சாதனைப் பெண்களின் சரித்திரம் பேசும் நூல்

ஆ. விஷ்ணு வர்­தினி

வணி­கத்­து­றை­யில் கோலோச்­சும் இந்­தி­யப் பெண்­களை அங்­கீ­க­ரிக்­கும் 'டோயென்: வாய்ஸ், நாட் என் எக்கோ' நூலின் இரண்­டாம் பாகத்தை வெளி­யிட்­டுள்­ளது லிஷா­பெண்­கள் பிரிவு. அதன் 200ஆம் நிகழ்ச்சியாக அது அமைந்தது.

பத்­தாம் ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டும் இவ்வமைப்பு, பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த ஐம்­பது பெண்­க­ளின் அனு­ப­வங்­களை ஆவணப்­ப­டுத்­தி­யுள்ளது. லிஷா­ பெண்­கள் பிரிவை உரு­வாக்­கிய தரு­ணத்தை நினைவு­கூர்ந்தார் அதன் தலைவர் ஜாய்ஸ் கிங்ஸ்லி.

பெண்­க­ளின் தொழி­ல் ஆர்­வத்தைப் பெருக்கி அவர்­க­ளுக்­கான தளங்­களை அமைத்துத் தரும் எண்­ணத்­தில், வர்த்­தக சமூக நிகழ்ச்சி­கள், வர்த்­தகக் கலந்­து­ரை­யா­டல்­கள், பயி­ல­ரங்­கு­கள் எனத் தங்கள் அமைப்பு செயல்படுத்திய பல்வேறு உத­வித்­திட்­டங்­களை அவர் சுட்­டி­னார்.

"சிங்கப்பூரில் பெண் தொழி­ல் அதி­பர்­களின் எண்ணிக்கையும் அவர்களின் பன்­மு­கத்­தன்­மை­யும் அதி­க­ரித்து வரு­கிறது. ஆகவே, கூட்டு நிறுவனங்களுக்கும் விரி­வாக்­கங்­களுக்­கும் பல வாய்ப்­பு­கள் உள்­ளன," என்­றார் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தின் துணைத் தலை­வ­ரு­மான ஜாய்ஸ் கிங்ஸ்லி.

இணையத் தொழில்­கள், வீட்­டி­லி­ருந்து இயங்­கும் தொழில்­கள் என எல்லா வகைத் தொழில்­க­ளி­லும் கால்­ப­தித்­துள்ள இந்­தியப் பெண்­கள் லிஷா பெண்கள் பிரிவுடன் இணைந்து செயல்பட அவர் ஊக்­கு­வித்­தார்.

'டோயென்' நூலின் ஆசி­ரி­ய­ர் சேண்ட்ரா கிங்ஸ்லி, பெண்­க­ளுக்கு அடிப்­ப­டை­யா­க­வும் அடை­யா­ள­மா­க­வும் இருக்­கக்­கூ­டிய அன்­பும் பரி­வும் இந்­நூ­லின் அடி­நா­த­மாக அமைந்­துள்­ள­தெனக் குறிப்­பிட்­டார்.

"இந்த ­மு­யற்சி வருங்­காலத் தலை­மு­றை­யி­னரை ஊக்­கு­விக்கும் வகையில் அமைந்துள்ளது என்று கருதுகிறேன்," என்­றார் அவர்.

நூலில் இடம்­பெற்­றுள்ளோரில் ஒரு­வ­ர் 'ஏ ஸ்டார் அச்­சீ­வர்ஸ்' நிறு­வ­னத்­தின் நிறுவனரும் தலை­வருமான திருமதி மஹ்­ஜ­பீன்.

"பெண்­க­ளுக்­காக பெண்­களே வழங்­கும் இச்­சா­தனை விரு­தினைப் பெற்­றுக்­கொள்­வ­தில் பெருமை அடைகி­றேன். சாதா­ரணப் பெண்­களை­யும் சாதனைப் பெண்­க­ளாக்கி அவர்­க­ளின் உழைப்­பை அங்­கீ­கரித்துள்­ளது இந்­நி­கழ்ச்சி," என்­று அவர் கூறினார்்.

நேற்று முன்தினம் மரினா பே சேண்ட்­சில் நடை­பெற்ற இந்த நூல் வெளி­யீட்டு விழா­வில் கலந்­து­கொண்டு, நூலில் இடம்­பெற்றுள்ள சாதனைப் பெண்­க­ளுக்­குப் பரி­சு வழங்கிச் சிறப்பித்தார் அதி­பர் ஹலிமா யாக்கோப்.

2017ஆம் ஆண்­டில் தனது 100வது நிகழ்­வில் இந்­நூ­லின் முதல் பதிப்பை வெளி­யிட்­டது லிஷா பெண்­கள் பிரிவு. மனை­வி­, தாய், மகள் எனப் பல பரி­மா­ணங்­களை ஒருங்கே கையாளவேண்­டிய சிக்­கல்­களைக் கடந்து நடைபோடும் பெண் தொழி­ல­தி­பர்­க­ளின் உழைப்பை அங்­கீ­க­ரிக்­கும் வண்­ணம் அது வெளி­யி­டப்­பட்­டது.

பல­த­ரப்­பட்ட பின்­ன­ணி­க­ளைக் கொண்ட இந்­தியப் பெண் தொழில் அதி­பர்­க­ளின் பய­ணங்­களை உள்­ள­டக்­கிய அந்த நூல், ஒரு முதல் முயற்­சி­யாக அமைந்­தது. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!