நீண்டகால ஆதரவுத் திட்டம் தேவைப்படுகிறது

நீண்டகால ஆதரவுத் திட்டம் தேவைப்படுகிறது

4 mins read
18f307ac-8a0b-489e-9074-ed4d24aad50a
-

உள்ளூர் திறனாளிகளுக்கு

வேலை கொடுப்பதில் உதவிக்கரம்

சிறிய-நடுத்தர நிறுவனம் ஒன்றின் வர்த்தக நிர்வாகியான

திரு இப்ராஹிம், 28, உள்ளூர்வாசிகளை வேலையில் அமர்த்த அரசாங்கம் கூடுதல் ஆதரவு வழங்கலாம் என்று கூறினார். படிப்படியான சம்பள உயர்வு ஆதரவுத் திட்டங்கள், பணியிடைக்கால வாழ்க்கைத் தொழில் மாற்ற ஆதரவுத் திட்டங்கள் போன்றவற்றை அரசாங்கம் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் தெரிவித்தார். மேலும், சிறிய நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடி வழங்கலாம் என்றும் இது மொத்த செலவினத்தையும் குறைக்க உதவும் என்றும் திரு இப்ராஹிம் கூறினார்.

சிறிய நிறுவனங்களுக்கு

கூடுதல் ஆதரவு

சிறிய நடுத்தர நிறுவனங்களை மின்னிலக்கமயமாக்க அரசாங்கம் ஊக்குவித்துவரும் நிலையில் கடன் அட்டை, கடன்பற்று அட்டை போன்றவற்றின் பயன்பாட்டால் ஏற்படும் கட்டணங்கள் பெரிய தடங்கலாக இருப்பதாகக் குறிப்பிட்டார் தொழில்முனைவர் திரு ஈஸ்வரன் பழனிசாமி, 51 (படம்).

இந்தக் கட்டணங்கள் ஐரோப்பாவில் 2 விழுக்காடாக இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் 3.5 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடு வரை வசூலிக்கப்படுகிறது என்று கூறினார் இவர்.

விசா, மாஸ்டர்கார்ட், நெட்ஸ் போன்ற மின்னிலக்கக் கட்டண நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுக்குச் சலுகை தள்ளுபடிகள் வழங்கி 2% மட்டுமே வசூலிக் கின்றன. காரணம், அவற்றின் வசூலில் அதிக லாபம் கிடைக்கும். ஆனால் சிறிய அளவில் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதிகமான கட்டணத்தைச் செலுத்து கின்றன. இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதா அல்லது தாங்களே செலுத்துவதா என்ற கேள்வியும் எழுகிறது.

வாடிக்கையாளர்களிடம் வசூலித்தால் அவர்கள் இயல்பாகவே வசூலிக்காத பெரிய நிறுவனங்களிடம் பொருள்கள் வாங்கச் சென்றுவிடுவார்கள்.

வங்கிகளும் மின்னிலக்கக் கட்டண நிறுவனங்களும் வசூலிக்கும் பரிவர்த்தனைக் கட்டணங்களைச் சமாளிக்க, சிறிய நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கலாம் என்பது தனது எதிர்பார்ப்பு என்றார் திரு ஈஸ்வரன்.

அதி­க­ரிக்­கும் விலை­வாசி என்­பது அனை­வ­ரும் அறிந்­தி­ருந்­தா­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் எந்த அள­விற்கு இதைச் சமா­ளிக்­கி­றார்­கள் என்­பது கேள்­விக்­கு­றியே என்­றார் வர்த்தக ஆலோ­ச­கர் திரு­மதி தீபா சுப்பையா, 38 (படம்).

விலை­வாசி குறித்த அதி­ருப்தி பற்றி தம்­மி­டம் குடும்ப உறுப்­பி­னர்­களும் நண்­பர்­களும் அதி­கம் கவலை தெரி­விப்பதாக அவர் சொன்னார். உய­ரும் விலை­வாசி, பொருள் சேவை வரி அதி­க­ரிப்பு, பொதுப் போக்­கு­வ­ரத்து கட்­டண அதி­க­ரிப்பு, வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­டண அதி­க­ரிப்பு போன்ற பல­த­ரப்­பட்ட அம்­சங்­களை சிங்­கப்­பூ­ரர்­கள் சமா­ளிக்­கும் கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ளது.

அர­சாங்­கம் வழங்­கும் பற்­றுச்­சீட்­டு­களும் நிதி­யு­த­வித் திட்­டங்­களும் தற்­கா­லிக நிவா­ர­ணம் மட்­டுமே அளிப்­ப­தாக அவர் கூறி­னார். நீடித்த காலத்­திற்கு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் திட்­டங்­கள் தேவை என்­­றார் திரு­மதி தீபா.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை போன்ற திட்­டங்­கள், நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வக்­கூ­டி­யவை என்று அறிவிக்கப்பட்டாலும் நிறு­வ­னங்­கள் இத்­திட்­டங்­களை எவ்­வாறு செயல்­ப­டுத்­து­கின்­றன என்­பதை அர­சாங்­கம் எவ்­வாறு உறு­தி­செய்­கிறது என்பது இவரது கேள்வி.

கார­ணம், மக்­கள் தங்­க­ளின் அன்­றாட வாழ்க்கை யில் பெரிய மாற்­றம் எதை­யும் உண­ர­வில்லை என்­றார். உய­ரும் விலை­வாசி, நம் குழந்­தைப் பிறப்பு விகி­தம் குறை­வ­தற்­குக் கார­ண­மாகி விடு­கிறது என்­ப­தைச் சுட்­டிய திரு­மதி தீபா, தாம் குழந்தை பெற்­றுக்­கொள்­வ­தற்கு முன்­ன­ரும் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்­திக்க வேண்­டிய அவ­சி­யம் இருக்­கும் என்று கூறி­னார். தாம் அறிந்த சிலர், உய­ரும் விலை­வா­சி­யால் குழந்தை பெறு­வ­தைத் தவிர்க்­க­வும் முடி­வெ­டுத்­தாக அவர் கூறினார்.

சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கும் திரு­மதி தீபா, அவை எதிர்­நோக்­கும் சிக்­கல்­க­ளை­யும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

சிறிய நடுத்­தர தொழில்­க­ளுக்­கென அர­சாங்­கம் வழங்­கி­வ­ரும் ஆத­ரவு, வள­மும் வச­தி­யும் பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கே உத­வு­கின்­றன என்­றார்.

மின்­னி­லக்­க­ம­ய­மா­க­வும் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­ல­வும் நிறு­வ­னங்­கள் முத­லில் தாங்­களே நிதி­களை வியா­பா­ரத்­தில் செலுத்த வேண்­டி­யுள்­ள­தால் ஒரு­சில சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான ஆத­ர­வைப் பெறு­வ­தில்லை என்­கி­றார் திரு­மதி தீபா.

அத்­து­டன் கொவிட்-19 காலத்­தில் பய­ணத்­துறை, உணவு பானத் துறை, சில்­லறை வர்த்­த­கத் துறை போன்­ற­வற்­றைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு அதி­கம் வழங்­கப்­பட்­டது என்று அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

கல்­வித்­துறை, சிறிய கணக்­கி­யல் நிறு­வ­னங்­கள், ஆலோ­சனை சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள், கடல்­சார் வர்த்­தக நிறு­வ­னங்­கள், கட்­டு­மா­னத் துறை நிறு­வ­னங்­கள் போன்­ற­வற்­றுக்­குப் போதிய ஆத­ரவு வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் இத­னால் குறிப்­பிட்ட இந்த நிறு­வ­னங்­கள் தாங்­கள் ஒதுக்­கப்­பட்­ட­து­போல் உணர்ந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

இவ்­வாறு கரு­திய பல நிறு­வ­னங்­கள், கொவிட்-19 காலத்­தில் தங்­கள் வர்த்­த­கச் செயல்­பா­டு­க­ளைக் குறைத்­துக்­கொள்ள வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டி­ருக்­கிறது. சிலர் வியா­பா­ரத்தை மூடிவிடும் நிலைக்­குக்­கூட தள்­ளப்­பட்­ட­னர். வங்­கி­களும் இவர்­க­ளுக்­குக் கடன் வழங்க முன்­வ­ர­வில்லை என்­றார் திரு­மதி தீபா.

ஆகை­யால், இவ்­வாண்டு சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­குப் பார­பட்­சம் இன்றி நிதி ஆத­ரவு வழங்­கப்­பட வேண்­டும் என்­பது இவ­ரது விருப்­ப­மா­கும். உதவி தேவைப்­படும் நிறு­வ­னங்­களை, அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்­தும் ஆத­ர­வுத் திட்­டங்­கள் சென்­ற­டை­கின்­ற­னவா என்­ப­தை­யும் அர­சாங்க அமைப்­பு­கள் கண்­கா­ணிப்­ப­தோடு சிறிய நிறு­

வ­னங்­க­ளுக்­குப் பயிற்சி வாய்ப்­பு­க­ளை­யும் அதி­க­ரிக்­கச் செய்­ய­லாம் என்­றார் திரு­மதி தீபா.