தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழங்கலைகள் மூலம் பாடங்களும் பாரம்பரியமும் கற்பித்தல்

2 mins read
c4183588-552a-4a87-8002-9dc518eba161
உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் விருதுபெற்ற ஆசிரியர் சுப்பு சுபா சக்திதேவி, 41. -

சிறு வய­தி­லி­ருந்தே பல தமிழ்ப் புத்­த­கங்­க­ளைப் படித்து வளர்ந்த திரு­மதி சுப்பு சுபா சக்­தி­தேவி, ஏழாண்­டு­க­ளா­கத் தமிழ் ஆசி­ரி­ய­ராக இருந்து வரு­கி­றார்.

2019ஆம் ஆண்டு முதல் ஊட்­ரம் உயர்­நி­லைப் பள்­ளி­யில் தமிழ் கற்­றுக்­கொ­டுக்­கும் இவர், தனது உயி­ரோட்­ட­மான, அர்த்­த­முள்ள தமிழ்ப் பாடங்­க­ளுக்­காக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கி­றார்.

மொழி­யைக் கற்­பிப்­பது மட்­டு­மல்­லா­மல், தமிழ் பாரம்­ப­ரி­யத்­தை­யும் மாண­வர்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுக்­கும் இவர், "சிறு வய­தில் 'பொன்­னி­யின் செல்­வன்' நூல்­தான் என் தமி­ழார்­வத்தை வெகு­வாக வளர்த்­தது; இன்­னும் பல நூல்­களை படிக்­கும் ஆவலை என்­னுள் தூண்­டி­யது.

"அதே­போல், நான் கற்­றுக்­

கொ­டுக்­கும் பாடங்­களும் தமிழ் பாரம்­ப­ரி­ய­து­டன் பிணைத்து ஆர்­வத்­தைத் தூண்­டும் வகை­யில் இருக்­க­வேண்­டும் என்­பதை நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளேன்," என்று குறிப்­பிட்­டார் திரு­மதி சக்­தி­தேவி.

தனது மாண­வர்­க­ளின் தமிழ் மொழி மற்­றும் பாரம்­ப­ரி­யத்­தின் புரி­தலை மேலும் ஆழப்­ப­டுத்த, திரு­மதி சக்­தி­தேவி தமது வகுப்­பு­களில் கவிதைப் பாடங்­கள், மரு­தாணி வரை­தல், கோலம் போடுதல், பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­க­ளான 'சொட்­டாங்­கல்' போன்­ற­வற்றை வகுப்­பு­களில் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றார்.

"இது­போன்ற அனு­ப­வங்­கள் தமிழ் மொழிப் புழக்­கத்தை அதி­க­ரிக்க உத­வு­வ­தோடு நம் பாரம்­ப­ரி­யத்­தின் மீதான மாண­வர்­க­ளின் மதிப்பை மேம்­ப­டுத்த ஒரு வழி­யாக அமை­கிறது.

பாரம்­ப­ரிய நட­வ­டிக்­கை­களில் மாண­வர்­களை ஈடு­ப­டுத்­து­வ­தன் மூலம், ஐம்­பு­லன்­க­ளை­யும் பயன்­ப­டுத்தி அவர்­க­ளால் பற்­பல கோணங்­க­ளி­லி­ருந்து நம் மொழி­ யை­யும் பாரம்­ப­ரி­யத்­தின் சிறப்­பு­க­ளை­யும் கற்­றுக்­கொள்ள முடி­கிறது.

"தமிழ் மொழி­யை­யும் பாரம்­ப­ரி­யத்­தை­யும் ஒருங்­கி­ணைத்து கற்­றுக்­கொ­டுப்­பது முக்­கி­ய­மா­னது என்று நான் கரு­து­கி­றேன்," என்­றும் அவர் கூறி­னார்.

மொழி, பாரம்­ப­ரி­யம் போன்­ற­வற்றைத் தாண்டி, தமது கற்­றல் முறை மூலம் பெற்­றோர்-குழந்தை பிணைப்­பை வளர்க்கவும் திரு­மதி சக்­தி­தேவி முயற்­சி­களை மேற் கொண்டு வருகிறார்.

பாடத்­தின் ஒரு நட­வ­டிக்­கை­யாக, தமது மாண­வர்­க­ளின் குழந்­தைப் பருவ அனு­ப­வங்­க­ளைப் பற்றி அவர்­க­ளின் பெற்­றோரை நேர்­கா­ணல் செய்ய வழி­காட்­டி­யுள்­ளார். இம்­மு­யற்சி பெற்­றோர் மற்­றும் மாண­வர்­க­ளி­டையே நல்ல வர­வேற்­பைப் பெற்­றது.

"வீட்­டுப்­பா­டத்தை சுவா­ர­சிய­மாக்­க­வும் தமிழ் மொழிப் புழக்­கத்தை வீட்டுச் சூழலில் வளர்க்க வும் இதுபோன்ற நட­வ­டிக்­கை­களை நான் செயல்­ ப­டுத்­துகிறேன். பெற்­றோ­ரு­டன் உரை­யா­டு­வ­தன் மூலம் குடும்பப் பிணைப்­பும் வலு­வா­கிறது, தமிழ் பேசும் புழக்­க­மும் அதி­க­ரிக்­கிறது," என்­றார் திரு­மதி சக்­தி­தேவி.

ஒரு கவி­ஞ­ரா­க­வும் திக­ழும் இவர், கவி­தை­க­ளுக்­கான 'தங்க முனை விருது' பெற்­றுள்­ளார்.

தன்­னம்­பிக்கை ஊட்­டும் தமிழ்ப் பாடல்­கள் மூலம் மொழி­யாற்­றலை வளர்ப்பதுடன் அது சார்ந்த ஆக்­க­பூர்­வ­மான வகுப்பு விவா­தங்­கள் போன்ற வழி­களில் சுவா­ர­சி­ய­மாக தனது பாடங்­களை நடத்தி வரு­கி­றார் இந்த ஆசிரியர்.

மாணவர்­கள் தங்களது பாரம்ப­ரி­யத்தை அறி­யும் விதத்திலும் தங்களது நண்­பர்­கள், பெற்­றோ­ரி­டம் தமிழ் பேசும் புழக்­கத்தை அதி­க­ரிக்­கும் வண்­ணமும் திருமதி சக்­தி­தே­வி­யின் தனித்­து­வ­மிக்க பாடங்­கள் அமைந்­து வருகின்றன.