பஷீர் கிரா­ஃபிக் புத்­த­கக்­கடையின் அடை­யா­ளம்

பஷீர் கிரா­ஃபிக் புத்­த­கக்­கடையின் அடை­யா­ளம்

2 mins read
47e463f4-a613-4419-ba3c-afcba21cb6c1
-

நூல்­களைக் கையில் ஏந்தி வீடு வீடா­கச் சென்­ற­து­டன் அலு­வ­ல­கங்­க­ளுக்­கும் சென்று விற்று வந்த தம்­மு­டைய தந்­தை­யின் தொழி­லைப் புதுப்­பித்து, கிட்­டத்­தட்ட முப்­பது ஆண்­டு­க­ளாக நடத்தி வரு­கி­றார் திரு அப்­துல் நாஸிர். வடி­வ­மைப்பு, வரை­கலை ஓவிய நூல்­களை விற்­கும் இக்­கடை­யின் தனித்­து­வ­மான அடை­யா­ளமே அதன் நிலைத்­தன்­மைக்­கான முக்­கி­ய கார­ண­மெ­னக் கரு­து­கி­றார் நாஸிர்.

கைய­டக்­கச் சாத­னங்­க­ளால் எல்லா தக­வல்­களும் நமது கையி­லேயே அடங்­கி­விட்­டன. இத­னால் தற்­கா­லத்­தில் தாள் அட்டை புத்­த­கங்­க­ளுக்­கான தேவை குறைந்து உள்­ளது. மாண­வர்­கள், வடி­வ­மைப்­பா­ளர்­கள், கட்­ட­டக்­ க­லை­ஞர்­கள் ஆகி­யோ­ருக்கு அறி­வுக்­கூ­ட­மாக விளங்கி வந்த பஷீர் கிரா­ஃபிக் புத்­த­கக்­கடை, தற்­போது முன்­பி­ருந்த அள­வுக்கு நாடப்­ப­டு­வ­தில்லை. இருப்­பி­னும், மக்­க­ளின் கைக்கு அதி­கம் எட்­டாத சஞ்­சி­கை­கள், காலப்­போக்­குக்கு ஏற்ப மாறிய புத்­த­கத் தொகுப்­பு­கள் இப்­புத்­த­கக்­கடையில் கிடைப்பதால் தமது வர்த்­த­கத்­தின் தடத்தை மேலும் ஆழப் பதித்­துள்­ள­தாக தெரி­வித்­தார் நாஸிர்.

"என் அப்­பா­வின் காலத்­தி­லும் என் சிறு­வ­யது நாள்களி­லும் எங்கள் வாடிக்­கை­யா­ளர் ­கள் அளித்த ஆதரவால் ஓடிய வியாபாரம் இப்போது பர­ப­ரப்­பாக இல்­லை­யென்­றா­லும் எங்­க­ளின் ஊட­கத் தளங்­கள் பெரி­தும் கைக்­கொ­டுத்­துள்­ளன," என்­றார் 58 வயதாகும் நாஸிர்.

ராஃபிள்ஸ் பிளேஸ் பகு­தி­யில் புத்­த­கங்­களை­யும் சஞ்­சி­கை­க­ளை­யும் 1980களில் விற்று வந்­தார் அப்­துல் நாஸி­ரின் தந்­தை­யான திரு பஷீர் அஹ­மது. நேரில் சென்று புத்­த­கங்­களை விற்­கும் 'ஹாக்­கர்' புத்­த­கக்­கடை முறை அக்­கா­லத்­தில் பிர­ப­ல­மாக இருந்­தது. விளம்­பர நிறு­வ­னங்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்­கேற்ப வடி­வமைப்பு சார்ந்த புத்­த­கங்­களை இறக்­கு­மதி செய்­யத் தொடங்­கி­னார் திரு பஷீர். அவை விலை­உயர்ந்­த­வை­யா­க­வும் அதி­கம் தேவை­யுள்­ள­வை­யா­க­வும் இருந்­த­தால் தொடர்ந்து அவற்றை விற்று வந்­தது வியா­பா­ரத்­தைச் செழிக்­க­வைத்ததுடன் புத்­த­கக்­க­டைக்­கு ஒரு தனி அடை­யா­ளத்­தை­யும் தந்தது.

நாஸிர் தனது பத்­தொன்­ப­தாம் வய­தில் தந்தையின் தொழி­லில் சேர்ந்­து­கொண்­டார். தோ பாயோ­வில் ஒரு வாடகை வீட்­டி­ல்­இருந்து இயங்­கிக் கொண்­டி­ருந்த தங்­க­ள் வியா­பா­ரத்­தைப் பற்றி அண்­டை­வீட்­டார் ஒரு­வர் புகார் அளித்ததால், 1990களில் பிராஸ் பாசா வளா­கத்­தில் கடை­ திறக்­கப்­படவேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது என்றார். அதைத் தொடர்ந்து, உல­க­ள­வில் தொழிலை நிறுவ பல முயற்­சி­களை அவர் மேற்­கொண்­டார்.

ஃபிராங்­ஃபர்ட் புத்­த­கக் கண்­காட்­சிக்­குப் பல­முறை சென்று வந்த நாஸிர், வெளி­யூர் புத்­தக விற்­ப­னை­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துத் தொழிலை விரிவாக்கினார். ஜகார்த்தா, ஹாங்­காங், பேங்­காக் ஆகிய இடங்களில் புத்­த­கக்­கடை­களை நிறு­வி­ய­தால், உல­க­ள­வில் ஏரா­ள­மா­னோ­ருக்கு இப்­புத்­த­கக்­க­டை­யின் பெயர் எட்­டி­யது. தேவை குறை­வா­லும் மனி­த­வளத் தட்­டுப்­பா­ட்டா­லும் தற்­போது சிங்­கப்­பூர், கோலா­லம்­பூர் என இரண்டு இடங்­களில் மட்­டும் இயங்கி வரும் பஷீர் கிரா­ஃபிக் புத்­த­கக்­கடை, அண்­மைய காலத்­தில் விளம்­ப­ரப் புகைப்­ப­டங்­கள் எடுத்­துக்­கொள்ள விரும்­பும் இளை­யர்­க­ளால் நாடப்­ப­டு­கிறது.

"கிட்­டத்­தட்ட முப்­பது ஆண்­டு­க­ளாக மாற்­றப்­ப­டாத பெயர்ப்­ப­ல­கை­யும் புத்­தக அல­மா­ரி­களும் இவர்­களை ஈர்க்­கும் என நான் எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால், இத்­த­கை­ய­தொரு கடையை இவ்­வ­ளவு நாள் வெற்­றி­க­ர­மாக நடத்­தி­யதே எனது மிகப்­பெ­ரிய சாத­னை­யாக கரு­து­கி­றேன்," என்­றார் திரு நாஸிர்.