பாரம்­ப­ரி­ய­ம் மாறாத சேவை

பாரம்­ப­ரி­ய­ம் மாறாத சேவை

2 mins read
c882db22-6f94-493a-9a74-bef19a4f4167
கடந்த 45 ஆண்டுகளாக முடிதிருத்துநராக பணிபுரிந்து வரும் திரு சுப்பராமன் ஆ ராமைய்யா. -
multi-img1 of 2

கடந்த 45 ஆண்­டு­க­ளாக முடி திருத்­து­ந­ராக பணி ­புரிந்து வரும் திரு சுப்­ப­ரா­மன் ஆ. ராமைய்யா, 81, நவீன வடி­வ­மைப்­பு­டன் கடை­கள் வந்­துள்­ள­போ­தி­லும், காலங்­கா­ல­மாக செயல்­பட்­டு­வ­ரும் பாரம்­ப­ரிய கடை­களை நாடு­வோ­ரும் உள்­ள­னர் என்று கூறி­னார்.

பெரும்­பா­லான வாடிக்கை யாளர்­கள் நவீ­ன­பாணி கடை களுக்­குச் சென்­றா­லும், இன்­றும் பலர் பழைய கடை­க­ளுக்கு வந்த வண்­ணம் உள்­ள­னர் என கூறி­னார், தற்­போது 'கோல்­டன் கிங்ஸ்' முடி ­தி­ருத்­த­கத்­தில் பணி­பு­ரிந்து வரும் திரு சுப்­ப ரா­மன்.

இது போன்ற கடை­களில் வழங்­கப்­படும் முடி ­தி­ருத்­தச் சேவை­கள் திருப்தி அளிப்­ப­தா­லும், தாம் எளிய சிகை அலங்­கார பாணியை விரும்­பு­ வ­தா­லும் தொடர்ந்து இத்­ தகைய கடைகளுக்­குச் செல்­வ­தா­கக் கூறி­னார் திரு குப்­பு­சாமி கண்­ணன், 53.

புக்­கிட் தீமா, ஹாலந்து வில்­லேஜ் வட்­டா­ரங்­களில் முடி­திருத்­த­கங்­களை நடத்­திய திரு சுப்­ப­ரா­மன், கடந்த 15 ஆண்டு­ க­ளாக தேக்­கா­வில் உள்ள வெவ்­வேறு கடை­களில் பணி­பு­ரிந்து வரு­கி­றார். இளை­யர்­கள் அதி­கம் இத்­து­றை­யில் பணி­யாற்ற முன்­வர வேண்­டும் என்­பது இவ­ரது விருப்­பம்.

"நீண்ட நேரம் வேலை செய்­யும் தொழில் என்­ப­தால் இளை­யர்­கள் இத்­து­றை­யில் சேரத் தயங்­கு­கின்­ற­னர். ஆனால், இத்­து­றை­யில் நல்ல வரு­மா­னம் ஈட்­டும் வாய்ப்­புள்­ளதை அவர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்," என்­றார் திரு சுப்­ப­ரா­மன்.

அன்­றும் இன்­றும் லிட்­டில் இந்­தி­யா­வில் அமைந்­துள்ள முடி ­தி­ருத்த நிலை­யங்­களில் மாறா­மல் இருக்­கிறது சவ­ரக்­கத்­தி­யின் பயன்பாடு. இந்த முடி தி­ருத்­த­கங்­களில் சிகை அலங்­கா­ரத்­தோடு மீசை, தாடி அலங்­கா­ர­மும் செய்­யப்­பட்டு வரு­கிறது.

பலர் மின்­சார சவ­ரத்­துக்கு மாறி­விட்­ட­போ­தும், முடி தி­ருத்­தும் சேவையை வழங்­கும் இந்­தி­யர்­கள் அன்று முதல் இன்று வரை சவ­ர­க்கத்­தி­யைப் பயன்­படுத்தி வரு­கின்­ற­னர்.