இயந்திரமாக மாற்றப் பட்டுள்ளது.படம்: திமத்தி டேவிட் -
multi-img1 of 2

அருணா கந்­த­சாமி

ஒன்­பது தமிழ் மாண­வர்­க­ளோடு 1887ஆம் ஆண்டு தொடங்­கிய தமிழ் மெத­டிஸ்ட் பள்ளி இருந்த நிலத்­தில் இன்று பல­மா­டிக் கட்­ட­ட­மான டென் ஸ்கு­வேர் (Ten Square) என்று அழைக்­கப்­படும் வித்­தி­யா­ச­மான கார்­ காட்­சி­ய­கம் கட்­டப்­பட்­டுள்­ளது.

1 ஷார்ட் ஸ்தி­ரீட்­டில் தொடங்­கப்­பட்ட அந்­தப் பள்­ளி­யில்­தான் சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­த­லில் தமிழ் கற்­றுத்­த­ரப்­பட்­டது என்­பது தனி வர­லாறு.

பல பெயர் மற்­றும் இட­மாற்­றங் களுக்­குப் பின்­னர் இன்று மெத­டிஸ்ட் பெண்­கள் பள்ளி என்று அழைக்­கப்­படும் அந்­தப் பள்ளி, 11 பிளாக்­மோர் டிரை­வில் இருக்­கிறது.

பழைய பள்ளி இருந்த இடத்­தில் தற்­போது சோனி நிறு­வ­னத்­தின் 'கிரான் டூரிஸ்மோ 7' (Gran Turismo 7) விளை­யாட்டை விளம்­ப­ரப்­ப­டுத்த, கார் விற்­பனை இயந்­தி­ர­மாக கட்­ட­டம் மாற்­றப்­பட்­டுள்­ளது. சோனி நிறு­வ­னத்­தின் பிளேஸ்­டே­ஷன் விளை­யாட்­டு­க­ளின் ஆர்­வ­லர்­கள் 'கிரான் டூரிஸ்மோ 7' கார்ப் பந்­தய விளை­யாட்டு பற்றி நன்கு அறி­வார்­கள்.

ஆள் நட­மாட்­ட­மில்­லாத கட்­ட­டத்­தில் விரும்­பும் வாக­னத்தை வாங்­க­லாம். மேலா­ளர், பணி­யா­ளர் தொந்­த­ர­வின்றி எவ்­வ­ளவு நேர­மா­னா­லும் அங்கு நின்று வானங்­க­ளைக் கண்டு ரசிக்­க­லாம்.

கட்­ட­டத்­தின் வெளியே பொருத்­தப்­பட்­டி­ருக்­கும் சிங்­கப்­பூ­ரின் முதல் முப்­ப­ரி­மா­ணத் (3டி) திரை­யில் மூலம் வாக­னத்­தில் ஏறா­ம­லேயே அதைச் சுற்­றிப்­பார்க்­க­லாம்.

பிடித்த காரை தேர்ந்­தெ­டுத்த பின்­னர், விற்­பனை இயந்­தி­ரத்­தி­லி­ருந்து மிட்­டாய் வாங்­கு­வது போலக் காரை கட்­ட­டம் வெளியே அனுப்­பும்.

சிங்­கப்­பூ­ரின் நிலப் பற்­றாக்­குறை சவாலை கருத்­தில் கொண்டு தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யு­ட­னும் புத்­தாக்­கச் சிந்­த­னை­யோ­டும் குறு­கிய நிலப்­ப­கு­தி­யில் 20 மாடி உய­ரத்­துக்கு கார்­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

தெரி­வு­க­ளுக்­குப் பஞ்­ச­மில்­லா­மல் காட்­சி­ய­கத்­தில் மஸ்டா RX-8, நிசான் 180SX, மஸ்டா RX-7, ஜிடி7 (GT7), போர்ஷ் பாக்ஸ்­டர் (Porsche Boxster) மற்­றும் பென்ட்லி கான்­டி­னென்­டல் போன்ற உயர்­த­ரக் கார்­களும் வைக்­கப்­பட்­டுள்ளன.ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்­தக் கட்­ட­டம் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட உள்­ளது. அதன்­பி­றகு, இக்­கட்­ட­டத்தை மக்­கள் சென்று பார்­வை­யி­ட­லாம்.