மீண்டு வந்தோரின் மீண்ட வாழ்வு

மீண்டு வந்தோரின் மீண்ட வாழ்வு

3 mins read
e83d8bc8-cd40-4364-9ea8-fb984cec2c07
மன மாற்றமே பழக்கத்தை மாற்றும் என்பதை முன்னாள் போதைப் பொருள் புழங்கிகள் உணர்ந்து கூறுகின்றனர். படம்: கார்த்திகேயன் -

அண்மையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டில் கஞ்சா பயன்படுத்திய குற்றத்திற்காக முதன்முறை கைது செய்யப் பட்டவர்களில் 70 விழுக்காட்டி னர் இளையர்கள் எனக் காட்டுகிறது.

போதைப் புழங்கிகள் உடல்நலம், குடும்பம், கல்வி, வாழ்க்கை என அனைத்தையும் தொலைத்து விடுகின்றனர். சிலர் மீள முடியாத மாய வலைக்குள் மாட்டிக்கொள்கின்றனர். மீண்டு வந்து புதுவாழ்வைத் தொடங்குவோர் பலர்.

மன மாற்றமே பழக்கத்தை மாற்றும் என்பதை முன்னாள்

போதைப் பொருள் புழங்கிகள் உணர்ந்து கூறுகின்றனர்.

குடும்பம், சமூகத்தின் ஆதரவும் பிடிப்புமே மனமாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை இவர்களது வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.

ஆ. விஷ்ணு வர்­தினி, மோன­லிசா

சிறை­யில் 12 ஆண்­டு­க­ளைக் கழித்து வந்த சாமு­வேல் குமா­ருக்கு குடும்­பத்­தா­ரை­யும் உடன்­ப­டித்­த­வர்­க­ளை­யும் பார்த்து ஏக்­க­மாக இருந்­தது. வாழ்க்­கை­யில் இழந்­த­வை­களை நினைத்துக் கலங்­கி­னார். தாழ்­வு­ம­னப்­பான்மை குறு­கச் செய்­தது. குடும்­பம், நண்­பர்­கள், சமூ­கம் என அனை­வ­ரி­ட­மி­ருந்­தும் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டார். தொடக்­க­நிலை ஆறில் படிப்பை விட்­டி­ருந்த அவ­ருக்கு என்ன வேலை செய்­வ­தென்று தெரி­ய­வில்லை.

"வேலை, வரு­மா­னம், வாழ்க்­கைத்­துணை, குழந்­தை­கள் என ஒத்த வய­தி­னர் வாழ்­வதைப் பார்த்த எனக்கு அவர்­கள் மீது பொறா­மை­யும் என்­மீது வெறுப்­பும் ஏற்­பட்­டது," என்று நினை­வு­களில் மூழ்­கி­னார் 58 வயது திரு சாமு­வேல்.

மூன்று அண்­ணன்­கள் ஒரு அக்கா உள்ள குடும்­பத்­தில் கடைசி மக­னான சாமு­வேல், பத்து வய­தில் சிக­ரெட் பிடிக்­கத் தொடங்­கி­னார். பள்­ளிக்கு மட்­டம் போட்டு ஊர் சுற்­றி­னார். 'நண்­பர்­கள் மத்­தி­யில் தைரி­ய­மா­ன­வன் என்று காட்­டிக் கொள்ள' பல தீய பழக்­கங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டார். 15 வய­தில் போதைப்­பொ­ருள் பயன்­பாட்­டிற்­காகக் காவல்­து­றை­யி­டம் பிடி­பட்­ட­போது வீட்­டிற்கு உண்மை தெரி­ய­வந்­தது.

அர­சாங்க ஊழி­ய­ராக இருந்த தந்தை, வழக்­க­றி­ஞ­ரான மூத்த அண்­ணன், தங்கு­வி­டுதி துறை­யில் பணி­பு­ரி­யும் இளைய அண்­ணன்­கள், ஆசி­ரி­ய­ராக உள்ள அக்கா என எவர் அறி­வு­ரை­யை­யும் கேட்­கா­மல் தொடர்ந்து கூடா நட்­பு­க­ளு­டன் பழ­கி­னார். தேசிய சேவை­யின் போதும் போதைப்­பொ­ருள் பழக்­கத்­திற்­காகப் பிடி­பட்டு தடுப்­புக்­கா­வ­லில் ஓராண்டு இருந்த இவர், 28 வய­திற்­குள் ஆறு முறை சிறை சென்­று­வந்­தார்.

கடை­சி­யாக 36 வய­தில் சிறை­யில் இருந்து வெளி­வந்­த­போது மறுவாழ்வு நிலையம் இவ­ரது பாதையை மாற்­றி­யது.

தன்னை நல்­வ­ழிப்­ப­டுத்­திய சமூ­கத்­திற்கு கைமா­றாக, முழு நேர­மா­கத் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட்டு வரும் திரு சாமு­வேல், சென்ற ஆண்டு தொண்­டூ­ழி­யத்­தின்­போது சந்­தித்த ஒரு­வரை காத­லித்து மண­மு­டித்­தார்.

தற்­போது 'எஸ்ஜி' விபத்து உதவி நிலை­யம் எனும் தொண்டு நிறு­வ­னத்­தில் தொண்­டூ­ழி­யம் செய்து வரும் திரு சாமு­வேல், தடம்­மா­றும் பிள்­ளை­க­ளுக்கு வழி­காட்­டு­வ­தில் அக்­கறை செலுத்­து­கி­றார்.

"என்­னைப்­போல் எந்த இளை­ய­ரும் தடம்­மா­றி­ வாழ்க்­கை­யைத் தொலைக்கக் கூடாது," என்­றார் திரு சாமு­வேல்.

மறு­வாழ்வு நிலை­யங்­க­ளின் பணி

சிறை­யி­லி­ருந்து வெளியே வரு­வோர் பெரும்­பா­லும் கலக்­க­மான மன­நி­லை­யு­டனே காணப்­ப­டு­வர் என்­றார் இந்து அறக்­கட்­டளை வாரிய 'ஆஷ்­ரம்' அமைப்­பின் சமூக சேவை­யா­ளர் திரு பி ரூவின்.

குற்­ற­வு­ணர்ச்சி, தாழ்­வு­ம­னப்­பான்மை, தன்­னம்­பிக்­கை­யற்ற மனப்­போக்கு என தவிக்­கும் இவர்­களை யோகா, தியா­னம், தன்­னம்­பிக்கை உரை­கள், செறி­வூட்­டல் பயிற்­சி­கள் மூலம் மீட்­டுக்­கொண்டு வரு­வதே இவ்­வ­மைப்­பின் பணி.

இவர்­க­ளுக்­கும் இவர்­கள் குடும்­பத்­தி­ன­ருக்­கும் தேவை­யான மன­நல ஆலோ­சனைகள், வேலை வாய்ப்­பு­வ­ழி­காட்­டு­தல்­களை ஆஷ்­ரம் வழங்­கு­கிறது என்­று கூறினார் திரு பி ரூவின்.