நவீன தொழில்நுட்பம்வழி தமிழிலக்கியம், தமிழ்ப் பாடம்

நவீன தொழில்நுட்பம்வழி தமிழிலக்கியம், தமிழ்ப் பாடம்

2 mins read
6f0cca1d-4cfd-4e2b-bd23-aa588375bdcb
-

ஒவ்­வொரு மனி­த­னுக்­கும் தனது வாழ்­வில் இரண்டு முக்­கி­ய­மான இடங்­கள் உள்­ளன. ஒன்று தாயின் கரு­வறை, மற்­றொன்று மாண­வர்­

க­ளின் வகுப்­பறை என்­கி­றார் உயர்நிலைப் பள்ளி பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திரு ஜோசப் அந்­தோணி ராஜ், 40.

ஒரு தாயின் கரு­வறை எவ்­வாறு ஒரு நல்ல மனி­தனை உரு­வாக்­கு­கி­றதோ, அதே­போல் வகுப்­பறை ஒரு நல்ல குடி­ம­கனை உரு­வாக்கு­ கிறது என்­கி­றார் அவர்.

2012ஆம் ஆண்டு ஆசி­ரி­யர் பணி­யைத் தொடங்­கிய இவர், தமிழ் மொழி­யை­யும் பாரம்­ப­ரி­யத்­தை­யும் மாண­வர்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தும் வகை­யில் ஈடு­பாட்­டு­டன் பாடங்­க­ளைத் திட்­ட­மிட்டு வழங்­கு­வ­தில் பெருமை கொள்­கி­றார்.

"என்னை பொறுத்­த­ள­வில் கற்­பித்­தல் என்­பது பாடங்­க­ளைத் தாண்டி வாழ்க்­கை­யின் விழு­மி­யங்­களை மாண­வர்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுப்­பதே ஆகும்," என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

தமது பள்ளியில் தமிழ் மொழித் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் திக­ழும் திரு அந்­தோணி ராஜ், தமது மாண­வர்­களை கவிதை, கதை எழு­து­தல், தமிழ் செயலி உரு­வாக்­கு­தல் சார்ந்த போட்­டி­கள் மற்­றும் மொழி அறிவை ஆழப்ப­டுத்­து­வ­தற்­காக நன்கு அறி­யப்­பட்ட எழுத்­தா­ளர்­க­ளு­டன் உரை­யா­டல் நிகழ்ச்­சி­கள் போன்­ற­வற்­றில் பங்­கேற்க ஊக்­கு­விக்­கி­றார்.

அதே வேளை­யில் திரு அந்­தோணி தனது பாடங்­களில் மாண­வர்­களை ஈர்க்­கும் வகை­யில் நவீன தக­வல் தொழில்­நுட்­பத்­தை­யும் சேர்த்து கற்­பித்து வரு­கி­றார்.

"பல பயி­ல­ரங்­கு­­க­ளுக்­குச் சென்று நவீன தக­வல் தொழில்­நுட்­பத்தை எப்­படி பயன்­ப­டுத்­து­வது, பாடங்­களில் மாண­வர்­களை சுவா­ர­சி­ய­மான முறை­யில் எவ்­வாறு பயன்­ப­டுத்­து­வது போன்ற நுணுக்­கங்­களைக் கற்­றுக்­கொண்டு என்னை நானே மேம்­ப­டுத்­திக்­கொண்­டேன்," என்று அவர் கூறி­னார்.

"தொழில்­நுட்­பம் என்­பது மாண­வர்­க­ளின் வாழ்­வில் ஓர் அங்­க­மாகி­விட்ட இந்­தக் காலத்­தில், நவீன தக­வல் தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு கற்­பிக்­கும்­போது, தமிழ் இலக்­கி­யங்­கள், தமிழ் சார்ந்த பாடங்­கள் இன்­னும் எளி­தில் மாண­வர்­க­ளைச் சென்­ற­டை­கின்­றன.

"ஆகை­யால், தொழில்­நுட்­பத்தை பள்ளிப் பாடங்­களில் ஓர் அங்­க­மா­கப் பயன்ப­டுத்­துவது அவ­சி­ய­மா­னது," என்­கிறார் திரு அந்தோணி ராஜ்.

மேலும், மாணவர்கள் தங்களுக் குள்ளேயே பாடத் திருத்தங்களைச் செய்துகொள்ள 'எடிட்டிங்' முறை யையும் திறன்வளர்க்கும் விவாதங் களில் பங்கேற்க கூட்டுக் கற்றல் உத்திகளையும் இவர் பயன்படுத்தி வருகிறார்.

சுவா சூ காங் உயர்­நி­லைப் பள்ளியில் பணிபுரியும் இவர், தம் மாண­வர்­களுடனும் பெற்­றோ­ரு­ட­னும் ஒரு சிறப்­பான பிணைப்­பைக் கொண்­டுள்­ளார்.

அவர்­க­ள் அத்தனை பேரின் தேவையை அறிந்து, தொழில்­நுட்­பம் வாயி­லாக, இயன்ற அள­விற்கு தமி­ழ் மொழியோடு வாழ்க்­கை­யின் விழு­மி­யங்­க­ளை­யும் மாண­வர்க­ளுக்கு கற்­றுக்­கொ­டுக்­கும் நோக்­கத்தை இவர் கொண்­டுள்­ளார்.

இவ­ரது நவீன பாடத்­திட்ட முறை, மாண­வர்­கள் தங்­கள் வகுப்பறைக்கும் அப்பால் சக நண்­பர்­க­ளு­டன் தின­சரி உரை­யா­ட­லில் தமிழ்மொழியை அதி­க­மாக பயன்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விக்­கும் வண்­ணம் அமைந்­துள்­ளது.