விடைபெறாத விபரீதம்

தோ பாயோ­வில் இவ்­வாண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கண்­கா­ணிப்பு கேமரா கம்­பி­வ­டங்­க­ளைப் பொருத்­தும் பணி­யில் ஈடு­பட்டு இருந்த 65 வயது சிங்­கப்­பூ­ரர் ஏணி­யி­லி­ருந்து கீேழ விழுந்­தார். மின்­சா­ரப் பணி­யா­ள­ரான அவர் பின்­னர் இறந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டது.

அடுத்த இரு­வா­ரங்­களில் அந்த வேலை தொடர்­பான இதர ஐந்து ஊழி­யர்­கள் உயி­ரி­ழந்­த­னர். அவர்­களில் இரு­வர் கன­ரக வாக­னங்­கள் ஏறி­ய­தில் மாண்­ட­னர். இதர இரு­வர் உய­ரத்­தி­லி­ருந்து தவறி கீழே விழுந்து இறந்­த­னர்.

அப்­போ­தி­லி­ருந்து, கவலை

தரக்­கூ­டிய வேலை­யிட மர­ணங்­க­ளை­யும் வேலை­யி­டத்­தில் ஏற்­படும் கடு­மை­யா­கக் காய­ம­டை­யும் சம்­ப­வங்க­ளை­யும் தடுக்­கும் முயற்­சி­கள் வேக­மெ­டுத்­தன. தேசிய நிகழ்ச்­சி­நி­ர­லி­லும் அவை இடம்­பெற்­றன.

ஜன­வரி தொடங்கி மே 9ஆம் தேதி வரை வேலை­யி­டங்­களில் 20 பேர் உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து பிர­த­மர் லீ சியன் லூங் அது­

கு­றித்து எச்­ச­ரித்­தார்.

வேலை­யி­டப் பாது­காப்பு தர­நிலை தவ­றி­ய­தாக அவர் அப்­போது குறிப்­பிட்­டார்.

மேலும், இம்­மா­தத் தொடக்­கத்­தில் நாடா­ளு­மன்­றத்­தி­லும் வேலை­யிட மர­ணம் தொடர்­பா­கக் குரல்­கள் எழுப்­பப்­பட்­டன.

இதற்­கி­டையே, இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பாக எச்­ச­ரிக்­கை­யு­டன் நடந்­து­கொள்­ளு­மாறு நிறு­வ­னங்­கள் மீண்­டும் மீண்­டும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டன. மனி­த­வள அமைச்சு தண்­ட­னை­க­ளை­யும் வேலை­யி­டப் பாது­காப்பு தொடர்­பான சோத­னை­

க­ளை­யும் அதி­க­ரித்­தது. இன்­னும் கூடு­தல் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­போ­வ­தாக அமைச்சு உறுதி அளித்­தது. இருந்­தா­லும், மர­ணங்­கள் அடுத்­த­டுத்த மாதங்­களில் கூடிக்­கொண்டே போகின்­றன.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் ஆகக் கடைசி மர­ணம் நிகழ்ந்­தது. கிராஞ்­சி­யில் உள்ள தனி­யார் போக்­கு­

வ­ரத்து நிலை­யத்­தில் பேருந்து ஒன்­றுக்­கும் தூண் ஒன்­றுக்­கும் இடை­யில் சிக்­கிய இழுவை வண்டி ஓட்­டு­நர் ஒரு­வர் மர­ண­முற்­றார்.

இது இந்த ஆண்­டின் 32வது வேலை­யிட மர­ணம். இந்த ஆண்­டில் இன்­னும் நான்கு மாதங்­கள் எஞ்­சி­யுள்­ளன. 2020ஆம் ஆண்டு முழு­மைக்­கும் பதி­வான 30 வேலை­யிட மர­ணங்­க­ளேடு ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு அதி­கம் என்­ப­தால் அது­கு­றித்த கவலை எழுந்­துள்­ளது.

வேலை­யிட மரண எண்ணிக்கை அதி­க­ரிப்புக்கு கொவிட்-19 தொடர்­பான இடை­யூ­று­களும் கார­ணம் என பாது­காப்பு தொடர்­பான பணி­களில் பல்­லாண்டு அனு­ப­வம் பெற்ற நிபுணர்­கள் கருத்­துத் தெரி­வித்து உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!