31 உயிர்களைப் பலிவாங்கிய மலேசிய நிலச்சரிவு

31 உயிர்களைப் பலிவாங்கிய மலேசிய நிலச்சரிவு

1 mins read
f19dc994-8164-40ac-842c-479b7b2866fb
-

மலே­சி­யா­வின் பாத்­தாங் காலி ஜெண்­டிங் மலை­யில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்­கா­னிக் பண்­ணை­யில் 2022 டிசம்­பர் 16ஆம் தேதி நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. மலே­சி­யா­வில் 30 ஆண்­டு­களில் நிகழ்ந்த ஆக மோச­மான மூன்­றா­வது நிலச்­ச­ரிவு இது. கோலாலம்­பூ­ரில் உள்ள தொடக்­கப் பள்­ளி­யைச் சேர்ந்த 11 பேர் உள்­ளிட்ட 31 பேர் இந்த நிலச்­ச­ரி­வில் உயி­ரி­ழந்­த­னர். இவர்­களில் ஆறு பேர் ஆசி­ரி­யர்­கள், மூவர் பள்­ளிக் குழந்தை­கள். உயிர் பிழைத்தவர்களில் சிலர், நிலத்துக்கடியில் ஐந்து முதல் 10 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

டிசம்­பர் 30ஆம் இந்­தப் பள்­ளி­யில் நடத்­தப்­பட்ட நினை­வஞ்­ச­லிப் பிரார்த்­த­னை­யில் ஏரா­ள­மான பெற்­றோர்­களும் பொது­மக்­களும் கலந்­து­கொண்­ட­னர். உற­வு­களை இழந்த பல­ரும் கண்­ணீர்­மல்­கக் காணப்­பட்­ட­னர்.

மலேசியாவில் 1993ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி கோலாலம்பூரின் அருகேயுள்ள புக்கிட் அந்தாராபங்சாவில் இருந்த தனியார் கூட்டுரிமை வீடுகள் சரிந்து விழுந்த சம்பவமே ஆக மோசமான நிலச்சரிவாகும். அப்போது அந்தச் சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.