ஆரோக்கிய முறையில் ரொட்டி தயாரிப்பு

ஆரோக்கிய முறையில் ரொட்டி தயாரிப்பு

2 mins read
32c43971-872e-4bce-8209-557b20b5cbe7
பசையப் பொருள் ஒவ்வாமைச் சிக்கல் உள்ளவர்கள் உண்ணக் கூடிய ஆரோக்கிய ரொட்டித் தயாரிப்பு முறையைக் கற்றுக்கொள்ள வந்திருக்கும் மாணவர்களுடன் சமையல் பள்ளியை நடத்தும் திருமதி கவிதா (இடது). படம்: 'மை ஆர்கானிக் ஸ்பூன்' -

நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பு, 'ஹஷி­மோட்டோ தைராய்­டி­டிஸ்' எனும் பெண்­களை எளி­தில் பாதிக்­கக்­கூ­டிய தைராய்டு பிரச்­சினை­யால் அவ­திப்­பட்­டார் 47 வய­தா­கும் திரு­மதி கவிதா சின்ஹா.

பால், 'குளூட்­டன்' எனப்­படும் பசை­யப் பொருள் ஆகி­ய­வற்­றைக் கொண்­டுள்ள உண­வு­களை உட்­கொள்­ளும்­போது உடல்­ந­லப் பிரச்­சினை மோச­ம­டைந்­த­தால் உணவு­மு­றையை மாற்­றிக்­கொண்­டார்.

அரிசி, கோதுமை ஆகி­ய­வற்­றில் காணப்­படும் பசை­யப் பொருள் இல்­லாத 'குளூட்­டன் ஃப்ரீ' எனும் உணவு வகை­களை உட்­கொள்­ளத் தொடங்­கி­னார்.

பசை­யப் பொருள் இல்­லாத 'சவர் பிரட்' எனும் இயற்­கை­யான நொதிப்பு­மு­றை­யில் தயா­ரிக்­கப்­படும் ரொட்­டியின் செய்முறையை இணை­யம்­வழி கற்று தாமே தயா­ரிக்­கத் தொடங்­கி­னார் கவிதா. ஏனெனில் கடை­யில் விற்­கப்­படும் இத்­த­கைய ரொட்டி, 'குவார் கம்' போன்ற செயற்­கைப் பசை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வதா­லும் மாவுச்­சத்து அதி­கம் இருப்­ப­தா­லும் அது ஆரோக்­கி­யத்­துக்கு உகந்­த­தல்ல.

சியா விதை­கள், ஆளி விதை­கள் போன்­றவை பசை­யப் பொருள்­கள் தரும் அதே பயனை அளிக்­கும் என்­பதை அறிந்த கவிதா, அவற்றை ரொட்­டி­யில் சேர்த்­துக்­கொண்­டார். மிக ஆரோக்­கி­ய­மான, இயற்கை முறை­யில் தயா­ரிக்­கப்­படும் இவ­ரது ரொட்டி, மற்ற வகை ரொட்­டி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் எளிதில் செரிக்­கக்­கூ­டி­யது.

குடும்­பத்­தி­ன­ருக்கு இதன் சுவை பிடிக்­கவே நாள­டை­வில் நண்­பர்­களுக்­கும் செய்­து­தந்­தார் கவிதா. பின்­னர் இந்த செய்­மு­றை­யைப் பிற­ருக்கு கற்­பிக்­கத் தொடங்­கி­னார்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக கம்­போங் பாரு­வில் 'மை ஆர்­கா­னிக் ஸ்பூன்' எனும் சமை­யல் பள்­ளியை நடத்­தி­வ­ரு­கி­றார்.

தன்­னு­டைய மக­னுக்­குப் பசை­யம் ஒவ்­வாமை இருப்­ப­தால், மக­னுக்கு ஏற்­ற­வாறு உண­வு­க­ளைத் தயா­ரிக்­கத் திண்­டா­டிய ஆஷா ராஜன் ஸ்ரீராம், கவி­தா­வின் வகுப்­பு­க­ளுக்­குச் சென்று ஆரோக்­கி­ய­மான முறை­யில் ரொட்டி தயா­ரிப்­பைக் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

நான்கு மணி நேரத்­தில் ரொட்­டியை ஆரோக்­கி­ய­மா­கத் தயா­ரிக்­கும் முறையை முழு­மை­யா­கக் கற்­றுக்­கொள்­ள­லாம் என்­கி­றார் திரு­மதி கவிதா. சிறு­வர் முதல் பெரி­ய­வர்­கள்­வரை யார் வேண்­டு­மா­னா­லும் இவ­ரு­டைய வகுப்­பு­களில் சேர­லாம்.

"வகுப்­புக்கு வரு­வோர் அவர்­கள் வீட்­டிற்­குச் சென்று ரொட்­டி­யைத் தாங்­க­ளா­கவே செய்­யும் போது சந்­தே­கம் எழுந்­தால் தெளிவு­ப­டுத்த, நான்கு வாரங்­க­ளுக்கு அவர்­க­ளு­டன் வாட்ஸ்­அப் செயலி மூலம் இணைந்­தி­ருப்­பேன்," என்று கூறி­னார் கவிதா.

https://www.myorganicspoon.com/ எனும் இணை­யப்­பக்­கம் வழி இவ­ரது வகுப்­பு­க­ளுக்­குப் பதிவு செய்­து­கொள்­ள­லாம்.