கட்டணம் உயர்த்திய கழிப்பறைகள்

கட்டணம் உயர்த்திய கழிப்பறைகள்

2 mins read
00058ed8-d447-4f2a-ae1c-93ea5dcac8ef
-

மக்­கள் அதி­கம் கூடும் லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் அவ்­வப்­போது கழி­ப்ப­றை­யைப் பயன்­ப­டுத்த வேண்­டிய சூழல் பலருக்­கும் ஏற்­ப­டு­வ­துண்டு.

தேக்கா சென்­டர், தேக்கா பிளேஸ், லிட்­டில் இந்­தியா ஆர்­கேட், லிட்­டில் இந்­தியா ரயில் நிலை­யம், உண­வ­கங்­கள், ஹனிஃபா, அப்­போ­லோ செல்­லப்­பாஸ் கடைத்­தொ­கு­தி­கள் போன்ற இடங்­களில் கழி­ப்பறை­கள் உள்­ளன. சில­வற்­றுக்­குக் கட்­ட­ணம் செலுத்த வேண்­டும், பல இடங்­களில் இல­வ­ச­மா­கப் பயன்­ப­டுத்­த­லாம்.

அண்­மை­யில் தேக்கா வட்டாரக் கழிப்பறை­க­ளுக்கான கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­டது. தேக்கா சென்­டர் கழி­ப்பறை­க­ளின் கட்­ட­ணம், கடந்த ஏப்­ரல் 1ஆம் தேதி முதல் 10 காசில் இருந்து 20 காசாக உயர்ந்தது.

நகர மன்­றத்­தின் நிர்­வா­கத்­தின்­கீழ் இயங்கும் இவை துணை ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. இவர்­கள் கழிப்பறை­யைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக கட்டணம் வசூ­லிக்­கி­றார்­கள்.

காலை 10 மணி­யி­லி­ருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இக்­கழி­ப்பறை­கள் ஒரு நாளில் நான்கு முறை சுத்­தம் செய்­யப்­ப­டு­கின்­றன.

தண்­ணீர் பயனீட்டுக் கட்டணம், சுத்­தம் செய்வதற்கான பொருள்­களின் விலை போன்­றவை அதி­க­ரித்­துள்ள நிலை­யில் கழிப்­ப­றைப் பயன்­பாட்­டுக் கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­ட­தாக கட்­ட­ணம் வசூ­லிக்­கும் பணி­யில் உள்ள கோபால் கூறி­னார். இருப்­பி­னும் சில இல­வச கழிப்­ப­றை­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவற்­றில் சுத்­த­மும் சுகா­தா­ர­மும் குறை­வா­கவே உள்­ளது.

உண­வு­டன் சேர்ந்து மது­பா­ன­மும் விற்­கப்­படும் 'கொடை கேன்­டீன்' உணவு விடு­தி­யில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கா­கக் கழிப்­ப­றை­கள் கட்­டப்­பட்­டுள்­ளன. கட்­ட­ணம் 30 காசு. இவற்­றி­லும் சுத்­தம் குறைவு என்­கின்­ற­னர் பய­னீட்­டா­ளர்­கள்.

சிராங்­கூன் சாலை­யின் முனை­யில் இருக்­கும் தேக்கா பிளேஸ் கடைத்­தொ­கு­தி­யின் இரண்­டாம் மாடி­யி­லும் அடித்­த­ளத்­தி­லும் இருக்­கும் பொதுக் கழிப்­ப­றை­களை மக்­கள் இல­வ­ச­மா­கப் பயன்­ப­டுத்­த­லாம்.

இவை சுத்­த­மா­கப் பேணப்­ப­டு­கின்­றன.

பொது­வாக கழிப்­பறை மெல்­லி­ழைத்­தாள், கட்­ட­ணக் கழிப்­ப­றை­க­ளின் வெளிப்­பு­றத்­தில் இருக்­கும். ஆனால் தேக்கா பிளே­சில் உள்ள ஒவ்­வொரு கழிப்­ப­றை­யி­லும் தாள்­களைக் காண முடி­கிறது.

சிறு குழந்­தை­கள், உடற்­கு­றை­உள்­ளோர், கண்­பார்வை இல்­லா­தோர் ஆகி­யோ­ரைக் கருத்­தில் கொண்டு இவை வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

முன்பு கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­பட்ட லிட்­டில் இந்­தியா ஆர்­கேட் கழிப்­ப­றை­க­ளைத் தற்­போது இல­வ­ச­மா­கப் பயன்­ப­டுத்த முடி­கிறது.

செய்தி, படம்:

பொன்மணி உதயகுமார்