உணவு, ஆயுர்வேதம், யோகாசனம்

உணவு, ஆயுர்வேதம், யோகாசனம்

2 mins read
21f4e943-ce74-4456-8ce9-7c0fcf32f8d7
ஐஸ்வரியா தயாரிக்கும் நனிசைவ உணவு. படம்: அகிம்சா கஃபே -

அனுஷா செல்­வ­மணி

வாழ்க்­கை­யில் ஏதா­வது சாதிக்­க­வேண்­டு­மென்ற வேட்­கை­யு­டன் இருந்த ஐஸ்­வ­ரியா ஸ்ரீ, 'ஜிசிஇ' மேல்­நி­லைத் தேர்வுக்குப் பிறகு, பல்­க­லைக்­க­ழ­கம் செல்­லு­முன் மூன்று ஆண்­டு­கள் இடை­வெளி எடுக்க நேரிட்­டது. பகு­தி­நேர வேலை­க­ளி­லும் தற்­கா­லிக வேலை­க­ளி­லும் ஈட்­டிய வரு­மா­னத்­தைக் கொண்டு, வெளி­நா­டு­களுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டார்.

இதில், வியட்­னாம் பய­ணம் ஐஸ்­வர்­யா­வின் வாழ்க்­கை­யில் திருப்பு­மு­னை­யாக அமைந்­தது.

வியட்­னா­மில் உள்ள சிவானந்தா யோகா­ச­னப் பயிற்சி மையத்­தில் ஒரு மாதம் பயின்று யோகா­ச­னம் கற்­பிப்­ப­தற்­கான உரி­மத்­தைப் பெற்­றார்.

அங்கு தங்­கி­யி­ருந்த நாள்­களில் இயற்கை மூலிகை உண­வைச் சுவைத்த ஐஸ்­வர்­யா­வுக்கு, யோகா­ச­னத்­தை­யும் உண­வை­யும் இணைத்து ஆரோக்­கி­யம் பேண உத­வும் எண்­ணம் இவருக்கு ஏற்­பட்­டது.

தேசி­யப் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை வளா­கத்­தில் கடையை வாட­கைக்கு எடுத்து, 'அகிம்சா கஃபே'யைத் தொடங்­கி­னார்.

கடந்த ஒன்­றரை ஆண்­டாக நீடித்த நிலைத்­தன்மை, யோகா­ச­னம், ஆயுர்­வே­தம் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு ஆரோக்­கிய முறை­யில் இயற்கை உணவு­வகை­களை இங்கு வழங்­கு­கி­றார்.

முருங்­கைக் கீரை லாட்டே, வேப்­பிலை வெல்­னஸ் ஷாட்ஸ் போன்ற மாறு­பட்ட உண­வு­கள் இங்கே கிடைக்­கின்­றன.

இந்­தியா, இலங்கை போன்ற நாடு­க­ளி­லி­ருந்து அஸ்­வ­கந்தா, வேப்­பிலை, சீர­கம், பெருஞ்­சீ­ர­கம் போன்ற இயற்கை வேளாண்­பொ­ருள்­களை (ஆர்­கா­னிக்) இறக்­கு­மதி செய்­கி­றார்.

வார இறுதி நாள்­களில் வச­தி­கு­றைந்­தோ­ரின் வீடு­க­ளுக்­குச் சென்று யோகா­ச­னம் கற்­பிக்­கும் இவர், சிறு­வ­ய­தி­லி­ருந்தே சின்­னச் சின்ன உடல் உபா­தை­க­ளுக்கு தாயா­ரின் வழி­காட்­ட­லில் இயற்கை மருத்­து­வத்தை நாடு­ப­வர்.

"உண­வில் ஆயுர்­வே­தப் பொருள்­கள், யோகா­ச­னம் இரண்­டும் மனத்தை அமை­திப்­படுத்து­வ­தற்­கும் மன அழுத்­தத்தை குறைப்­ப­தற்­கும் பெரிதும் உதவுகிறது," என்று கூறும் ஐஸ்­வ­ரியா, நனி­சைவ உண­வு­முறை­யைக் கடைப்­பி­டித்து வரு­கி­றார்.

இதற்கு முன்­னர் செரி­மா­னப் பிரச்­சி­னை­யால் அவ­திப்­பட்ட இவ­ருக்கு இந்த உண­வுப் பழக்­கம் தீர்­வாக அமைந்­துள்­ளது.

எதிர்­கா­லத்­தில் யோகா­ச­னப் பயிற்சி நிலை­யத்­தை­யும் ஆரோக்­கிய உண­வ­கத்­தை­யும் ஒரே இடத்­தில் அமைக்க விரும்­பு­கி­றார் 24 வயதாகும் ஐஸ்­வ­ரியா.