புதுவாழ்வு தரும் உறுப்பு தானம்

அனுஷா செல்வமணி

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என நம் வாழ்க்கை கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிடுகிறது. ஆயினும், ஒருவரின் முடிவு, இன்னொருவருக்குத் தொடக்கமாக இருக்கலாம். அவ்வாறு சிலரின் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் ஆற்றலுடைய, உயர்ந்த செயல்தான் உறுப்பு தானம். அறிவியல் பெரிதும் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றை மற்றொருவரின் உடலில் பொருத்த முடிகிறது. இத்தகைய சூழலில், உறுப்பு தானம் பற்றி மக்களிடையே எந்த அளவிற்கு விழிப்புணர்வு உள்ளது என்பதை அறிந்துவந்தது தமிழ் முரசு.

ஆறு மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்ட சிங்கப்பூரில் உடலுறுப்பு தானத்­திற்­கான விழிப்­பு­ணர்வு மிகக் குறை­வா­கவே உள்­ளது. மற்­றப் பெரிய நாடு­களுடன் ஒப்­பி­டு­கை­யில் ஒரு சிறிய நாடாக இருக்­கும் சிங்­கப்­பூ­ரில் 40 பேரில் பாதிப் பேர் மட்­டுமே உறுப்­பு தானத்திற்கு தகு­தி­யா­ன­வர்­க­ளாக இருப்­பர் என்­கி­றார் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யின் கல்­லீ­ரல் மாற்று அறுவை சிகிச்­சைத் திட்­டத்­தின் தலை­வரும் இணைப் பேரா­சி­ரி­ய­ரு­மான பிரேம ராஜ் ஜெய­ராஜ் (இடப்படம்)

அவ­சர சிகிச்சை தேவைப்­படு­வோர் அல்­லது கொடிய நோய்­களால் பாதிக்­கப்­பட்­டுள்­ளோ­ருக்கு உறுப்பு தானம் அவ­சி­ய­மா­கி­வி­டு­கிறது. மூளைச்­சாவு அடைந்­து­போ­வோ­ரி­ட­மி­ருந்­தும் நல்ல உடல்­ந­லத்­து­டன் இருப்­போ­ரி­ட­ம் இ­ருந்­தும் உறுப்பு தானம் பெறு­வதுண்டு.

மாற்று அறுவை சிகிச்­சைக்­கான உறுப்பு பொது­வாக அந்த நோயா­ளி­யின் குடும்­பத்­தி­ன­ரி­ட­ம் இருந்து வரும். நோயா­ளி­யு­டன் தொடர்­பில்­லா­த­வர்­களும் உறுப்­பு தானமளிக்க ஊக்­கு­விக்­கப்­ப­டு­கிறார்­கள் என்­றார் டாக்டர் பிரேம ராஜ்.

கொவிட்-19 தொற்று பர­வத் தொடங்­கிய பிறகு, உறுப்பு தானம் வழங்க முன்­வ­ரு­வோ­ரின் எண்­ணிக்கை சரிந்­து­விட்­ட­தா­கக் கூறு­கி­றார் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் ‘ஹெப­டோ­பி­லி­யரி-பேன்­கிரி­யாட்­டிக்’ பிரி­வின் மூத்த ஆலோ­ச­க­ரும் இணைப் பேரா­சிரி­ய­ரு­மான ஸ்ரீதர் கண­பதி ஐயர் (மேல்­ப­டம்).

உறுப்­பு தானமளிக்கத் தயங்கு­வோருக்கும் தகுந்த மன­நல ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­கிறது.

சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை பற்­றிய தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொண்ட டாக்­டர் ஸ்ரீதர், சிங்­கப்­பூ­ரில் சிறு­நீ­ர­கம் தான­ம் அ­ளிக்க உயி­ரு­டன் இருப்­ப­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தா­லும் அறுவை சிகிச்­சைக்கு ஒரு­வர் சரா­ச­ரி­யாக ஒன்பது ஆண்­டு­கள் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது என்­றார்.

‘பிறருக்கு அந்நிலை வரவேண்டாம்’

முது­மைக்­கால மற­தி­நோய்க்­குத் தகுந்த சிகிச்­சை­யைக் கண்­டு­பிடிக்க வேண்­டு­மென்ற முனைப்­பில் மூளைத் திசு தானம் செய்ய முன்­வந்­திருக்கிறார் திரு­வாட்டி லலி­தாம்மா நாயர், 61 (படம்).

இவரின் 73 வயது கண­வர் கடந்த 12 ஆண்­டு­க­ளாக முது­மைக்­கால மற­தி­நோ­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்.

அடிக்­கடி ரத்த நன்­கொடை அளிக்­கும் திரு­வாட்டி லலி­தாம்மா, ஈராண்­டு­க­ளுக்கு முன்பு ஒரு­முறை இணை­யத்­தில் அது­பற்­றிப் படித்­த­போது ‘பிரெய்ன் பேங்க்’ எனும் அமைப்பு பற்றி அறிய நேர்ந்­தது. அந்த அமைப்­பின் மூலம் ஒரு­வர் மூளைத் திசு தானத்­திற்­குப் பதிவுசெய்­ய­லாம் என்­பதை இவர் அறிந்­தார்.

இப்­போது இருக்­கும் சிகிச்­சை­கள், நோய்க்­கான அறி­கு­றி­களை மட்­டும் குறைக்க வழி­வ­குக்­கின்­றன. மற­தி­நோ­யால் தம் கண­வர் சிர­மப்­ப­டு­வ­தைக் கண்ட திரு­வாட்டி லலி­தாம்மா, தமது மூளைத் திசுக்­க­ளை­யும் அறி­வி­யல் ஆராய்ச்­சிக்­குத் தர முடிவுசெய்­தார்.

“நாம் இறந்தபின் நம் உடல் அதன் பயனை இழந்­து­வி­டு­கிறது. பய­னற்­றுப் போவ­தற்­குப் பதி­லாக இது­போன்ற ஓர் உன்­னத நோக்­கத்­துக்­காக என் மூளைத் திசுக்­களைத் தானம் அளிப்பது மன­நிறைவு தருகிறது,” என்­றார் திரு­வாட்டி லலி­தாம்மா.

இவரது ஊக்­கத்தால் இப்­பொழுது அவரின் மகளும் மூளைத் திசு தானத்திற்கு தம் பெயரைப் பதிவுசெய்­துள்­ளார்.

வாடிய பூங்கொடி மாறினாள் இப்படி!

குடும்­பத்­தின் கடைக்­குட்­டி­யான தீக்‌ஷா ஆனந்த், 2008ஆம் ஆண்­டில் பிறந்­த­போது நல்ல உடல்­ந­லத்­து­டன் இருந்­தாள். ஆனா­லும், தற்­போது 14 வய­தில் இவ­ரது வாழ்க்­கையை கொடிய நோய் ஒன்று புரட்­டிப் போட்­டு­விட்­டது.

தீக்‌ஷாவின் அண்­ணன் சத்­யா­விற்கு நான்கு வய­தா­ன­போது அவனுடைய சிறு­நீ­ர­கங்­கள் செய­லி­ழக்­கும் நிலை­யில் இருந்ததை மருத்­து­வர்­கள் கண்­ட­றிந்­த­னர்.

‘எஃப்எஸ்­ஜி­எஸ்’ எனும் அரிய வகை மர­பி­யல் சிறு­நீ­ரக நோயால் சத்யா பாதிக்­கப்­பட்­டு இ­ருந்­தது உறு­தி­யா­னது. அதாவது, சிறு­நீ­ர­கத் திசுக்­கள் பாதிக்­கப்பட்டு, அதனால், சிறு­நீ­ர­கப் பகு­தி­யில் வடு ஏற்­பட்டு, ரத்­தத்­தில் இருந்து கழி­வு­க­ளைப் பிரிக்­கும் தன்­மையை சிறு­நீ­ர­கம் இழந்­து­வி­டு­வதை இந்நோய் குறிக்­கிறது.

சத்யா ஆறு வய­தாக இருந்­த­போது தீக்‌ஷா பிறந்­தார். தம் மக­னைப் போல் தீக்­‌ஷா­வுக்­கும் சிறு­நீ­ர­கக் கோளாறு இருக்­கக்­கூ­டும் என்ற அச்­சத்­தில் தாயார் திரு­வாட்டி புஷ்பா, இரண்டு வயது தீக்­‌ஷா­விற்கு வீட்­டி­லேயே சிறு­நீர் ‘டிப்ஸ்­டிக் (Dipstick)’ பரி­சோ­தனை செய்து பார்த்­தார்.

சோதனை முடி­வில் தீக்­‌ஷா­வின் சிறு­நீ­ரில் புர­தம் இருப்­பதை உணர்ந்த திரு­வாட்டி புஷ்பா, மருத்­து­வரை நாடி­னார். சத்­யா­வுக்கு இருந்த அதே சிறு­நீ­ர­கக் கோளாற்­றால் தீக்­‌ஷா­வும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது உறு­தி­ப் படுத்தப்பட்டது.

தீக்­‌ஷா­வுக்கு ஏழு வய­தா­ன­போது அண்­ணன், தங்கை இரு­வ­ரின் சிறு­நீ­ர­கங்­களும் ஒரே நேரத்­தில் செய­லி­ழந்­தன.

தீக்‌ஷா வாரம் மூன்று முறை கிட்­டத்­தட்ட நான்கு மணி நேரத்­திற்கு, தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் சிறு­வர் சிறு­நீ­ரக நிலை­யத்­தில் சிறு­நீ­ரக ரத்த சுத்­தி­க­ரிப்பு சிகிச்­சைக்­குச் சென்­றார். ரத்­தத்­தில் இ­ருந்து கழி­வு­களையும் நீரை­யும் அகற்­றும் ‘ஹீமோ­ட­யா­லி­சிஸ்’ எனும் ரத்­தச் சுத்­தி­க­ரிப்பு தீக்­‌ஷாவிற்கு மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஒவ்­வொரு முறை­யும் தீக்‌ஷா ரத்­தச் சுத்­தி­க­ரிப்­புச் சிகிச்­சைக்­குச் செல்­லும்­பொ­ழுது, தீக்­‌ஷா­வின் கழுத்­தில் இருக்­கும் நரம்பு­களில் வடி­கு­ழாய்­கள் செரு­கப்­பட்­டன. அதற்­கு­முன் நீச்­சல் அடித்­தல், மரம் ஏறு­தல், அண்­ண­னு­டன் காற்­பந்­தாட்­டம் போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட தீக்‌ஷா, ரத்­தச் சுத்­தி­க­ரிப்பு தொடங்­கி­ய­பின் சோர்ந்து போனார்.

அடிக்­கடி சோர்வு அடைந்­த­தா­லும் பசி­யின்­மை­யி­னா­லும் தீக்‌ஷா மெலிந்­து­போ­னார். சத்யா ஏற்­கெ­னவே மாத்­தி­ரை­களை உட்­கொண்டு வந்­த­தால், வயிற்­றுப் பகு­தி­யில் வடி­கு­ழாய்­களைச் செருகி, கழி­வு­களை அகற்­றும் ‘பெரி­டோ­னி­யல் (Peritoneal) டயா­லி­சிஸ்’ சிகிச்­சைக்­குச் சென்­றார்.

தீக்­‌ஷா­வும் சத்­யா­வும் தங்களுக்கு மாற்றுச் சிறுநீரகம் கிடைத்துவிடும் என்று நம்­பிக்­கை­யு­டன் காத்­தி­ருந்­த­னர். இரு­வ­ருக்­கும் ஒரே ‘பி+’ ரத்த வகை.

பெற்­றோர் இரு­வ­ரும் தங்­களின் சிறு­நீ­ர­கத்­தைத் தான­ம் அ­ளிக்க முன்­வந்­த­போ­தும் இது ஒரு மர­பி­யல் நோய் என்­ப­தால் தான­ம­ளிக்­கும் தகுதி அவர்­களுக்கு இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இறந்த குழந்தை ஒன்­றின் சிறு­நீ­ர­கங்­கள் மாற்று அறுவை சிகிச்­சைக்­காக கிடைக்­கக்­கூடிய வாய்ப்பு உள்­ளதை மருத்­து­வர் 2018ஆம் ஆண்டு தெரி­வித்­தார்.

பரி­சோ­தனை முடி­வில், குழந்­தை­யின் சிறு­நீ­ர­கம், தீக்­‌ஷா­விற்­குப் பொருத்­த­மாக இருக்­கும் என்­பதை மருத்­து­வர்­கள் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

மக­னுக்­குப் பொருத்­த­மான சிறு­நீ­ர­கங்­கள் கிடைக்­க­வில்லை என்ற கவலை ஒரு பக்­கம் இருந்­தா­லும் தங்­கள் மக­ளு­டைய வாழ்க்கை மீண்­டும் ஒளி­பெற பெற்­றோ­ரான ஆனந்த் தம்­ப­தி­யி­னர் காத்­தி­ருந்­த­னர்.

கடந்த 2018ஆம் ஆண்டு தனது 10 வய­தில் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சை­வழி புதுச் சிறு­நீ­ர­கங்­க­ளைப் பெற்­றார் தீக்‌ஷா. இது அவ­ரது வாழ்க்­கை­யில் பல மாற்­றங்­களைக் கொண்டு வந்து, வாழ்வை மேம்­ப­டுத்­தி­யது.

தீக்­‌ஷா­வுக்­குப் புதிய சிறு­நீ­ர­கம் கிடைத்­தா­லும் அவர் நாள்­தோ­றும் 30 மாத்­தி­ரை­களை உட்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

“இருண்­டு­போன எங்­கள் வாழ்­வில் ஒளி­யூட்­டும் வகை­யில் இருந்­தது தீக்­‌ஷா­வின் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை. என்­னு­டைய மகள் பிற பிள்­ளை­கள்­போல வாழ்­வ­தைப் பார்க்­கும்­போது என் மனம் பூரிப்­ப­டை­கிறது,” என்று ஆனந்­தக் கண்­ணீர் வடித்­தார் திரு­வாட்டி புஷ்பா.

இன்­னும் ‘பெரிட்­டோ­னி­யல் டயா­லி­சிஸ்’ செய்­து­கொண்­டு­தான் வரு­கி­றார், சத்யா. தங்­கை­யைப்­போல் தனக்­கும் ஒரு­நாள் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை நடக்­கும் என்ற நம்­பிக்­கை­யில் வாழ்ந்து வருகிறார் இப்­போது 20 வய­தா­கும் சத்யா.

“என் குடும்­பத்­தா­ரும் நண்­பர்­களும் எனக்கு ஆத­ர­வாக இருந்­தார்­கள். என் தாயார் இரவு­ப­கல் பாராது என்­னை கவனித்­துக்­கொண்­டார். அந்­த­நோய் என் வாழ்­வைப் புரட்­டிப் போட்­டா­லும் எந்த ஒரு துன்­பத்­தி­லி­ருந்­தும் என்னால் மீண்­டு­வர முடி­யும் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்கிறது,” என்­றார் தீக்‌ஷா.

முழு உடலும் அறிவியலுக்கே!

தற்­போது 60 வய­தா­கும் திரு­வாட்டி ஆனந்த லதா (படம்), தமது 35 வய­தில் கண­வரை இழந்­தார். கண­வ­ரின் உடல்­ந­லம் குன்­றி­ய­போது, அவ­ரு­டைய உற­வி­னர்­கள் யாரும் உத­விபுரிய முன்­வ­ர­வில்லை. இருப்பினும், இறு­திச் சடங்­கு­களில் பங்­கேற்க அவர்­கள் ஆர்­வம் காட்­டி­ய­தைக் கண்ட திரு­வாட்டி லதா, இறு­திச் சடங்­கு­க­ள் மீதான நம்­பிக்­கையை இழந்­தார்.

அத­னால், தாம் இறந்­த­பின், தம் மகன்­கள் இரு­வ­ரும் தமக்கு இறு­திச் சடங்­கு­கள் செய்­யக்­கூடாது என்று அப்போதே இவர் உறுதியாக முடிவெடுத்துவிட்டார்.

“இறந்த பிறகு ஒரு­வ­ரது உட­லைப் பார்த்­துக்­கொண்டு கண்­ணீர் வடிப்­ப­தால் எந்தப் பய­னு­ம் இல்லை,” என்­கிறார் இவர்.

திரு­ம­ண­மாகி கேர­ளா­வில் இருந்து சிங்­கப்­பூர் வந்த இவ­ருக்கு சிறு­வ­ய­தி­லி­ருந்தே பிற­ருக்­குத் தொண்டு செய்­ய­வேண்­டும் என்ற ஆர்­வம் இருந்து வந்­தது.

உடல்­ந­லக் கோளா­று­க­ளால் இவ­ரால் ரத்த நன்­கொடை அளிக்­க­வும் நீண்ட நேரம் நிற்­க­வும் முடி­யாது. ஆனா­லும், வேறு எவ்­வ­ழி­யி­லே­னும் பிற­ருக்கு உதவ வேண்­டும் என்று இவர் விரும்­பி­னார். தம் நண்­பரின் பரிந்­து­ரை­யில், ‘MTERA’ எனும் மருத்­து­வக் கல்வி ஆராய்ச்­சிச் சட்­டத்­தின்­கீழ், தாம் இறந்தபின் தமது முழு உட­லை­யும் மாற்று அறுவை சிகிச்சை, மருத்­துவ ஆராய்ச்சி, கல்வி போன்ற நோக்­கங்­க­ளுக்­காக தான­மாக வழங்க இவர் பதி­வு­செய்­து­விட்­டார்.

திரு­வாட்டி லதா­வின் மூத்த மக­னும் தமது முழு உட­லையும் தானமாக வழங்க இருக்கிறார்.

20 ஆண்டுகளில் 215 முறை ரத்த தானம்

மனி­த­வள, செயல்­பாட்­டுத் துறை­யில் பணி­புரி­யும் திரு கதி­ரே­சன் பக்­கி­ரி­சா­மிக்கு (படம்) 39 வயது. கடந்த 20 ஆண்­டு­களில் 215 முறை ரத்த தானம் செய்­துள்ள இவர், அந்த உன்­ன­தச் செய­லைத் தம் வாழ்­நாள் முழு­வ­தும் தொடர விரும்­பு­கி­றார்.

தம்­மு­டைய 18 வய­தி­லி­ருந்து, தம் தந்தை ரத்த தானம் தரச் சென்­ற­போ­தெல்­லாம் இவ­ரும் கூடவே சென்­று­வந்­தார்.

மும்மாதங்களுக்கு ஒரு­முறை ரத்த தானம் அளித்து வந்த இவர், தமது 19வது வய­தி­ல் இருந்து ‘எஃபிரெ­சஸ் (Apheresis)’ தான­ம­ளிக்­கத் தொடங்­கி­னார்.

ரத்­தத்­தில் இருக்கும் ‘பிளேட்­லெட்ஸ்’, ‘பிளாஸ்மா’ போன்­றவை இந்த எஃபிரெ­சஸ் தானத்­தின்­வழி பெறப்­படும்.

ஊசி­யைக் கண்­டால் பயம், ரத்­தத்­தைப் பார்த்­தால் மயக்­கம் வரும் என்று கார­ணம் அடுக்­கு­வதை விட்­டு­விட்டு, அந்த அச்­சத்­தைப் போக்கி, பிற­ருக்கு எவ்­வாறு உத­வலாம் எனச் சிந்திக்க வேண்டும் என்­கி­றார் இவர்.

“ஊசியைக் கண்டு பயப்படும் நானே இவ்வளவு காலமாக ரத்த தானம் செய்­யும்­போது பிற­ரா­லும் அது முடி­யும் என நம்­பு­கி­றேன்,” என்று கூறும் திரு கதிரேசன், சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் வாழ்­நாள் பதக்­கத்­தை­யும் பெற்­றுள்­ளார்.

ரத்த தானம் செய்­யும் பழக்­கத்தை சிறு­வ­ய­தி­லேயே விதைக்க வேண்­டு­ம் என்று இவர் வலி­யுறுத்து­கி­றார்.

‘ரத்தம் தந்துவிட்டேன், இப்போது இதனையும் தருகிறேன்’

சிறு­பான்மை இனத்­த­வர் எலும்பு மஜ்ஜை நன்­கொடை அளிக்க முன்­வ­ரு­வ­தில்லை என்­பதை அண்­மை­யில் எலும்பு மஜ்ஜை ((Bone Marrow) தான­ம­ளிக்­கும் திட்­டம் கண்­ட­றிந்­தது.

இது­கு­றித்த விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்த ‘மேட்ச் ஃபார் லைஃப் 2022’ எனும் நன்­கொடை­யா­ளர் சேர்ப்புத் திட்­டத்திற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

சிறிய அள­வில் வலி இருந்­தா­லும் எலும்பு மஜ்ஜை தானம் இன்­னொ­ரு­வ­ரின் உயி­ரைக் காப்­பாற்­றப்போகிறது என்­பதை நினைக்­கும்­போது மன­நி­றை­வாக உள்­ளது என்­கி­றார் செய்­முறை தொழில்­நுட்­பர் ஆனந்த் திரு­நா­வுக்­க­ரசு, 39 (படம்).

முதன்முறையாக எலும்பு மஜ்ஜை தானம் செய்தபின், அதே நோயா­ளிக்கு மீண்­டும் எலும்பு மஜ்ஜை தேவைப்­ப­டவே ஒரு மாதத்­திற்­குள் 2வது முறை­யா­க­வும் அதை வழங்­கி­னார் திரு ஆனந்த்.

தேவைப்­பட்­டால் மீண்­டும் எலும்பு மஜ்ஜை தானம் செய்­யத் தயா­ராக இருக்­கும் இவர், பல ஆண்­டு­க­ளாக ரத்த தான­மும் செய்து வரு­கிறார். சிங்­கப்­பூர் இந்­திய சமு­தா­யத்­தி­ன­ரி­டையே எலும்பு மஜ்ஜை தானம் குறித்த விழிப்­பு­ணர்வு அதிகரிக்க வேண்டும் என்பது இவரது விருப்பம்.

உறுப்பு தானம்: நடப்பு நிலவரம்

எலும்பு மஜ்ஜை நன்­கொ­டை­யா­ளர் திட்­டத்­தின்­கீழ், நம் சமு­தா­யத்­தில் 9% இந்­தி­யர்­கள் மட்­டுமே எலும்பு மஜ்ஜை நன்­கொ­டை­யா­ளர்­க­ளா­கப் பதி­வு­செய்­துள்­ள­னர்.

உடற்­கூ­றாய்­விற்­குப்­பின் மனித உடம்­பி­லி­ருந்து எடுக்­கப்­படும் மூளைத் திசுக்­களை அறி­வி­யல் ஆராய்ச்­சிக்­குப் பயன்­ப­டுத்தி வரு­கிறது ‘தி பிரெய்ன் பேங்க் சிங்­கப்­பூர்’ அமைப்பு.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் வரை­யி­லான தர­வு­க­ளின்­படி, மொத்­தம் 218 பேர் ‘பிரெய்ன் பேங்க்’ அமைப்­பில் நன்­கொ­டை­யா­ள­ரா­கப் பதி­வு­செய்­துள்­ள­னர். அதில் 15 பேர் மட்­டுமே இந்­திய சமு­தா­யத்­தி­னர். அவர்­களில் நால்­வர் முழு உட­லை­யும் தான­மா­கத் தர முன்­வந்­துள்­ள­னர்.

‘லிவ் ஆன் (Live On)’ எனும் சமூக அமைப்­பின் அண்­மைய கணக்­கெ­டுப்­புப்­படி, சென்ற ஆண்டு ஜூன் மாதம்­வரை, 402 நோயா­ளி­கள் மாற்­றுச் சிறு­நீ­ர­கம் பெற காத்­தி­ருப்­புப் பட்­டி­ய­லில் உள்­ள­னர்.

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின்­படி, ஒவ்­வோர் ஆண்­டும் ஏறத்­தாழ 30,000 நோயா­ளி­க­ளுக்கு ரத்­தம் தேவைப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது 1.73 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே ரத்த தானம் அளிக்­கி­றார்­கள். O+, A+ ரத்த வகை இன்­னும் குறை­வா­கத்­தான் இருக்­கிறது.

இந்­தி­யர்­க­ளி­டத்­தில் Rh-ரத்த வகை அதி­கம் கண்­ட­றி­யப்­ப­டு­கிறது. Rh- ரத்த வகை இருப்­ப­வர்­க­ளுக்கு ரத்­தம் தேவைப்­ப­டும்­பொ­ழுது, அதே வகை ரத்த நன்­கொ­டை­யா­ளர் கிடைத்­தால் நல்­லது.

விடு­மு­றைக் காலத்­தி­லும் பண்­டி­கைக் காலத்­தி­லும் ரத்த நன்­கொடை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து, ரத்த வங்­கி­களில் இருப்பு கிட்­டத்­தட்ட 20% குறை­கின்­றது.

“சிகிச்­சை­க­ளுக்­கும் ரத்­தப்­போக்­கிற்­கும் மட்­டுமே ரத்­தம் தேவைப்­ப­டு­வ­தில்லை. ரத்த நன்­கொடை அளிக்க ஏராளமானோர் முன்­வ­ரும் பட்­சத்­தில், தேசிய அள­வில் ரத்­த­மேற்­று­த­லுக்குத் தேவையான அளவு ரத்­தம் நம்­மி­டம் எப்­போ­தும் இருந்­து­கொண்டே இருக்­கும்,” என்­கி­றார் சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் ரத்த நன்­கொ­டைத் திட்­டத் தலை­வர் பிர­காஷ் மேனன் (படம்).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!