சோவியத் யூனியன் கலைக்கப்பட்டபோது அதிபராக இருந்த மிக்கைல் கோர்பசேவ் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி தமது 91வது வயதில் காலமானார். 1985 முதல் 1991 வரை சோவியத் யூனியனின் அதிபராக பணியாற்றிய திரு கோர்பசேவ், பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் முக்கிய பங்காற்றினார். அதோடு அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அணு ஆயுதங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அவருடைய தலைமையில் பல்வேறு அரசியல், பொருளியல் சீர்திருத்தத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அவர் சோவியத் யூனியனில் இருந்த கடுமையான கட்டுப்பாட்டுகளை அகற்றினார்.
சோவியத் சீர்திருத்தச் செம்மல்
1 mins read
-

