அரவணைக்கும் அன்புக்கரங்கள்

2 mins read
a8e3a959-b727-43ec-aeb7-b02bcfa94d74
-

மகப்பேற்றைச் சுற்றி பெரும் பாரம்பரியமும் தகவல் களஞ்சியமும் தமிழர் மரபில் உள்ளது. ஆனால் இன்றைய சூழலில் அந்தப் பாரம்பரியச் சங்கிலி பல நேரங்களில் விடுபட்டுப் போகிறது.

மகப்பேற்றின்போது தாய்மார் எந்தெந்த உணவுவகைகள் உண்ண வேண்டும், உடலை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தவும் குழந்தையின் உடலைப் பிடித்துவிட்டு சிசுக்களைப் பராமரிக்கவும் எல்லாருக்கும் எப்போதும் உற்றார் உறவினர் அருகில் இருப்பதில்லை. அப்பணியைச் செய்து மகப்பேறு அனுபவத்தை சுகமாக்கி தோழிகளாகத் துணைநிற்கும் நான்கு பெண்களைக் கண்டு வந்தது தமிழ் முரசு.

'டூலா'க்கள் (Doula) என்­போர் கரு­வு­றும் காலத்­தி­லும் மகப்­பேற்­றின்­போ­தும் தாய்­மா­ருக்கு மன­த­ள­வி­லும் பல்­வேறு சேவை­க­ளின் வழி­யும் உத­வு­வர். குமாரி ஜெனட் பிரான்­சிஸ், 18 வயதிலேயே 'டூலா' பணி­க்காகப் பயின்று வரு­கி­றார்.

டூலா­வாக பணி­யாற்­றும் தாயார் ஜெம்மா பிரான்­சி­ஸு­டன் அவர் சேவை புரி­யும் வீடு­களுக்குச் செல்­வார் ஜெனட். அங்கு தமது தாயார் சிசுக்­க­ளைக் குளிப்­பாட்­டு­வ­தை­யும் உடற்­பி­டிப்பு செய்­து­வி­டு­வ­தை­யும் பார்த்­துக் கற்­றுக்­கொண்ட ஜெனட்­டுக்கு தமது மூன்று தம்­பி­க­ளை­யும் கையாண்ட அனுப­வம் மன­தில் நின்­றது. குழந்தைப் பரா­ம­ரிப்­பின் மேல் ஈர்ப்பு ஏற்­பட்­டது.

திரு­மதி ஜெம்மா பிரான்சிஸ், 41, நண்­பர்­க­ளின் கோரிக்­கை­ க­ளுக்கு இணங்க தமது தனிப்­பட்ட அனு­ப­வத்­தின் அடிப்­ப­டை­யில் ஓர் உத­வி­யாக முத­லில் அத்­த­கை­ய சேவை­க­ளைச் செய்­து­வந்­தார். அந்­நே­ரத்­தில்­தான் 'டூலா' பணி பற்­றி­யும் சிசுக்­க­ளைக் கையாள்­வ­தில் தமக்­குள்ள திற­னை­யும் ஜெம்மா அறிந்­து­கொண்­டார். கண­வ­ரின் ஊக்­கத்­து­டன், ஐந்து ஆண்­டு­க­ளாக சான்­றி­தழ் பெற்ற முழு­நேர டூலா­வாக பணி­யாற்றி, கிட்­டத்­தட்ட 250 தாய்­மாருக்கு உத­வி­யுள்­ளார் ஜெம்மா. 2020ல் 'சேயோள்' என்ற தொழிற்­பெ­ய­ரின்­கீழ் அவர் இயங்­கத் தொடங்­கி­னார்.

"என் நான்கு பிள்­ளை­க­ளுமே அறுவை சிகிச்­சை­மூ­லம் பிறந்­த­னர். சுகப்­பி­ர­ச­வம் இல்லை என்ற கவலை என்­னைப் பாதித்­தது. அப்­போது எனக்கு தக்க அறி­வுரை கூற யாரும் இல்லை என்ற குறையை, டூலா­வாக மற்ற தாய்­மா­ருக்­குத் தீர்த்­து­வைப்­பதில் எனக்கு மிகுந்த மன நிறை­வைத் தரு­கிறது," என்­றார் ஜெம்மா.

தொழில்­நுட்­ப­மும் அறி­வி­ய­லும் தாய்­மா­ருக்­குப் பல­வற்றை எளி தாக்­கி­விட்­டன. ஆனால், இணை­யத்­தில் உல­வும் தக­வல்­க­ளால் இளம்­பெற்­றோர் அலைக்­க­ழிக்­கப்­ப­டு­வ­தும் அதி­க­மா­கி­விட்­டதை திரு­மதி ஜெம்மா சுட்­டி­னார்.

"என் பாட்­டி­களும் மூத்த உற­வி­ன­ரும் கரு­வுற்­றி­ருக்­கும் காலத்­துக்­கான இயற்­கை­முறை சார்ந்த வழக்­கங்­க­ளை­யும் தக­வல்­க­ளை­யும் பகிர்ந்து கொண்டனர். அவற்­றைக் கார­ணங்­க­ளு­டன் புரிந்­து­கொள்ள ஆராய்ச்சி செய்­தேன். இத­னால், பிற இனத் தம்­ப­தி­கள்­கூட தமி­ழர் முறை­யில், குறிப்­பாக உடற்­பி­டிப்­பை­யும் மூலிகை மருத்­து­வத்­தை­யும் நாடி என்­னி­டம் வரு­கின்­ற­னர். தமி­ழர் மர­பை­விட இப்­ப­ணி­யில் வேறு ஆழ­மான அடித்­த­ளம் இருக்க முடி­யாது," என்­றார் இவர்.

'டூலா' பணி­யின் சிறப்­பம்­சம் குழந்­தை­க­ளு­ட­னும் குடும்­பத்­தி­ன­ரு­ட­னும் ஏற்­படும் நெருக்­க­மான உறவே என்­றார் அவர். அதை ஆமோ­தித்­தார் ஜெனட்.

"டூலாக்­க­ளைப் பற்றிய விழிப்­பு­ணர்வு குறை­வா­கவே உள்­ளது. அலு­வ­ல­கங்­களில் பணி­யாற்­று­வ­தை­விட, மன­தார வேலை செய்­ய இப்பணி வாய்ப்­ப­ளிக்­கிறது. பெற்­றோ­ரின் ஊக்­கத்­தோடு, இதைத் தொழி­லாய் அமைத்­துக்­கொள்­ளும் எண்­ணம் கொண்­டுள்­ளேன்," என்­றார் ஜெனட்.