பாகிஸ்தானில் பிரதமராகப் பதவி ஏற்ற எவரும் இதுவரை தமது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை. அந்த வரலாறு 2022லும் தொடர்ந்தது. 2018 ஆகஸ்ட் 18ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பை ஏற்ற திரு இம்ரான் கான் 2022 ஏப்ரல் 10ஆம் தேதி பதவி விலகினார். ஆளும் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் பதவியைத் துறந்த இவர் மீது 2022 நவம்பர் 3ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கொலை முயற்சியில் காயத்துடன் தப்பினார் திரு இம்ரான்.
திரும்பாத வரலாறு
1 mins read
-

