சொத்து செலவுகளைச் சமாளிக்க புதிய திட்டங்கள் வேண்டும்

சொத்து செலவுகளைச் சமாளிக்க புதிய திட்டங்கள் வேண்டும்

2 mins read

இவ்­வாண்டு பண­வீக்­க­மும் பொரு­ளி­யல் சரி­வும் ஏற்­ப­ட­லாம் என்று உலக வங்­கி­கள் தெரி­வித்­து­வ­ரும் நிலை­யில் அனை­வ­ரும் வேலை பாது­காப்பு குறித்து கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

இத­னால் விலை­வாசி தற்­போது இருப்­ப­தை­விட மேலும் உய­ரும் சாத்­தி­யம் உள்­ள­தா­கக் கூறப்­படும் நிலை­யில், சொத்து சார்ந்த செல­வு­களும் கூடும் என்ற கருத்தை முன்­வைத்­துள்­ளார் 'ஆரஞ்சு டீ' சொத்து நிறு­வ­னத்­தின் இணைக் குழும இயக்­கு­நர் திரு தச­ர­தன் பெரு­மாள், 56 (படம்).

தற்­போ­தைய நிலை­யில் வங்கி வட்டி விகி­தம் 4.5 விழுக்­காடு அள­விற்கு உயர்ந்­துள்­ளது. இத­னால் வீடு வாங்­கும் குடும்­பங்­கள் தங்­கள் சேமிப்­பு­க­ளி­லி­ருந்து பெரிய தொகையை எடுத்து செலுத்­து­கின்­ற­னர். வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் வட்டி விகி­தம் 2.6 விழுக்­கா­டாக இருந்­தா­லும் பலர் தங்­க­ளின் ஒட்­டு­மொத்த வீட்டு வரு­மா­னத்­தி­லி­ருந்து 60% தொகையை வீட்­டுக்­கான கட்­ட­ணம் செலுத்த ஒதுக்­கு­கின்­ற­னர் என்­றார் திரு தாஸ்.

இந்­நி­லை­யில், அர­சாங்­கம் வழங்­கும் நிதி உத­வித் திட்­டங்­க­ளால் உதவி தேவைப்­படும் பாதிப்­பே­ருக்கு மட்­டுமே பலன் என்­றார்.

ஆகை­யால், இவ்­வாண்டு இது­மா­தி­ரி­யான விலை உயர்­வைத் தொடர்ந்து சமா­ளிக்­க­வும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் சுமை­யைக் குறைக்­க­வும் அர­சாங்­கம் புதிய உத­வித் திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என்­பது இவ­ரது எதிர்­பார்ப்­பா­கும்.

வெவ்­வேறு தரப்­பி­னர் தங்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்­கம் செவிமடுக்க வேண்­டும் என்று விரும்­பு­கின்­ற­னர். ஆத­ரவு தொடர வேண்­டும் என்­பதே பலர் பொது­வா­கத் தெரி­விக்­கும் கருத்­தாக உள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்ட பாதிப்புகளில் இருந்து பலர் இன்­று­வரை மீள முயற்­சிக்­கும் வேளை­யில் அர­சாங்கத் தின் உத­வி­யைப் பெரி­தும் நம்­பு­வ­தோடு எதிர்­பார்த்­தும் இருக்­கின்­ற­னர் சிங்­கப்­பூ­ரர்­கள் என்றார் இவர்.