உடலையும் மனதையும் உருமாற்றும் தாய்மை

உடலையும் மனதையும் உருமாற்றும் தாய்மை

1 mins read

பிள்ளை பிறந்த பிறகு தாய்­மா­ரின் இயங்­கு­நீர் எனப்­படும் ஹார்­மோன் மாற்­றங்­க­ளால் மன உளைச்­ச­லுக்­கும் கவ­லைக்­கும் ஆளா­வது வழக்­கம். இச்­சிக்­கல், முதல் சில வாரங்­க­ளுக்கு நீடிக்­கும். அதை­யும் தாண்டி, மாதக் கணக்­கில் நீடிக்­கும் சோர்­வும் சோக­மும் 'போஸ்ட்­பார்­டம் டிப்­ரெ­ஷன்' எனும் மன அழுத்­தத்­தின் அறி­கு­றி­க­ளாக இருக்­க­லாம். இச்­சிக்­கல் உல­க­ள­வில் ஐந்­தில் ஒரு தாயா­ருக்கு ஏற் ­ப­டு­கிறது.

இந்­நிலை உள்­ளதா என்­ப­தைக் கண்­ட­றிய, https://www.alliance counselling.com.sg/perinatal-questionnaire/ எனும் தளத்­தைத் தாய்­மார் நாட­லாம்.

புதிய தாய்­மா­ரின் குடும்­பத்­தா­ரும் நண்­பர்­களும் பல­வி­த­மான கருத்­து­களை முன்­வைக்­க­லாம். அவர்­க­ளின் மாறுபட்ட கருத்­து­கள் பல­ருக்­குக் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

புதிய பொறுப்பை ஏற்­றுள்ள தாய்­மார் தனித்துவிடப்பட்டதைப் போன்று உணர்வதால், அவர் ­க­ளுக்கு ஆத­ரவுக்­கு­ழுக்­களும், மகப்பேறுகால உத­விப்­பெண்­களும் பெரி­தும் கைக்­கொ­டுக்க வல்­லவர்கள். அல­யன்ஸ் கவுன்­ச­லிங் ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் 'மைண்ட்­ஃபுல் மம்ஸ்' எனும் இல­வச ஆத­ர­வுக்­குழு, புதுத் தாய்­மாருக்கு உத­வுகிறது.

தேவை­யான அள­வில் பால் சுரக்­கா­வி­டில் தாய்­மார் மன­ இறுக்­கத்­துக்கு ஆளா­கக்­கூ­டும்.

இதைக் களைய, பாலூட்­டல் ஆலோ­ச­கர்­கள், தாதி­யர் உட்­பட்­டோர் பிர­ச­வம் முடிந்த கையோடு புதுத் தாய்­மாருக்கு வகுப்­பு­களை நடத்துவர்.

தக­வல்: மகப்பேறுகால உள­வி­ய­லா­ளர் அஷ்­வினி மனாசே, மகப்­பேறு மருத்­து­வர் டாக்டர் வனஜா கலைச்­செல்வன்