தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழும் வழிகாட்டிகளுக்கு அங்கீகாரம்

1 mins read
0f6f7a0b-1ce1-4574-a5ea-0051aa6c57d8
மூத்த தமி­ழா­சி­ரி­யர்­க­ளான 74 வயது திரு சாமிக்­கண்ணு சிதம்­ப­ரம்(வலது), 73 வயது திரு பொன்­ன­ழகு மாணிக்­கம் -
multi-img1 of 3

மாணவர்களிடம் தமிழ்மொழியைக் கொண்டு சேர்க்க அரும்பணியாற்றிவரும் தமிழ் ஆசிரியர்களைக் கெளரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 'நல்லாசிரியர் விருது' நேற்று ஒன்பது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் முரசு நாளி­தழ், சிங்­கப்­பூர்த் தமி­ழாசி­ரி­யர் சங்­கம், தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகி­யவை இணைந்து நல்­லா­சி­ரி­யர் விருது விழாவை 2002ஆம் ஆண்டு முதல் ஆண்­டு­தோ­றும் நடத்தி வரு­கின்­றன.

இவ்­வாண்­டின் நல்­லா­சி­ரி­யர் விருது விழா நேற்று உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலைய உள்­ள­ரங்­கில் நடை­பெற்­றது.

நல்­லா­சி­ரி­யர் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­தினை மூத்த தமி­ழா­சி­ரி­யர்­க­ளான 74 வயது திரு சாமிக்­கண்ணு சிதம்­ப­ரம், 73 வயது திரு பொன்­ன­ழகு மாணிக்­கம் ஆகிய இருவ­ரும் பெற்றனர்.

தொடக்­கப்­பள்ளி, உயர்­நி­லைப்­பள்ளி, தொடக்­கக் கல்­லூரி/புகுமு­கக் கல்வி நிலை­யம் ஆகிய பிரி­வு­களில் ஆறு பேருக்­கும் சிறந்த பயிற்சி ஆசி­ரி­யர் விருது ஒரு­வ­ருக்­கும் இவ்­வி­ழா­வில் வழங்­கப்­பட்­டன.

விருது பெற்ற ஆசிரியர் ஒவ்வொருவரும் தமிழ் மொழியைச் சிறப்பிக்க தங்களது பள்ளிகளிலும் மாணவர்களிடத்திலும் மேற்கொண்டு வரும் அரிய முயற்சிகள் குறித்து இங்கு காண்போம்.