கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது ராணுவத் தாக்குதலைத் ரஷ்யா தொடங்கியது. ரஷ்யா தனது படையெடுப்புக்கு நேட்டோ நாடுகளின் விரிவாக்கம், உக்ரேன் நாடு அங்கு இருக்கும் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு உள்ள இனப் பேரழிவு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களைக் கூறியது. உயிர்ச்சேதம், வாழ்வாதாரப் பாதிப்பு, பொருளியல் சீர்குலைவு, மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அவலநிலை என உக்ரேன் மக்கள் துயருற்று வருகின்றனர். மேலும் உலக அளவில் இப்போர் காரணமாக பணவீக்கம் அதிகரிப்பு, வர்த்தகச் செலவுகள் உயர்வு, விநியோகத் தொடர் இடையூறுகள், உணவுத் தட்டுப்பாடு போன்ற பல்வேறு இன்னல்கள் உருவெடுத்தன. குறிப்பாக, உலகில் ஏற்றுமதியாகும் கோதுமையில் 29% ரஷ்யா, உக்ரேன் நாடுகளிலிருந்து வரும் சூழலில் இப்போரினால் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போர் குறித்து, அனைத்துலக அளவில் எந்தவொரு நாட்டின் அரசுரிமையும் அரசியல் சுதந்திரமும் வட்டார ஒருங் கிணைப்பும் மதிக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை சிங்கப்பூர் உறுதிசெய்தது.
உலக அமைதிக்கு சவால் விடுக்கும் உக்ரேன்-ரஷ்ய போர்
1 mins read
-

