லிட்டில் இந்தியாவில் காத்திருக்கும் புதிய கடைத்தொகுதிகள்

அகண்ட நடை­பாதை நெடு­கி­லும் வண்­ணச்செடி­கள், பள­ப­ளக்­கும் கண்­ணா­டிச் சுவர்­க­ளு­டன் சையது ஆல்வி சாலை - சிராங்­கூன் சாலை சந்­திப்­பில் உயர்ந்து நிற்­கும் 19 மாடி 'சென்ட்­ரி­யம் ஸ்கு­வெர்'.

வி.கே.கல்­யா­ண­சுந்­த­ரம், முஸ்­தபா போன்ற பிர­ப­ல­மான பெருங்­ க­டை­கள் பர­ப­ரப்­பாக செயல்­பட்ட ஐந்து மாடி சிராங்­கூன் பிளாசா இருந்த இடத்­தில் இந்த வர்த்­த­கக் கட்­ட­டம், கொவிட்-19 தொற்­றுக் காலத்­தில் சத்­தமே இல்­லா­மல் மட­ம­ட­வென்று எழுந்தது.

143 அலு­வ­லக இடங்­கள், 49 சில்­லறை வர்த்­தகக் கடைகள், 39 மருத்­துவ சேவைக்­கான இடங்­கள் ஆகி­ய­வற்­றைக் கொண்ட இக்­கட்­ட­டத்­தில் முதல் இரண்டு மாடி­களில் வர்த்­தகக் கடை வளா­கங்­கள் அமைந்­தி­ருக்­கின்­றன.

ஐந்து மாடிக் கட்­ட­டம் 19 மாடி­யாகி, பரப்­ப­ளவு கூடி, கடை­க­ளுக்­கான இட­வ­சதி அதி­க­ரித்து இருந்­தா­லும் இன்­னும் இங்கு கடை­கள் வர­வில்லை.

செயல்­ப­டத்­தொ­டங்கி ஓராண்டு ஆகி­விட்­ட­நி­லை­யில், தற்­போது இங்கு 'டாலர்ஸ் அண்ட் சென்ட்ஸ்' எனும் வாசனைத் திர­வி­யங்­கள் விற்­கும் கடை­யும் 'மல­பார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்' நகைக்­கடை யுமே செயல்­ப­டு­கின்­றன.

இன்­னும் அதிக கடை­கள் திறக்­கப்­ப­டும்­போது, அதிக வாடிக்­கை­யா­ளர்­கள் வரு­வார்­கள் என்ற எதிர்­பா­ரப்­பும் நம்­பிக்­கை­யும் இருப்­ப­தாக 'மல­பார் கோல்ட் அண்ட் டை மண்ட்ஸ்' நகைக் கடை­யின் மூத்த விற்­பனை அதி­காரி திரு ராஜா முகம்­மது, 38, கூறி­னார்.

நவம்­பர் மாத இறு­திக்­குள் 'ஜோய் ஆலுக்­காஸ்' புதிய கிளை இங்கே திறக்­கப்­படும் என்­றார் கடை­யின் சிங்­கப்­பூர் மேலா­ளர், திரு ஃபிரெட்டி, 40.

கடை­கள் அதி­க­மாக இங்கு இயங்­க­வில்லை என்­றா­லும் அலு­ வ­லக இடங்கள் முழு­மை­யாக பயன் ­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக இக்­கட்­ட­டத்தை நிர்­வ­கிக்­கும் 'எட்மண்ட் டை' நிறு­வ­னத்­தின் பொறியியல் மேற்­பார்வையாளர் திரு ராஜ், 50, கூறி­னார்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கிட்டத்தட்ட நீக்­கப்­பட்டுவிட்­ட­ தாலும், தீபா­வளி வரு­வ­தா­லும் வாடிக்­கை­யா­ளர்­கள் தேடி வர­லாம் என்று இங்­குள்ள கடைக்­கா­ரர்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள்.

இதே எதிர்­பார்ப்­பு­தான் லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தின் அடுத்த முனை­யில் அமைந்­துள்ள தேக்கா பிளேஸ்' கடைத்­தொ­கு­தி­யின் கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் இருக்கிறது.

தேக்கா மார்க்­கெட்­டுக்கு எதிரே அமைத்­துள்ள 'தேக்கா பிளேஸ்' மூன்­றா­வது முறை­யாக மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டுள்­ளது. 2003இல் கட்­டப்­பட்ட 'தேக்கா மால்', 2008இல் மேற் கொள்ளப்பட்ட பணி­க­ளுக்கு பிறகு 'தி வெர்ஜ்' என்று மாறி, 2019இல் மேற்­கொள்­ளப்­பட்ட மறு­கட்­டு­மா­னப் பணி களுக்கு பிறகு 'தேக்கா பிளேஸ்' ஆகி­யுள்­ளது.

உணவு, அழகுப் பரா­ம­ரிப்புச் சேவை­கள், உடை­கள் விற்­கும் கடை­கள் ஆகிய பல­த­ரப்­பட்ட சேவை­களை வழங்கக்கூடிய கடை­கள் இங்கு உள்­ளன.

வாடகை ஓர­ளவு கட்­டுப்­பாடி யானா­லும் வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­கம் இல்லை என்­பதே இங்­குள்ள கடைக்­கா­ரர்­கள் பல­ரது குறை.

"லிட்­டில் இந்­தி­யா­வுக்கே உரிய தனித்­தன்­மை­யு­டன் திக­ழும் ஈர­டுக்­குக் கடை ­வீ­டு­களில் அமைந்­துள்ள பழை­ய­பாணி கடை­களும் பாதை ஓரக்கடை­களும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நீண்ட கால­மாக பழக்­கப்­பட்­டவை.

மேலும் அவை சாலை ஓரத்­தில் இருப்­ப­தால் நடக்­கும்­போதே கண்­ணில்படு­கின்­றன. கடைக்­குச் செல்­லும் திட்­ட­மில்­லா­விட்­டா­லும் எட்­டிப் ­பார்க்க வைக்­கின்­றன.

"இங்­குள்ள சேவை­களே பெரும்­பா­லும் புதி­தா­கக் கட்­டப்­பட்­டுள்ள பல மாடி கடைத்­தொ­கு­தி­களில் உள்ள கடை­க­ளி­லும் கிடைக்­கின்­றன," என்­றார் துணைப்­பாட ஆசி­ரி­யர் வசந்தா, 56.

"தற்­போது சிங்­கப்­பூர் எங்­கும் இத்­த­கைய குளி­ரூட்­டப்­பட்ட, வசதி ­கள் நிறைந்த நவீன கடைத்­தொ­கு ­தி­கள் இருக்­கின்­றன.

"உள்­ளூர் மக்­களும் சுற்­றுப் பய­ணி­களும் தேக்­கா­வுக்கு வரு­வது பாரம்­ப­ரிய இந்­தி­யப் பொருட்­களை வாங்­க­வும் புரு­வம் திருத்­து­வது, மரு­தாணி போடு­வது போன்ற சேவை­க­ளை­ பெறு­வ­தற்­கும் இந்­திய உணவை உண்­ப­தற்­கும்தான். நவீன கடைத்­தொ­குதி அனு­ப­வத்தை இங்கு பல­ரும் நாடு­வ­தில்லை," என்­றார் அவர்.

"பழக்­கம், தனித்­தன்­மை­யான பொருள், சிறப்பு சேவை, கட்­டண சலுகை போன்ற கார­ணங்­களே வாடிக்­கை­யா­ளர்­களை இக்­க­டை­ க­ளுக்கு அதி­கம் ஈர்க்­கக்­கூ­டும்," என்று குறிப்­பிட்­ட­னர் வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!