இளந்தமிழாசிரியர் என்பதில் பெருமிதம்

இளந்தமிழாசிரியர் என்பதில் பெருமிதம்

1 mins read
1fcf81ea-a751-42f6-aaf5-9ff603000c21
சிறந்த பயிற்சி ஆசிரியர் விருதுபெற்ற செய்யது ஜரினா, 23. -
Google News Preferred Icon

பள்ளிக்காலம் தொட்டே ஆசிரியர் ஆக வேண்டும் என்ற வேட்கையோடு இருந்தவர் இவ்வாண்டின் சிறந்த பயிற்சி ஆசிரியர் விருதுபெற்ற செய்யது ஜரினா, 23. இயல்பாகவே தமிழ் மொழி மீது நாட்டமும் ஈடுபாடும் கொண்டிருந்த இவர், உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் உயர் தமிழ் படித்தபோது தமிழ் மொழியின் சிறப்பம்சங்களை யும் ஆளுமையையும் உணர்ந்ததாகக் கூறினார். தொடக்கக் கல்லூரியிலும் தமிழ் மொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றார். தாம் தமிழாசிரியர் ஆகும் விருப் பத்தை பெற்றோரிடம் தெரி வித்தபோது அதிக வேலைப்பளு இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி முதலில் தயங்கிய அவர்கள் பிறகு ஜரினாவின் விருப்பத் திற்குத் துணைநின்றனர்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக் கழகத்தில் பட்டக் கல்வி பயின்ற இவர், இவ்வாண்டு உன்னதத் தேர்ச்சி பெற்றார். தற்சமயம் ஈஸ்ட் ஸ்பிரிங் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிகிறார் ஜரினா.

முழுநேர ஆசிரியர் பணி ஏற்று சில மாதங்களே ஆன போதிலும், "ஓர் இளைய தமிழாசிரியராக என்னால் வகுப்பறையில் படிப்புமீதான மாணவர்களின் எதிர்பார்ப்பு களையும் தேவைகளையும் கேட்டறிந்து அதற்கேற்ப வகுப்புகளை அமைக்கிறேன். வகுப்பு தொடங்குமுன் கல்வி யின்பால் மாணவர்களை ஈர்க்க புதிய உத்திகளை தயார்ப்படுத்திக் கொள்கி றேன்," என்கிறார் ஜரினா.