பிறப்பு, இறப்பு, இரண்டுக்கும் நடுவே நோயிடம் சிக்கும் மனிதன்

கனவு நிறை­வே­றி­யது: கமலா வேலு

சிறு வய­தி­லி­ருந்தே முடிந்­த­ள­வுக்கு ஏரா­ள­மான மக்­க­ளுக்கு உதவ வேண்­டும் என்ற கனவை நன­வாக்க விரும்­பி­னார் கமலா வேலு, 52.

சிங்­கப்­பூ­ரின் அந்­தக் கால கம்­பத்­தில் தமது பிள்­ளைப் பரு­வம் அமைந்­த­தால் ஒரு­வ­ருக்கு மற்­றொ­ரு­வர் கேட்­கா­ம­லேயே உத­வும் வழக்­கத்­தைப் பார்த்து வளர்ந்­தார் கமலா. இதனை தமது சொந்த வாழ்க்­கை­யி­லும் பின்­பற்­றி­ய­தால் இவ­ரின் தந்தை இவரை தாதி­மைத் துறை­யில் ஈடு­பட உற்­சா­க­மூட்­டி­னார். இவ்­வாறு தொடங்­கி­ய­து­தான் கம­லா­வின் தாதி­மைக் கல்வி.

1989ஆம் ஆண்டு சுகா­தார அமைச்­சின்­கீழ் தாதி­மைப் பள்­ளி­யில் சேர்ந்து, மூன்­றாண்டு படித்த பிறகு அலெக்­சாண்ட்ரா மருத்­து­வ­ம­னை­யின் குழந்­தை­க­ளுக்­கான அவ­சரநிலைப் பிரி­வில் (ரெஜிஸ்­டர்ட்) தாதி­மைப் பணி­யைத் தொடங்­கி­னார் கமலா. இவ­ரது தாதிமைப் பய­ணத்­தில் சந்­தித்த பல அனு­ப­வங்­களில் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மருத்­து­வர்­க­ளை­யும் தாதி­ய­ரை­யும் அழைத்­துக்­கொண்டு தமிழ்­நாட்­டின் திரு­வண்­ணா­ம­லைக்கு மருத்­துவ உத­விப் பய­ணம் மேற்­கொண்­டது குறிப்­பி­டத்­தக்­கது. கம­லா­வின் சுய­மு­யற்­சி­யால் நடை­பெற்ற இப்­ப­ய­ணத்­தில் திரு­வண்­ணா­மலை மருத்­து­வக் குழு­வும் சிங்­கப்­பூர் மருத்­து­வக் குழு­வும் ஒன்­றி­ணைந்து அங்­குள்ள மக்­க­ளுக்கு இல­வச கண் சிகிச்சை செய்­த­னர்.

அந்த மருத்­துவ முகா­மில் அளிக்­கப்­பட்ட கண் சிகிச்­சைக்­குப் பிறகு தங்­க­ளால் தெளி­வாகப் பார்க்­க­மு­டி­கின்­றது என அப்­போது பல­ரும் குறுந்­த­க­வல் அனுப்­பி­னர். இதை அறிந்த கம­லா­விற்கு, தமது சின்­னஞ்­சிறு முயற்­சி­க­ளால் சமு­தா­யத்­திற்கு பல­ன­ளிக்க முடி­கின்­றது என்று நிம்­ம­தி­ய­டைந்­தார். அதன் கார­ண­மாக, இப்­ப­ய­ணத்தை ஒவ்­வோர் ஆண்­டும் மேற்­கொள்ள வேண்­டும் என்ற ஆசை இவ­ருக்­குள் வேரூன்­றி­யது.

தற்­போது இங் டெங் ஃபோங் மருத்­து­வ

­ம­னை அவ­சரநிலைப் பிரிவு தாதிமை மேலாளராகப் பணி­பு­ரி­யும் கமலா, தமது 30 ஆண்டு அனு­ப­வத்­தில் பிறப்பு, இறப்பு, பிறப்­புக்­கும் இறப்­புக்­கும் நடுவே நோய்­க­ளுக்கு ஆளா­கும் மனி­தர்­கள் என பல்­வேறு அம்­சங்­க­ளி­லும் தாதி­மைத் துறைக்கு இருக்­கும் முக்­கி­யத்­து­வத்தை அறிந்த கமலா, இன்­று­வரை அச்­சே­வை­யில் திறம்­பட ஈடு­பட்டு வரு­கி­றார்.

மிதமிஞ்சிய உழைப்பு: பிர­வீன் கோர்

கடந்த 20 ஆண்­டு­க­ளாக தாதி­மைத்­து­றை­யில் ஈடு­பட்டு வரும் பிர­வீன் கோர், 40, தற்­போது நீரி­ழிவு நோய்க்­கான கல்­வி­யா­ள­ரா­க­வும் தாதி­ய­ருக்­கான வழி­காட்­டி­யா­க­வும் இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­ம­னை­யின் நீரி­ழிவு, உட்­சு­ரப்­பி­யல் மருத்­து­வப் பிரி­வில் பணி­யாற்­று­கி­றார்.

நன்­யாங் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தாதி­மைப் பட்­ட­யப்­ப­டிப்­பின்­கீழ் நீரி­ழிவு நோய்க் கட்­டு­பாடு பற்றி கற்­றுக்­கொண்ட பிர­வீன், கிரிஃபித் பல்­க­லைக்­க­ழக சுகா­தார சேவை பரா­ம­ரிப்­பில் முது­க­லைப் பட்­டம் பெற்­றார். மக்­க­ளுக்கு சேவை­பு­ரி­வ­தில் தீவிர ஈடு­பாடு கொண்­டி­ருக்­கும் இவர், தாதி­மைத் துறை வழி­யாக நோயா­ளி­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து அவர்­க­ளின் துய­ரங்­க­ளைக் குறைக்க தன்­னால் இயன்ற அளவு முயற்­சிக்­கி­றார்.

கொவிட்-19 கால­கட்­டத்­தின்­போது சமூகப் பரா­ம­ரிப்பு சேவைக் குழு ஒன்­றில் சேர்ந்த பிர­வீன், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் பணி­யில் ஈடு­பட்­டார்.

"சமூகப் பரா­ம­ரிப்பு சேவை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, நாட்டை மேம்­ப­டுத்­து­வ­தில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் பங்­க­ளிப்பை நேரில் கண்­டேன்," என்­றார் இவர்.

கொவிட்-19 காலத்­தில் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­போது அதைச் சமா­ளிக்க தாதி­யர் தங்­க­ளின் சக்­திக்கு மீறி உழைத்­த­தா­க­வும் பிர­வீன் குறிப்­பிட்­டார்.

தொழில்­நுட்­பம் அவ­சி­யம்:

சுபா­ஷினி அங்குசாமி

தாதி­மைத் துறை­யில் தனிப்­பட்ட முறை­யி­லும் தொழில் ரீதி­யா­க­வும் வளர முடி­யும் என்று நம்­பி­ய­தால் தாதி­யாக வேண்­டும் என்று தீர்­மா­னித்­தார் சுபா­ஷினி அங்­கு­சாமி, 43.

இந்­தி­யா­வில் தாதி­மைப் படிப்பை மேற்­கொண்ட இவர், சிங்­கப்­பூ­ரில் தாதி­மைக் கல்­வி­யில் முது­

க­லைப் பட்­டத்­தைப் பெற்­றார். தமது பணி­யில் கண்­ணும் கருத்­து­மாக இருந்த சுபா­ஷி­னிக்கு இத்­தா­லி­யின் வெரொ­னா­விற்கு செல்­லும் வாய்ப்பை இங் டெங் ஃபோங் மருத்­து­வ­மனை அளித்­தி­ருந்­தது.

அவர் அங்கு 'எபிக்' என்னும் மென்பொருளைக் கற்றுகொள்ள 2013, 2017ஆம் ஆண்டுகளில் சென்றார். இந்த மென்பொருளைப் பயன்படுத்தும்போது தாதியராலும் மருத்துவர்களாலும் ஒவ்வொரு நோயாளியின் அன்றாடத் தேவைகளையும் அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ள முடிகின்றது. நோயாளிகளின் மருத்துவக் கவனிப்புத் தகவல்களைச் சேகரித்து தரப்படுத்தும் இம்மென்பொருளின் அவசியத்தைப் புரிந்துகொண்டதால், சிங்கப்பூர் திரும்பிய பின்னர் தமது மருத்துவமனையிலுள்ள மற்ற தாதியருக்கும் அதனைக் கற்றுத்தந்தார் சுபாஷினி.

சிங்கப்பூரிலேயே இம்மென்பொருளைப் பயன்படுத்தும் முதல் மருத்துவமனையாக இங் டெங் ஃபோங் அமைந்தது. இன்று நாடு முழுவதும் 'எபிக்' மென்பொருளை தாதியர் பயன்படுத்துகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!