இந்தியாவின் அதிபராக திருமதி திரௌபதி முர்மு 2022 ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்றார். பழங்குடி தலை முறையைச் சேர்ந்த ஒருவர் இந்த உச்ச பதவியில் அமர்த்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. அத்துடன் இந்தியாவின் 2வது பெண் அதிபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சமூக நலனுக்காகப் பாடுபட்டால் சாமானிய மனிதரும் அதிபர் ஆகலாம் என்பது இவர் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுக்குள் தமது அம்மா, கணவர், இரு மகன்கள், தம்பி ஆகியோரை அடுத்தடுத்து இழந்த இவர், சோகத்தின் பிடியிலும் மக்கள் பணியை இடை விடாது தொடர்ந்து பெண்க ளுக்கும் பழங்குடி
இனத்தவருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார்.

