திருமணமாகி முதலாவது சீனப் புத்தாண்டு

திருமணமாகி முதலாவது சீனப் புத்தாண்டு

3 mins read
3e9510f7-f227-4503-b161-99cdb465f960
-

ஏழாண்டு காதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு யாப் சீயும் கிஷான் ஜெய­சங்­க­ரும் திரு­ம­ணத்­தில் இணைந்­தார்­கள். இந்த ஆண்டு சீனப் புத்­தாண்டை கண­வன் மனை­வி­யாக முதல்­மு­றை­யா­கக் கொண்­டா­டும் அனு­ப­வம், புதுமை என்­றனர்.

மற்ற ஆண்டுக­ளை­விட இந்த ஆண்டு கொண்­டாட்­டம் மாறு­பட்­ட­தாக இருக்­கும் என்று 27 வய­து­டைய இவ்­வி­ரு­வ­ரும் கூறினர்.

குடும்­பத்­தில் ஏற்­பட்ட சில தவிர்க்­க­மு­டி­யாத சூழ்­நி­லை­களால் பிரம்­மாண்ட முறை­யில் சீனப் புத்­தாண்டை இவ்­வாண்டு கொண்­டா­டும் திட்­டம் தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும், எளி­மை­யான கொண்­டாட்­டமே போதும் என்ற எண்­ணத்­தில் இருந்­தார்­கள் இவர்­கள். யாப் சீயின் குடும்­பத்­து­டன் உண­வுண்டு பெரி­யோ­ரி­டம் ஆசி பெற்று புத்­தாண்­டைக் கொண்டாட முடிவுசெய்துள்ளனர் இந்த இளம் தம்­பதி.

கடந்த சில ஆண்­டு­க­ளாக சீனப் புத்­தாண்­டுக்கு முன்பு யாப் சீயின் வீட்­டுக்கு கிஷான் சென்று, வீட்­டைச் சுத்­தம் செய்­யும் பணி­களில் ஈடு­பட்­ட­து­டன் சீனப் புத்­தாண்டு அன்று யாப் சீயின் குடும்­பத்­தோடு விருந்­தி­லும் கலந்­து­கொள்­வார்.

சீனக் கலா­சா­ரத்­தில் கண­வன் குடும்­பத்­து­டன் முதல் நாள் ஒன்றுகூ­டல் விருந்­தில் கலந்­து கொள்வது­ வழக்­கம்.

ஆனால், கிஷா­னின் குடும்­பம் சீனப் புத்­தாண்­டைக் கொண்­டாடு­வதில்லை என்­ப­தால் யாப் சீயால் தம்­மு­டைய குடும்­பத்­தோடு விருந்­துண்டார்.

"திரு­ம­ணத்­திற்கு முன் யாப் சீயின் பெரிய குடும்­பத்தை ஒரே இடத்­தில் சந்­திக்க சீனப் புத்­தாண்டு வாய்ப்­ப­ளித்­தது. எனக்கு அவர்­க­ளின் மொழி தெரி­யா­விட்­டா­லும் என்­னைத் தங்­க­ளின் குடும்­பத்­தில் ஒரு­வ­ராக அவர்­களின் பழக்­க­வ­ழக்­கங்­களில் சேர்த்­துக்­கொள்­கி­றார்­கள்," என்று நிதித் துறை­யில் பணி­பு­ரி­யும் கிஷான் கூறி­னார்.

சிறு வய­தி­லி­ருந்தே சுற்­றி­யிருப்­ப­வர்­கள் பெரும்­பா­லும் சீனர்­களாக இருப்பதாலும் சீனக் கலா­சா­ரத்­தைப் பற்றி நன்கு அறிந்­தி­ருந்­தார் கிஷான்.

"கலா­சார அடிப்­ப­டை­யில் எனக்கு அதிர்ச்சி ஒன்­றும் இல்லை. என் மனை­வி­யின் குடும்­பத்­து­டன் அவர்­க­ளுக்­குப் பிடித்­த­மான முறை­யில் கொண்­டா­டு­வது எனக்கு முக்­கி­யம். முத­லில், சற்றுக் கூச்­ச­மாக இருந்­தது. ஆனால் இப்­போது ஓர­ள­வுக்கு என்­னால் அவ­ரின் குடும்­பத்­து­டன் பேசிப் பழக முடி­கிறது," என்­றார் கிஷான்.

அதே­போல கிஷா­னின் குடும்­பத்­தோடு விழாக்களைக் கொண்­டா­டும்­போது, அவ­ரின் குடும்­பத்­தைப் பற்­றி­யும் அவ­ரின் கலா­சா­ரத்­தைப் பற்­றி­யும் தெரிந்­து­கொள்ள முடி­கிறது என்­றார் யாப் சீ.

"இதற்­கு­முன் கேள்­விப்­ப­டாத சில பழக்கவழக்­கங்­க­ளைப் பற்றி என் கண­வ­னின் குடும்­பத்­தி­னர் எனக்கு எடுத்­துக்­கூ­றும்­போது, நான் அவற்றை மதித்­துப் பின்­பற்­று­கி­றேன்," என்று யாப் சீ கூறி­னார்.

"வேற்று இனத்­த­வ­ரைத் திரு­ம­ணம் செய்­யும்­போது, கலா­சார வேறு­பா­டு­கள் இருக்­கவே செய்­யும். குறிப்­பாக, எங்­க­ளின் பெற்­றோ­ருக்கு கலா­சார ரீதி­யாக பல கவ­லை­கள் இருந்­தன. அவர்­களின் கவ­லை­யைப் போக்­கும் வகை­யில் நிலை­மை­யைச் சமா­ளிப்­ப­தோடு எங்­க­ளுக்­குப் பிடித்த முறை­யில் வாழ நாங்­கள் கற்­றுக்­கொண்­டோம்," என்­றார் யாப் சீ.

அடுத்த ஆண்டு, தங்­க­ளின் புதிய வீட்­டில் சீனப் புத்­தாண்டைக் கொண்­டாட இரு­வ­ரும் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றார்­கள்.

இரு கலா­சா­ரங்­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து கண­வன் மனை­வி­யாக எல்லா விழாக்­க­ளை­யும் கொண்­டா­டு­வ­தில் ஒரு­வித மகிழ்ச்சி உள்­ளதை இரு­வ­ரும் உணர்­வ­தா­கப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

காத­ல­ரின் கலா­சா­ரத்தை

அறிய ஒரு வாய்ப்பு

தம் சீன இனத்து காத­ல­ரின் வீட்­டுக்கு முதன்­மு­த­லா­கச் சென்று அவ­ரின் குடும்­பத்­தா­ரு­டன் சீனப் புத்­தாண்டை இன்று கொண்­டா­டு­கி­றார் 24 வயது பவ­தா­ரிணீ.

"இந்­தப் புத்­தாண்­டுக்­காக நாம் இரு­வ­ரும் புதிய துணி­களை ஒன்­றாக வாங்­கும்­போது சீனர்­களின் பழக்கவழக்­கங்­க­ளைப் பற்றி மேலும் அறிந்­து­கொண்­டேன்," என்­றார் பவ­தா­ரிணீ.

ஒரே நேரத்­தில் குடும்­பத்­தில் உள்ள அனை­வ­ரை­யும் சந்­திக்க இந்­தப் பண்­டி­கைக் காலம் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தந்­துள்­ளது என்­றும் பவ­தா­ரிணீ குறிப்­பிட்­டார்.

"சீனப் புத்­தாண்­டுக்கு என்னை அவ­ரின் வீட்­டுக்கு அழைத்­தது, எங்­க­ள் வாழ்க்கைப் பய­ணத்­தின் ஒரு முக்­கிய மைல்­கல்­லாக நாங்கள் கரு­துகிறோம்," என்­றும் கூறி­னார்.