ஓடி ஓடி உழைத்ததால் தேடிவந்த விருதுகள்

மக்­க­ளு­டன் பேசு­வ­தி­லும் பழ­கு­வ­தி­லும் ஆர்­வம் கொண்­ட­தால் அவர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் பணி­பு­ரிய எண்­ணிய திரு­மதி சீத்தா சின்­னத்­தம்பி, 53, தாதி­மைத் துறை­யைத் தேந்­தெ­டுத்­தார்.

தேசிய புற்­று­நோய் நிலை­யத்­தில் நோயாளி பரா­ம­ரிப்பு உத­வி­யா­ள­ராக பணி­பு­ரிந்­த­போது தம் பணி­யில் சிறந்து விளங்­கி­ய­தால் அந்த நிலை­யம் 'பிளேஸ் அண்ட் டிரெய்ன்' என்­னும் பயிற்­சித் திட்­டத்­தின்­கீழ் தாதி­மைப் படிப்பை மேற்­கொள்ள இவ­ருக்கு நிதி ஆத­ரவு தந்­தது. தொடக்­கத்­தில் இத்­து­றை­யைப் பற்றி பெரி­தாக எது­வும் தெரி­யாத நிலை­யில் தமது மேலா­ளர்­கள், மருத்­து­வர்­கள் ஆகி­யோ­ரின் உத­வி­யு­டன் 2008ஆம் ஆண்டு தொழில்­நுட்­பக் கல்­விக்கழ­கத்­தில் தாதிமைக் கல்வி பயின்­றார். தற்போது, தேசிய புற்­று­நோய் நிலை­யத்­தில் நட­மாட்ட நோயாளி (ஆம்­பு­லேட்­டரி) பரா­ம­ரிப்­புப் பிரி­வில் முதன்மைத் தாதி­யாக சேவை­யாற்­று­கி­றார் திரு­மதி சீத்தா.

நோயா­ளி­க­ளுக்கு தரம்­வாய்ந்த பரா­

ம­ரிப்­புச் சேவை அளிக்க வேண்­டும் என்­ப­தற்­காக உழைக்­கும் இவர், தாதி­யர் விரை­வா­க­வும் சிறப்­பா­க­வும் பணி­க­ளைச் செய்­து­மு­டிக்க புதிய உத­விக்­கு­றிப்­பு­களை சக தாதி­ய­ருக்கு அறி­மு­கம் செய்­துள்­ளார் உதா­ர­ண­மாக, எந்த நோயா­ளிக்கு முத­லில் சோதனை செய்ய வேண்­டும், எந்த நோயா­ளியை எந்த இருக்­கை­யில் கண்­டு­பி­டிக்­க­லாம், ஒவ்­வொரு நோயா­ளி­யின் கீமோ சிகிச்சையும் எந்த நேரத்­தில் நடக்­க­வுள்­ளது போன்ற தக­வல்­க­ளைச் சேக­ரித்து சிறிய தாளில் எழு­தும் முறை­யைத் தொடங்­கி­னார். இதனால் நோயா­ளி­க­ளின் தேவை­களை விரை­வா­கப் புரிந்­து­கொண்டு மருத்­துவர்­ களால் உட­ன­டி­யாக உத­வவும் முடி­கிறது என்­கி­றார் சீத்தா.

வேலைக்கு அப்­பால் புற்­று­நோய்ச் சங்­கத்­தில் அவ்­வப்­போது தொண்­டூ­ழி­யம் செய்­யும் சீத்தா, புற்­று­நோய் பற்­றிய விழிப்­பு­ணர்வை மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்த அச்­சங்­கத்­தின் ஒரு சில நிகழ்ச்­சி­க­ளி­லும் கலந்­து­கொள்­வார்.

"100 நோயா­ளி­களை மகிழ்­விக்க முடி­யா­விட்­டா­லும், ஒரு நோயா­ளியின் முகத்­தி­லா­வது புன்­ன­கை பூக்க நான் கார­ண­மாக இருந்­தால் எல்லையில்லா ஆனந்­த­

ம­டை­வேன்," என்கிறார் இவர்.

நோயா­ளி­கள், நோயா­ளி­களை பரா

­ம­ரிப்­ப­வர்­கள் ஆகி­யோ­ரின் மனங்­களை வென்­றுள்ள சீத்தா, 2017ஆம் ஆண்டு சிங்­கப்­பூர் சுகா­தார தரச் சேவைக்­கான வெள்ளி விருதுடன் 2021ஆம் ஆண்டு தேசிய புற்­று­நோய் நிலை­யத்­தின் சிறந்த முன்­மா­திரி விரு­தை­யும் பெற்­றார். புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட 'என்­ரோல்ட்' தாதி­மைப் பிரி­வில் சிறந்த தாதி­மைக்­கான விரு­தை­யும் இவர் கடந்த வாரம் பெற்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!