நெகிழிப் பை பயன்பாடு

நெகிழிப் பை பயன்பாடு

2 mins read
3899032b-6b39-440a-a5a7-1d8606210850
-

லிட்­டில் இந்­தி­யா­வில் கண்­க­வர் காட்­சி­கள் தென்­பட்­டா­லும் மூலை முடுக்­கு­களில் நெகி­ழிப் (பிளாஸ்­டிக்) பைக­ளுக்­கும் பஞ்­ச­மில்லை.

ஒரு நாளில் நூறு பிளாஸ்­டிக் பைக­ள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கக் கூறு­கின்­ற­னர் சில கடைக்­கா­ரர்­கள். "ஒரே ஒரு பொரு­ளுக்­கும் பை எடுப்­பார்­கள். நிறைய பொருள் வாங்­கி­னால் கூடு­தல் பைகள் கேட்­பார்­கள்," என்கி­றார் வீரா டிரே­டிங் நிறுவனத்தின் பாலா.

"சொந்தப் பை கொண்டு­வருவோரை விரல்­விட்டு எண்­ண­லாம்," என்கிறார் சென்னை டிரே­டிங் கடை­க­ளின் உரி­மை­யா­ளர் ராம­முர்த்தி. கூட்­டம் அதி­க­மாக இருக்­கும் போது காய்­க­றி­களை பிளாஸ்­டிக் பையில் போட்டு அள­வி­டு­வ­து­தான் வச­தி­ என்று கருதப்படுகிறது.

ஒவ்­வோர் ஆண்­டும் சிங்­கப்­பூ­ரர்­கள் 820 மில்­லி­யன் பிளாஸ்­டிக் பைக­ளைக் கடைத்­தொ­குதி­களி­லி­ருந்து எடுத்­துச்­செல்­வ­தாக 2018ல் மேற்­கொள்ளப்பட்ட ஆய்­வில் தெரி­ய­வந்­தது.

"தேக்­கா­வில் இறைச்சி, காய்­கறி வாங்­கு­வேன். இறைச்சியில் இருந்து ரத்­தம் துணிப்­பை­யில் கசி­யக்­கூ­டும். அதை பிளாஸ்­டிக் பையில் வைத்­தால்­தான் சரி­யாக இருக்­கும்," என்கிறார் வாடிக்­கை­யா­ளர் சுராயா பேகம்.

சில­ருக்கு பல­நாள் பழக்­கத்தை மாற்ற முடி­ய­வில்லை. "பிளாஸ்­டிக் பைகளால் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு தீங்கு என்று தெரிந்­தா­லும் எப்­போ­தும் சொந்­தப் பை எடுத்­துச்­செல்­வது இய­லாது," என்றார் சுரேஷ். ‌

இருப்­பி­னும், "தேக்கா வரும்­போ­தெல்­லாம் காய்­கறி, மளி­கைப் பொருள்­க­ளுக்கு துணிப்பை எடுத்து வரு­வேன்," என்று சொல்­லும் மனோ­ஃபே­ரன், இறைச்சி, கோழி போன்­ற­வற்­றுக்கு பிளாஸ்­டிக் பை பயன்­ப­டுத்­து­கி­றார்.

அடுத்த ஆண்­டி­லி­ருந்து சில பல்­பொ­ருள் அங்­கா­டி­களில் ஒவ்­வொரு பிளாஸ்­டிக் பைக்­கும் ஐந்­தி­லி­ருந்து பத்து காசு வசூ­லிக்­கப்­படும்.

"ஏற்­கெ­னவே அத்­தி­யா­வ­சிய பொருள்­க­ளின் விலை எகி­றி­விட்­டது என்று குறை­கூ­றும் வாடிக்­கை­யா­ளர்­கள் பிளாஸ்­டிக் பைக்­கும் கட்­ட­ணம் செலுத்­து­வதை வர­வேற்­க­மாட்­டார்­கள். இங்கு முன்­னர் இப்­படி முயன்ற சில கடை­கள் பணம் இழக்க நேரிட்­டது," என்­கி­றார் ராம­மூர்த்தி.

"மேலை நாடு­களில் அனை­வரும் வாக­னம் ஓட்­டு­வ­தால் காகி­தப் பையில் பொருள்­களை வாங்­கிச் செல்­வது எளிது. இங்கு கடி­னம்," என்­றார் இல்­லத்­த­ரசி கலை­வாணி.

செலவு அதி­க­மா­னா­லும் எளி­தில் மக்­கக்­கூ­டிய பைக­ளைச் சில கடை­கள் வழங்குகின்­றன. சிங்­கப்­பூ­ரில் மறு­ப­ய­னீடு செய்­தல் அல்­லது எரி­யூட்­டப்­ப­டு­வ­தால் சுற்­றுச்­சூ­ழ­லுக்­குப் பெரிய தாக்­கம் இருக்­காது என்­கின்­ற­னர் வல்­லு­நர்கள்.

எஸ். விக்னேஷ்வரி