பிணைப்பால் பெறும் நிறைவு

பிணைப்பால் பெறும் நிறைவு

2 mins read

சுபத்­திரா லெட்­சு­ம­ண­னின் இரு பிள்­ளை­க­ளை­யும் பரா­ம­ரிக்க அவ­ரது அம்மா, பெரி­யம்மா, பாட்டி எனப் பல­ரும் இருந்­த­னர். அத­னால், குழந்­தைப் பரா­ம­ரிப்பை முழு­தா­கக் கற்­றுக்­கொள்ள அவ­ருக்கு வாய்ப்­பில்லை. உற­வி­ன­ரான திரு­வாட்டி செல்­வி­யு­டன் வீடு­க­ளுக்­குச் சென்று மகப்­பேறு காலச் சேவை­களை வழங்­கத் தொடங்­கிய அவர், அதில் நிறை­வைக் கண்­டார்.

இல்­லத்­த­ர­சி­யாக இருந்த சுபத்­திரா முத­லில் பயப்­பட்­டா­லும் திரு­மதி செல்வி கைகொ­டுத்­த­தால் முழு­நே­ர­மாக அதில் இறங்­கி­னார். தற்­போது மாதத்­திற்கு ஆறு குழந்­தை­கள் வரை கவ­னிக்­கி­றார்.

"குழந்­தை­களை எப்­படி குளிப்­பாட்­டு­வது, எப்­ப­டிக் கையாள்­வது, குறை­மா­தக் குழந்­தை­க­ளுக்கு தேவைப்­ப­டு­வது என்ன, எதில் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்­ப­தை­யெல்­லாம் செல்­வி­தான் எனக்­குக் கற்­றுக்­கொ­டுத்­தார்.

"மும்­மு­ர­மாக செய­லாற்­றத் தொடங்­கிய என்­னி­டம், குழந்­தை­க­ளு­டன் பேசி விளை­யா­ட­வேண்­டும் என்று அவர் கூறி­யது இன்­றும் மன­தில் நிற்­கிறது. குழந்­தை­க­ளு­டன் நல்ல பிணைப்பை வளர்த்­துக்­கொள்­வது மிக முக்­கி­யம் என்­பதை உணர்ந்­தேன்," என்­றார் சுபத்­திரா.

இணைந்து செயல்­பட்­டு­வந்த திரு­மதி செல்­விக்­கும் திரு­மதி சுபத்­தி­ரா­வுக்­கும் கொவிட்-19 நோய்ப்­ப­ர­வ­லின்­போது முன் எப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு அழைப்­பு­கள் வந்­தன. பெற்­றோ­ரும் உற­வி­ன­ரும் சிங்­கப்­பூ­ருக்கு வர இய­லாத நேரம் அது. இந்­தி­யா­வி­லி­ருந்து வந்­தி­ருந்த தமி­ழர்­கள் தனித்­து­வி­டப்­பட்­ட­னர்.

அச்­சூ­ழ­லில் மாதத்­துக்கு எட்டு குழந்­தை­கள் வரை பரா­ம­ரிக்­க­வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­ட­தா­கக் கூறிய திரு­மதி சுபத்­திரா, அதைச் சமா­ளிக்க தனி­யாக மகப்­பே­றுச் சேவை­களை வழங்­கத் தொடங்­கி­னார்.

குறை­மா­தக் குழந்­தை­க­ளைக் கவ­னிப்­பதே சுபத்­தி­ரா­வுக்கு மிகப் பெரிய சவா­லாக இருந்­தது.

"குறை­மா­தக் குழந்தைகளுக்­குக் குறிப்­பிட்ட தேவை­கள் இருப்­ப­து­போல ஒவ்­வொரு குழந்­தைக்­கும் வெவ்­வேறு தேவை­ க­ளுண்டு. அவற்­றைப் புரிந்­து­கொள்­வ­தற்கு குழந்­தை­யு­டன் நல்ல உறவை உரு­வாக்­க­வேண்­டும்," என்­றார் திரு­மதி சுபத்­திரா.