மின்னிலக்கமய சிக்கல்கள்

மின்னிலக்கமய சிக்கல்கள்

1 mins read
5174eef8-cdb6-4f36-8cc2-d28e2b585e38
-

அர­சாங்­கம் பல்­வேறு வழி­களில் உதவி வழங்க முனைந்­தி­ருந்­தா­லும் ஆத­ர­வுத் திட்­டங்­க­ளுக்­கான தகுதி நிபந்­த­னை­களை சிறிய நிறு­

வ­னங்­கள் பூர்த்தி செய்ய முடி­

வ­தில்லை என்­பது 'ஃபோகஸ் அட்­வென்­சர்' நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு சசி­கு­மார் தன­ப­தி­யின் (படம்) கருத்து. மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தில் ஏற்­படும் சிக்­கல்­களைக் குறிப்பிட்டுச் சொன்னார் திரு சசி­கு­மார்.

உதா­ர­ணத்­திற்கு, தமது வளங்­க­ளைத் திட்­ட­மி­டும் செயல்­பா­டு­களை இணை­யத்­

த­ளத்­திற்கு மாற்ற விரும்­பும் இவர், அதற்கு 200 அங்­கு­தொடு­திரை தேவைப்­ப­டு­கிறது என்­றார்.

இதற்கு $80,000 செல­வா­கும். அர­சாங்க நிதி­யு­த­வி­யால் இந்­தச் செல­வைச் சமா­ளிக்க முடி­யாது. கார­ணம், மென்பொருள் செல­வு­க­ளுக்கு மட்­டுமே அர­சாங்க நிதி­யு­த­வி­யைப் பயன்­ப­டுத்த முடி­யும்; ஹார்ட்­வேர் எனப்­படும் வன்பொ­ருள்க­ளுக்கு அல்ல.

அர­சாங்க ஆத­ர­வுத் திட்­டங்­களில் பல­வற்­றைப் பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் பணத்தை முத­லில் செலுத்­திய பின்­னரே அர­சாங்­கத்­தி­ட­ம் இருந்து பெற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலை இருக்­கிறது.

பெரிய நிறு­வ­னங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் சிறிய நிறு­வ­னங்­க­ளி­டம் பணம் அதி­கம் இருப்­ப­தில்லை என்­ப­தால் இந்த அணு­கு­மு­றையை அர­சாங்­கம் மாற்ற வேண்­டும் என்று இவர் எதிர்­பார்க்­கி­றார். நிதி­யு­த­வியை முத­லில் வழங்­கக்­கூ­டிய வகை­யில் திட்­டங்­களை மாற்­றி­அமைக்­க­லாம் என்­பது திரு சசி­கு­மா­ரின் கருத்து.