நேரில் சந்தித்துத் தீர்வுகாண முயற்சி

நேரில் சந்தித்துத் தீர்வுகாண முயற்சி

1 mins read
ae1e9a54-d280-4609-8cb1-6929a6d5b0bb
-

2022 நவம்பர் மாதம் இந்தோனீசியாவின் பாலித்தீவில் ஜி-20 உச்சநிலை மாநாடு நடைபெற்றது. உக்­ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்­த­ பிறகு உலகத் தலைவர்கள் முதன் முறை­யாக இம்மாநாட்டில் ஒன்றுகூடினர்.

மாநாட்டிற்கு முன்னதாக சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இருதரப்பு சந்திப்பு நடத்தினர். மூன்றாண்டுகளில் முதல் முறையாக இரு நாடுகளுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. வர்த்தகப் பூசல், மனித உரிமை விவகாரங்கள், தைவா­ன் பதற்­றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.