காற்பந்து சகாப்தம்

காற்பந்து சகாப்தம்

1 mins read
64ca8950-71dd-4753-91f8-53a6ae6feeb5
-

காற்­பந்து சகாப்­த­மும் பிரே­சிலின் முன்­னாள் நட்­சத்­திர வீர­ரு­மான பெலே 2022 டிசம்பர் 29ஆம் தேதி தமது 82வது வயதில் கால­மா­னார். சிறு­நீ­ர­கப் பிரச்­சினை, பெருங்கு­டல் புற்­று­நோய் ஆகி­யவற்றுக்காக அவர் சிகிச்சை பெற்று வந்­தார். பெலே­யின் இறப்பு உல­கெங்­கும் உள்ள காற்­பந்து ரசி­கர்­களை மீளாத்துய­ரில் ஆழ்த்­தி­யுள்­ளது. 1958ஆம் ஆண்டு பிரே­சில் முதன்­மு­றை­யாக உல­கக் கிண்­ணத்தை ஏந்­தி­யது. அதற்கு முக்­கிய கார­ண­மாக பெலே இருந்­தார். நான்கு ஆட்­டங்­களில் அவர் ஆறு கோல்­கள் போட்­டார். அப்­போது அவ­ருக்கு 17 வயது.