தேநீரிலும் நனிசைவம்

தேநீரிலும் நனிசைவம்

1 mins read
8cdd63c9-7499-448d-b881-2059c68b0c05
-

தனி­யார் நிறு­வ­னங்­க­ளி­லும், அனைத்­து­ல­கப் பள்­ளி­களில் ஆசி­ரி­ய­ரா­க­வும் பணி­பு­ரிந்த அனு­ப­வம் உள்­ள­வர் 36 வயது திரிஷ்னு கோர் (படம்).

ஏழு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இந்­தியா சென்­றி­ருந்­த­போது தெரு­வுக்­குத் தெரு தேநீர்க் கடை­கள் இருப்­ப­தைக் கண்ட இவர், வாழ்க்­கை­யின் வெவ்­வேறு நிலை­க­ளைச் சேர்ந்­தோ­ரைத் தேநீர் ஒன்­றி­ணைக்­கிறது என்று உணர்ந்­தார்.

சிங்­கப்­பூர் திரும்­பிய பிறகு ஒரு­நாள் விலங்­கு­கள் துன்­பப்­படு­வ­தைப்­போல கொடுங்­க­னவு கண்டார். இரண்­டு­முறை இதே கன­வைக் காணவே, அசைவ உணவு உண்­பதை நிறுத்­து­வ­தற்­கான அழைப்­பாக அதைக் கரு­தி­னார். இதன் விளை­வாக திரிஷ்னு நனி­சைவ உண­வு­முறை­யைப் பின்­பற்­றத் தொடங்­கி­னார்.

தேநீ­ரை­யும் நனி­சைவ உண­வு­மு­றை­யை­யும் இணைக்­கும் முனைப்­பில், ஆசி­ரி­யப் பணி­யி­லி­ருந்து விலகி வீட்­டி­லி­ருந்து செயல்­படும் 'த சாய் பாபா' எனும் தேநீர்க் கடை­யைக் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக நடத்தி­வ­ரு­கி­றார்.

சோயா, பாதாம், ஓட்ஸ் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து தயா­ரிக்­கப்­படும் பால்­க­ளை­யும் இந்­தி­யப் பாரம்­ப­ரிய மூலி­கை­க­ளை­யும் தேநீர் தயா­ரிப்­பில் பயன்­ப­டுத்­து­கி­றார். வாடிக்­கை­யா­ளர்­கள் விருப்­பத்­திற்­கேற்­ப­ இனிப்­பின் அள­வைத் தேர்வு­செய்­ய­லாம். மசா­லாப் பால், மஞ்­சள் பால் ஆகி­ய­வையும் இங்கு உண்டு.

தேநீர் தயா­ரிப்­ப­தற்­கான மூலப்­பொ­ருள்­களை இந்­தியா, இலங்கை, குவாத்தமாலா, இந்­தோ­னீ­சியா ஆகியவற்றிலிருந்து வர­வ­ழைக்­கி­றார். பால் வகை­களை சிங்­கப்­பூ­ரில் வாங்­கு­கி­றார். கடை திறந்து, இந்­திய நனி­சைவத் தேநீரை மேற்­கத்­திய நாடு­களுக்கு விரிவுபடுத்­து­வது இவ­ரது கனவு,