வெளிநாட்டில் குடும்பத்தோடு கொண்டாட்டம்

வெளிநாட்டில் குடும்பத்தோடு கொண்டாட்டம்

1 mins read
f161859b-8c7a-4cb4-b9b8-f60a2d79a8fe
-
multi-img1 of 2

இந்த நீண்ட விடு­மு­றை­யின்­போது வெளி­நாட்டுக்குச் சென்று ஓய்­வெ­டுக்க வேண்­டும் என்ற நோக்­கில் 22 வயது மோ. தரணி, தமது குடும்­பத்­தா­ரு­டன் தாய்­லாந்­தில் உள்ள கிராபி நக­ருக்­குச் சென்­றார். தொற்­று­நோய் காலத்­தில் எங்­கும் செல்­ல­மு­டி­யாத பட்­சத்­தில், இவ்­வாண்டு புதிய முறை­யில் கொண்­டாட விரும்­பிய தரணி, தம் குடும்­பத்­தா­ரு­டன் புதன்­கி­ழ­மை­யன்று கிரா­பிக்குப் புறப்­பட்­டார்.

"அடுத்த வாரத்­தி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வேலை­கள் அதி­க­ரிப்­ப­தால் இந்­தச் சிறு விடு­முறை எங்­க­ளின் சோர்வை போக்க உத­வு­கிறது," என்றார் தரணி.

குடும்­பத்­து­டன் ஓய்வு முக்­கி­யம்

கடந்த ஈராண்­டு­க­ளாக வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் செய்ய முடி­ய­வில்லை என்­ப­தால் வீட்­டி­லேயே குடும்­பத்­தோடு பல நட­வடிக்­கை­களை மேற்­கொண்டு வந்­தார் திரு­வாட்டி தேவி.

"தொற்­று­நோய்க்­கு­முன் ஆண்டு­தோ­றும் மலே­சி­யா­வுக்­குச் செல்­வேன். இந்த ஆண்டு கட்­டுப்­பா­டு­கள் நீங்­கி­யும் பய­ணம் செல்­லும் மன­உ­ளைச்­சல் வேண்­டாம் என்­ப­தற்­காக வீட்­டில் திரைப்­ப­டங்­களை நண்­பர்­க­ளு­ட­னும் குடும்­பத்­தா­ரு­ட­னும் பார்த்து உணவு உண்ண ஏற்­பாடு செய்­துள்­ளோம்," என்­கி­றார் 56 வய­து ­தேவி.

ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் தேவி, பள்­ளி­யில் தமது மாண­வர்­கள் சீனப் புத்­தாண்டு கலை­நி­கழ்ச்­சி­யின்­போது ஆடிப்­பா­டி­யதை நினை­வு­கூர்ந்­தார்.