தமி­ழரின் பத்­திய உணவுமுறை

தமி­ழரின் பத்­திய உணவுமுறை

2 mins read
dd720d17-f4d1-47d4-9e16-23e4b7ad4b46
-

மகப்­பேறு காலத்­தில் முக்­கி­ய­மான அம்­சம் பத்­திய உண­வா­கும். எல்­லா­வகை காய்­க­றி­க­ளை­யும் பிள்ளை பெற்ற தாய்­மார் உண்­ண­மு­டி­யாது. நீர்ச்­சத்­துள்ள காய்­க­றி­ களை­யும் வாய்வு உண்­டாக்­கும் பருப்பு வகை­க­ளை­யும் அவர்­கள் தவிர்க்­க­வேண்­டும். உணவில் உப்­பும் கார­மும் மிகக் குறை­வா­கவே இருக்­க­வேண்­டும். இத்­த­கைய தமி­ழர் பத்­திய உண­வு­மு­றையை சிங்­கப்­பூ­ரில் ஏழாண்டு கால­மா­கத் தொழி­லா­கச் செய்­து­ வ­ரு­கி­றார் செல்வி முரு­கய்­யன்.

இரு மகன்­க­ளை­ப் பெற்று எடுத்­த­போது தமது தாயார் சமைத்­துத் தந்த உணவை திரு­மதி செல்வி நினைத்­துக்­கொள்­வ­துண்டு. பூண்­டும் இஞ்­சி­யும் முழு­தா­கவே இட்டு, உப்­பும் கார­மும் இன்றி இவர் சமைத்த உணவு ஆரோக்­கி­ய­மா­ன­தாக இருந்­தா­லும் அதன் சுவை செல்­விக்­குப் பிடிக்­க­வில்லை.

தமி­ழர் பத்­திய உணவை ருசி­யுள்­ள­தாக மாற்ற எண்ணிப் பல வகை­களில் ஆராய்ந்த அவர், சுய­தொ­ழில் ஆரம்­பித்த நேரத்­தில் சீனர் பத்­திய உண­வு ­வ­கை­க­ளை­யும் சாப்­பிட்­டுப் பார்த்­தார்.

சீனர்­க­ளின் பத்­திய உண­வில் மிக முக்­கி­ய­மாக இருப்­பது சூப் வகை­கள். அவர்­கள் பயன்­ப­டுத்­தும் மூலி­கை­கள், மருந்­துப்­பொடி ஆகி­ய­வற்றை அறிந்­து­கொண்டு, அவ்­வகை சூப்­பு­க­ளை­யும் புதிய தாய்­மார்­க­ளுக்கு அவர் தரு­வ­துண்டு.

இக்­கால பெற்­றோர்­க­ளின் நம்­பிக்கை மாறி­யுள்­ளது என்­கி­றார் 57 வயது திரு­வாட்டி செல்வி.

"முன்­னர் குழந்­தை­க­ளுக்­கும் வயிறு கட்­டு­தல் செய்­வ­துண்டு. தொப்­புள் விழுந்­த­வு­டன், வயிற்­றுக்­குள் காற்று புகா­மல் இருக்க, எனது தாயார் 'பரோட்' துணி­யில் சுருட்டு சாம்­ப­லைக் கொண்டு வயிறு கட்­டு­வ­துண்டு.

தற்­போது அதற்­குப் பதி­லாக பயன்படுத்தப்படும் 'டயப்­பர்', காற்று புகு­வதை தடுப்­ப­தில்லை. இத­னால், செரி­மா­னப் பிரச்­சி­னை­கள், வலி முத­லி­யவை குழந்­தை ­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்­றன," என்­றார் அவர்.

உடல்­சூட்­டைத் தணிக்க, குழந்­தை­க­ளின் கண்­களில் நல்­லெண்­ணெய் ஊற்­றும் வழக்­கத்­தைத் தமது அக்­கா­வி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்­டார் திரு­மதி செல்வி. அச்­செய்­மு­றை­யை­யும் தற்­போது சிலர் விரும்­பு­வ­தில்லை என்று அவர் குறிப்­பிட்­டார்.

பத்­தாண்­டுப் பணி­யில் ஏறத்­தாழ 150 சிசுக்­களை கையாண்­ட­தா­கக் கூறும் செல்வி, 2012இல் தமது பேத்­தி­யைக் குளிப்­பாட்­டியதி­லி­ருந்து தமது அம்மாவும் மூத்த அக்காளும் உற்­றா­ருக்காகச் செய்­து­வந்ததைப் பிற­ருக்­கா­க செய்யத் தொடங்­கி­னார்.

சில ஆண்­டு­களில் ஓய்­வு­ பெறத் திட்­ட­மி­டும் இவர், அனு­தி­ன­மும் குழந்­தை­க­ளின் முகத்­தைக் காண இய­லாத வருத்­தம் ஒன்­று­தான் இருக்­கும் என்­றார்.

எட்­டாண்­டு­க­ளுக்கு முன்­னர் புற்­று­நோ­யி­லி­ருந்து மீண்டு வந்த திருவாட்டி செல்வி, உற­வி­னர்­களை இழந்த அல்லது பிள்ளையை இழந்த புதிய தாய்­மாருக்குத் துணை­யாக இருந்­தது எப்­போ­தும் தமது நினைவிலிருந்து அகலாது என்றார்.