இந்தியர்கள் மத்தியில் நிற பேதம் உள்ளதா என்பதைக் கண்டறிய தமிழ் முரசு செய்தியாளர்களான பொன்மணி உதயகுமாரும் காயத்திரி காந்தியும் தேக்காவில் ஒரு சிறு சோதனை நடத்தினர்.
இரண்டு பெரும் நிறுவனங் களின் தலைமை நிர்வாக அதி காரிகளின் புகைப்படங்களை மக்களிடம் காண்பித்து இவர்களில் யார் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார் என்று கேட்டபோது பலர் சிவந்த தோல் கொண்டவரையே தேர்ந்தெடுத்தனர்.

