தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரியணையில் 3ஆம் சார்ல்ஸ்; அடுத்த வாரிசாக வில்லியம்

2 mins read
02f688a8-31f4-4ae6-8059-6829c89d89d2
பிரிட்டனின் புதிய அரசராக முடிசூடும் 3ஆம் சார்ல்ஸ், 73. இவரின் 2வது மனைவியான கமிலா அரசியாகிறார். படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

பிரிட்­ட­னின் அரி­ய­ணையை 70 ஆண்டு காலம் அலங்­க­ரித்த 2ஆம் எலி­ச­பெத் அரசியாரின் மறைவை அடுத்து அவ­ருடைய மூத்த புதல்­வர் மூன்­றாம் சார்ல்ஸ் அர­ச­ரா­கப் பதவி ஏற்­றுள்ளார்.

மூன்­றாம் சார்ல்ஸின் இரண்­டா­வது மனை­வி­யான கமிலா அர­சி­யாக பொறுப்­பேற்­கி­றார்.

அர­ச­ரா­கும் சார்ல்ஸ் தனது மூத்த மகன் வில்­லி­யம்மை வேல்ஸ் இள­வ­ர­ச­ராக்கினார். வில்­லி­ய­மின் மனைவி கேத்­த­ரின் (கேத் மிடில்­டன்) இள­வ­ர­சி­யாக நிய­மிக்­கப்­பட்டு இருக்­கி­றார்.

அர­சர் சார்ல்ஸ்க்கு பிறகு வில்­லி­யம், 40, அடுத்த அரசராகப்­பதவி ஏற்­பார் என்­பது இதன்­மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

இள­வ­ர­சர் வில்­லி­ய­முக்கு இரு மகன்­கள், ஒரு மகள் இருக்­கிறார்­கள். அவர்­கள் இனி­மேல் இளவரசர் ஜார்ஜ், 9, என்­றும் இள­வரசி சார்­லட், 7, இள­வ­ர­சர் லூயிஸ், 4, என்­றும் அழைக்­கப்­படு­வார்­கள்.

அரசரின் இளைய மக­னான ஹேரி அவ­ரது மனைவி மேகன் இரு­வ­ரும் அமெ­ரிக்­கா­வில் வசிக்­கி­றார்­கள். இவர்­கள் அரச குடும்­பத்­தில் இருந்து வில­கி­விட்­டனர்.

பிரிட்­டிஷ் அர­சி­யாக ஆக அதிக காலம் சேவை­யாற்­றி­ய­வர் இரண்­டாம் எலி­ச­பெத் அர­சி­யார் என்று வர­லாற்­றில் குறிப்­பி­டப்­படு­கிறது. இவர் 96 வய­தில் இம்­மா­தம் 8ஆம் தேதி கால­மா­னதை அடுத்து பிரிட்­ட­னின் இரண்­டா­வது எலி­ச­பெத் யுகம் முடி­வுக்கு வந்­தி­ருக்­கிறது. அந்த முடிவு மூன்­றாம் சார்ஸ்ஸ் அர­ச­ரின் ஆட்­சிக்­கா­லத் தொடக்­கத்­திற்கு வழி­வ­குத்து இருக்­கிறது.

அடுத்த வாரிசு தொடர்­பில் இரண்­டாம் எலி­ச­பெத் அர­சி­யார் இந்த ஆண்டு தொடக்­கத்­தில் கடி­தம் ஒன்றை வெளி­யிட்­டார்.

அரி­யணை ஏறி 70 ஆண்டுகள் நிறை­வ­டை­வ­தைக் குறிக்­கும் வகை­யில் அந்­தக் கடி­தம் வெளி­யி­டப்­பட்­டது.

தனக்குப் பிறகு மூன்­றாம் சார்ல்ஸ் பிரிட்­டிஷ் அர­ச­ராக அரி­யணை ஏறும்­போது அவ­ரின் மனை­வி­யான தனது மரு­ம­கள் கமிலா அர­சி­யாக பட்­டம் சூடுவார் என்று அந்­தக் கடி­தத்­தில் இரண்­டாம் எலி­ச­பெத் உறுதியாகக் குறிப்­பிட்டு இருந்­தார்.

அந்­தக் கடி­தம் அரச குடும்­பத்­தில் அடுத்த வாரி­சாக யார் பொறுப்­பேற்­பார்­கள் என்று நீண்ட நெடுங்­கா­ல­மாக நிலவி வந்த ஒரு பிரச்­சி­னையை முடிவு செய்து மூன்­றாம் சார்ல்ஸ் அடுத்த அரச ராக முடி­சூட வழி­வ­குத்­தது.