புதுமை பழகிய முடிதிருத்த சேவை

புதுமை பழகிய முடிதிருத்த சேவை

5 mins read
0925a35a-3ee0-4fb7-8b44-d4d4770d2e40
'தி மெட்­ராஸ் பார்­பர்ஸ்' முடி திருத்தகத்தின் நிறுவனர் திரு கோதண்டராமன் சேகர், 63. படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 2

லிட்டில் இந்தியா வட்டாரம் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. இங்கு வந்துசெல்லும் மக்களுக்குப் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வசதிகளும் மாற்றங்களும் என்னென்ன என்று அவ்வப்போது படம்பிடித்து வாசகர்களுக்குத் தரும் பகுதி இது.

யுகேஷ் கண்­ணன்

மக்­க­ளுக்கு அத்­தி­யா­வ­சி­ய­மா­கத் தேவைப்­படும் துறை­களில் ஒன்­றாக விளங்­கும் முடி தி­ருத்­தும் துறை காலம் உள்­ள­வரை நிலைத்­தி­ருக்­கும். முடி தி­ருத்­தம் என்­பது ஒரு­வ­ரின் தோற்­றத்­தையே மாற்­றக்­கூ­டி­யது.

லிட்­டில் இந்­தியா வீதி­க­ளில்­ பு­கழ்­பெற்ற நடி­கர்­க­ளின் புகைப் படங்­கள், தமிழ்ப் பாடல்­கள், அர­சி­யல், ஊர்ப் பேச்சு என்­றி­ருந்த முடி திருத்தகங்கள், இன்று வண்­ணச் சுவர்­கள், இனி­மை­யான மெல்­லிசை, சொகு­சான இருக்­கை­கள் என்று மாற்­றம் கண்­டுள்­ளன.

இன்று லிட்­டில் இந்­தி­யா­வில் 30க்கும் மேற்­பட்ட முடி ­தி­ருத்­த­கங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன.

அப்­பர் டிக்­சன் சாலை­யில் தமது மக­னின் ஆலோ­ச­னைப்­படி 'தி மெட்­ராஸ் பார்­பர்ஸ்' கடையை கடந்த ஆண்டு தொடங்­கி­னார் 63 வயது திரு கோதண்­ட­ரா­மன் சேகர்.

எண்­ணெய், எரி­வா­யுத் துறை­யில் 25 ஆண்­டு­க­ளாக பணி­பு­ரிந்த திரு சேகர், ஓய்­வு­பெற்ற பின்பு சொந்­தத் தொழில் தொடங்­கத் திட்­ட­மிட்­ட­போது, முடி­தி­ருத்­தும் சேவை­யைத் தொடங்கு­ மாறு அவரது மகன் ஊக்­கு­வித்­தார்.

வெளி­நா­டு­களில் உள்ள முடி ­திருத்த நிலை­யங்­க­ளின் பிர­பல அம்­சங்­களை தமது கடை­யில் அறி­மு­கப்­ ப­டுத்­தி­னார் திரு சேகர். அதே­ நேரத்­தில் நியா­ய­மான விலை­யில் தர­மான சேவையை வழங்க வேண்­டும் என்­றும் அவர் எண்­ணி­னார்.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தில் அவர் கடை­யைத் தொடங்­கி­ய­போது கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­க­ளால் பல சவால்­களை எதிர்­நோக்­கி­னார்.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து முடி திருத்­து­நர்­களை வேலைக்கு எடுப்­பது அவற்றில் ஒன்று. சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளி­டம் முடிதி­ருத்­தும் பணிக்கு அதிக மதிப்பு இல்­லா­த­தால், இத்­ துறை­யில் பணி­யாற்ற பல­ரும் விரும்­பு­வ­தில்லை என்­றார் திரு சேகர்.

பணி­யா­ளர்­கள் கிடைக்­கா­த­தால் பகு­தி­நேர ஊழி­யர் ஒரு­வ­ரு­டன் இவர் கடை­யைத் தொடங்­கி­னார்.

ஆனால், அது நிரந்­தரத் தீர்­வாக அமை­ய­வில்லை. மேலும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கால­கட்­டத்­தில், தேக்­கா­வில் மக்­கள் நட­மாட்­டம் குறை­வாக இருந்­த­தால், தொழில் மந்­த­மாக இருந்­தது.

விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்ட பின் தேக்­கா­வில் மக்­கள் நட­மாட்­டம் அதி­க­ரித்­தது. இருப்­பி­னும் கடை­யின் மாறு­பட்ட தோற்­றத்­தைப் பார்த்து, சிலர் சேவை­க் கட்­ட­ணம் அதி­க­மாக இருக்­கும் எனத் தயங்­கி­னர்.

சாதா­ரண முடி­தி­ருத்­தும் சேவை களுக்கு $8 கட்­ட­ணம் என்ற விளம்­ப­ரத்தை கண்­ணில்­படும்படி வெளி­யில் வைத்­த­பின்­னர் மெல்ல மெல்ல வாடிக்­கை­யா­ளர்­கள் வரத்­தொ­டங்­கி­னர்.

மலே­சியா, இந்­தியா போன்ற நாடு­ க­ளி­லி­ருந்து முடி திருத்­து­நர்­களை திரு சேகர் பணி­யில் அமர்த்­தி­னார்.

குறைந்த விலை­யில் நிறைந்த சேவையை வழங்­கு­வ­தாக வாடிக்­கை­யா­ளர்­கள் கரு­து­வ­தால் அவர்­கள் தொடர்ந்து தமது கடைக்கு வரு­வ­தாக திரு சேகர் கூறி­னார்.

தற்­போது இரண்டு வெளி­நாட்டு ஊழி­யர்­ தங்­குவிடு­தி­களில் கடை­களை நடத்தி வரும் இவர், புதி­தாக இரண்டு கிளை­க­ளை­யும் தொடங்­கி­யுள்­ளார்.

லிட்­டில் இந்­தி­யா­வில் மேற்­கத்­திய பாணி வடி­வ­மைப்­பி­லான மற்­றொரு முடி­தி­ருத்­தும் கடை, டன்­லப் ஸ்திரீட்டில் உள்ள 'எச்1 லூக்ஸ்'.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்­டம்­ப­ரில் தொடங்­கப்­பட்ட இக்கடை­யில் சாதா­ரண முடி­தி­ருத்­தும் சேவைக்கு கட்­ட­ணம் $8 முதல் $10 வரை­. மற்ற சிறப்­புச் சேவை ­க­ளுக்கு கட்­ட­ணம் மாறு­ப­டு­கிறது.

இத்­து­றை­யில் தமது முத­லா­ளிக்கு பெரி­தும் அனு­ப­வம் இல்­லாத போதி­லும், கடை­யின் தோற்­றத்­தைச் சிறப்­பாக வடி­வ­மைத்­துள்­ளார் என்று தலைமை முடி­திருத்­து ­நர் திரு குண­சே­க­ரன், 42, குறிப்பிட்டார்.

வழக்­க­மான வாடிக்­கை­யா­ளர்­களில் சிலர் வாரத்­திற்கு ஒரு முறை, அல்­லது மாதத்­திற்கு இரு முறை முடி ­தி­ருத்த வரு­வார்­கள் என்­றார் திரு குண­சே­க­ரன்.

தங்­கள் வாடிக்­கை­யா­ளர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் மலே­சி­யர்­கள் என்ற அவர், சிங்­கப்­பூர்-மலே­சியா எல்லை திறக்­கப்­பட்­ட­வு­டன் வியா­பா­ரம் சற்று மந்­த­ம­டைந்­துள்­ள­தா­கக் கூறி­னார்.

லிட்­டில் இந்­தி­யா­வில் தற்­போது ஏழு கிளை­க­ளு­டன் செயல்­பட்டு வரும் 'ஜெய் & ஜெய்' அழகு நிலை­யத்­தின் மேலா­ளர் திரு சுந்­த­ரம் ஜெய­ராம், 38, தமது கடை­ க­ளுக்கு பெரும்­பா­லும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வந்து எளிய முடி தி­ருத்த பாணி­யைக் கோரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார். எனி­னும், பல இளை­யர்­கள் நுணுக்­க­மான சிகை அலங்­கார பாணியை விரும்பி கேட்­கும் போக்கு அதி­க­ரித்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

இத்­த­கைய கடை­களில் பணி­பு­ரி­ப­வர்­கள் இந்­தி­யர்­களின் முடி­யைப் ­பற்றி நன்கு தெரிந்து வைத்­தி­ருப்­ப­தால், தம்­மைப் போன்ற இளை­யர்­கள் விரும்­பும் 'ஃபேட்', 'அண்­டர்க்­கட்', 'குயிஃப்', 'போம்­ ப­டோர்' போன்ற சிகை அலங்­கா­ரச் சேவை­களை நன்கு வழங்­கு­கின்­ற­னர் என கூறி­னார் சிகை அலங்­கா­ரம் செய்­து­கொள்­வ­தில் மிகுந்த விருப்­பம் கொண்­டுள்ள 21 வயது அமீர் சோஹைல்.

இக்­க­டை­களில் அவர் விரும்­பும் சேவை­க­ளுக்­கான கட்­ட­ணங்­கள் கட்­டுப்­ப­டி­யாக உள்­ள­தோடு கடை­யின் சூழல் வச­தி­யா­ன­தா­க­வும் இருப்­ப­தால் தொடர்ந்து அவற்­றின் சேவை­களை நாடு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

பாரம்­ப­ரிய சிகை அலங்­கார கடை­களில் முடி­தி­ருத்­து­நர்­கள் வயது முதிர்ந்­த­வர்­க­ளாக இருப்­ப­தால் இளை­யர்­கள் விரும்­பும் சேவை­களை வழங்க சிர­மப்­ப­டு­வ­தா­க­வும் பல நேரங்­களில் அத்­த­கைய முடி ­தி­ருத்­தப் பாணி­களை வழங்­க தேவை­யான கரு­வி­கள் அவர்­க­ளது கடை­களில் இருப்­பதில்­லை­ என்­றும் அவர் கூறி­னார்.

எட்டு ஆண்­டு­க­ளாக ரேஸ் கோர்ஸ் சாலை­யில் இயங்­கும் 'தி கோல்­டன் ரூல்' முடி­தி­ருத்­த­கம், மேற்­கத்­திய இசைக்­கு­ழுக்­க­ளின் சுவ­ரொட்­டி­கள், வாகன எண் பல­கை­கள், ஸ்கேட்­போர்­டு­கள், மிதி­வண்­டி­கள் என இன்­றைய ரச­னைக்­கேற்ப 'பழ­மை­யில் புது­மை­யோடு' வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­க­டை­யில் முடி தி­ருத்தச் சேவை­க­ளின் தொடக்­கக் கட்­ட­ணம் $38. இச்­சே­வை­யில் முடி திருத்­தத்­து­டன் இத­மா­ன சூட்­டி­லான துண்­டு­டன் தசைத் தளர்த்தலும் செய்­யப்­ப­டு­கிறது.

கடை தொடங்­கிய வேளை­யில் வாடிக்­கை­யா­ள­ராக இக்­க­டைக்கு வந்த 29 வயது சிவ­குரு ராஜாக்­கண்ணுக்கு கடை­யின் சூழல்­ பிடித்­துப் போனது. அதனால் இங்கு தனது வேலைப் பயிற்­சி­யைத் தொடங்­கி­னார். தலை­முடி, ஒப்­ப­னைப் பொருள்களில் ஆர்­வம் கொண்­டி­ருந்த இவ­ருக்கு இப்­ப­ணி­யின் மீது ஆர்­வம் ஏற்­பட்­ட­தால், அதில் முழு நேர­மாக இணைந்­தார்.

எட்டு ஆண்­டுப் பணி­யில், வாடிக்­கை­யா­ளர் சேவை­யில் தாம் பெற்ற மாறு­பட்ட அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்துகொண்ட திரு சிவ­குரு, தலை­யின் வடி­வத்­தை­யும் தலை­முடி வகை­யை­யும் கண்­ட­றிந்து அதற்கு ஏற்ற முடி ­தி­ருத்த பாணி­யைக் கண்­ட­றி­வது சுல­ப­மல்ல என்­றார்.

வாடிக்­கை­யா­ளர்­களில் பலர் விரும்­பும் 'ஃபேட்' எனப்­படும் 'சிறப்பு சிகை அலங்­கா­ரச் சேவையை வழங்க சிறப்­புக் கரு­வி­கள் தேவைப்­ப­டு­கின்­றன. அத­னு­டன் அதைத் தர­மா­கச் செய்து முடிக்க 45 நிமி­டங்­க­ளி­லி­ருந்து ஒரு மணி நேரம் வரை எடுக்­கும் என்று அவர் சொன்னார்.

மேற்­கத்­திய நட்­சத்­தி­ரங்­கள், பிர­பல காற்­பந்­தாட்ட வீரர்­கள் ஆகி­யோ­ரின் சிகை அலங்­கா­ரப் பாணியை பின்­பற்ற வாடிக்­கை­யா­ளர்­கள் விரும்­பு­வ­தால், அது போன்ற நுணுக்­க­மான சேவை­களை வழங்க கூடு­தல் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ படு­வ­தா­கத் திரு சிவ­குரு கூறினார்.