பண மோசடி தொடர்பில் மூன்று முறை சிறைக்குச் சென்றவர் திரு அனில் டேவிட். தானா மேரா சிறைச்சாலையின் தொலைபேசி அழைப்பு மையத்தில் வேலைபார்க்கும் வாய்ப்பைப் பெற்றபோதுதான் கைதிகள் கைகோத்து ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும் என்பதை உணர்ந்தார்.
அதில் அனிலின் 'அகாபே' எனும் நிறுவனம் 2012ல் உருவெடுத்தது. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் கைதிகள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புகளும் வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதலும் அளித்துவருகிறது இந்த நிறுவனம்.
"முன்னாள் கைதிகளைக் குற்றம் புரிந்தோராக மட்டும் பார்த்த முதலாளிகள், நவீனமய உலகில் அவர்களை ஊழியரணியின் ஓர் அங்கமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்," என்றார் அவர்.
ஆனால், சுயதொழில் தொடங்காதோர் பணித்தேக்கம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் அனில் குறிப்பிட்டார். எனவே, முன்னாள் கைதிகளும் திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பது அவசியம் என்றார் அனில்.

