கடந்த ஆறு ஆண்டுகளாக சீனப் புத்தாண்டைத் தம் நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார் 23 வயது ஸ்ரேயா சுதாகர்.
தம்முடைய சீன நண்பரின் வீட்டில் புத்தாண்டு விருந்தைச் சுவைப்பதோடு ஒவ்வோர் ஆண்டும் வேற்று மொழித் திரைப்படங்களைப்் பார்த்து ரசிப்பார்.
"கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களாகிய நாங்கள் சீனப் புத்தாண்டு அன்று சந்திக்க முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு வேலை செய்யத் தொடங்கிவிட்டதால், புத்தாண்டின் மற்ற நாள்களில்தான் சந்திக்க முடிகிறது.
"சீனப் புத்தாண்டு விருந்தில் நண்பர்களுடன் குதூகலமாக நேரம் செலவழிப்பது மறக்கமுடியாத அனுபவம்," என்றார் ஸ்ரேயா.

