சுவைத் துளிகள்

சுவைத் துளிகள்

1 mins read

 இம்மாதம் 3ஆம் தேதி நிலவரப்படி 12,000 பால் குடங்கள், 239 பால்/தொட்டில் காவடிகள்,

180 அலகுக் காவடிகள், 34 ரதக் காவடிகள் ஆகியவற்றுக்குப் பக்தர்கள் பதிவு செய்து உள்ளனர். மேலும் இன்று கூடுதல் பால்குடப் பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படு வதாகவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

 தைப்பூச ஊர்வலத்தில் 35,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பக்தர்களுக்கு உதவுவதற்காக 1,300 கோவில் ஊழியர்களும் தொண்டூழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இரு கோயில்கள் அல்லாமல் ஹேஸ்டிங்ஸ் ரோடு, ஷார்ட்ஸ் ஸ்திரீட், கேத்தே கிரீன் ஆகிய மூன்று இடங்களில் நேரடி இசை முழக்கம் இடம்பெறும்.

 காவடி ஊர்வல வழி நெடுகிலும் மொத்தம்

22 தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.