வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க அரசாங்க ஆதரவு தொடர்ந்தால் நல்லது

வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க அரசாங்க ஆதரவு தொடர்ந்தால் நல்லது

1 mins read
ea1c2732-87d0-4228-9c66-daa2aa2e7325
-

அர­சாங்­கத்­தின் 'குழந்தை போனஸ்' திட்­டம், குழந்தை பிறப்­பது முதல் மருத்­து­வச் செல­வு­ க­ளுக்­கும் பள்­ளிச் செல­வு­க­ளுக்­கும் உத­வு­கின்­றன என்­றார், மூன்று வயது சிறு­வ­னுக்­குத் தாயா­ரான திரு­மதி ஆயிஷா, 26. ஆனால் குழந்­தை­யின் வாழ்­நாள் தேவை­

க­ளுக்­கான செலவை, வேலை செய்­யும் பெற்­றோர் இரு­வ­ரா­லும் கட்டுப்படுத்த இயலாமல் போக­லாம் என்­ப­தை­யும் அவர் குறிப்­பி­ட்டார். இத­னால் குழந்தை செல­வு­க­ளுக்­கும் வீட்­டுச் செல­வு­க­ளுக்­கும் அர­சாங்­கத்­தின் தொடர் ஆத­ரவு பெரி­தும் உத­வும் என்­றார்.

மூவர் கொண்ட இவ­ரின் குடும்­பத்­திற்கு 2 முதல் 3 மாதங்­கள் வரை மளி­கைப் பொருள்­கள் வாங்க அர­சாங்­கம் வழங்­கும் 'சிடிசி' பற்றுச்சீட்டுகள் உத­வி­யாக இருப்­ப­தா­கக் கூறி­னார். ஆனால் மூன்று மாதத்­திற்­குப் பிறகு அதி­க­ரித்­தி­ருக்­கும் விலை­

வா­சியை தாங்­களே சரிக்­கட்­டும் கட்­டா­யம் ஏற்­ப­டு­கிறது என்­றும் கூறினார்.

அர­சாங்­கம் வழங்­கும் உத­வித்­தொ­கை­கள் தற்­கா­லி­கத் தீர்­வாக உள்­ளது என்­பது திரு­மதி ஆயி­ஷா­வின் கருத்து. தொடர்ந்து குடும்­பச் செல­வு­க­ளைச் சமா­ளிக்­கும் வகை­யில் அர­சாங்­கம் உத­வ­வேண்­டும் என்­பது இவ­ரது எதிர்­பார்ப்­பா­கும்.

அவ்­வாறு உத­வு­வது செயல்­ப­டுத்த முடி­யாத ஒன்று என்ற நிலை­யில் அதி­க­ரித்­து­

வ­ரும் விலை­வா­சி­யைக் கட்­டுப்­ப­டுத்த அர­சாங்­கம் முயற்­சி­கள் மேற்­கொள்ள வேண்­டும் என்று இவர் கரு­து­கி­றார்.

குறிப்­பாக, குழந்­தை­க­ளோடு முதி­ய­வர்­

க­ளை­யும் கொண்­டுள்ள குடும்­பங்­க­ளுக்கு கூடு­தல் உதவி தேவைப்­ப­டு­கிறது என்­ப­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார். இது­போன்ற குடும்­பங்­க­ளின் செல­வி­னம் சரா­சரி குடும்­பங்­க­ளை­விட அதி­க­மா­கவே உள்­ளது என்­பது இதற்­குக் கார­ணம் என்றார் திருமதி ஆயிஷா.