ஐம்பதாண்டுகளாகச் சேகரித்த இசைத்தட்டுப் புதையல்

ஐம்பதாண்டுகளாகச் சேகரித்த இசைத்தட்டுப் புதையல்

2 mins read
fc78320c-5961-4f2f-a3db-3a0bdaa9ac3c
-

பெனின்­சுலா பிளா­சா­வின் நான்­கா­வது மாடி­யில் ஓர­மாய் ஒளிந்­துள்­ளது ஓர் இசைத்­தட்டு புதை­யல். ஏறத்­தாழ 40,000 இசைத்­தட்டுகள் 'ஃபார் தி ரெகார்ட்' எனும் இக்­க­டை­யில் உள்­ளன. இவை ஏறத்தாழ 50 ஆண்டு­க­ளாக 73 வயது திரு அழ­கி­ரி­சாமி சொந்­த­மா­கத் திரட்­டி­யவை.

வீட்­டிலுள்ள தமது தனிப்­பட்ட திரட்­டில் உள்ள 15,000 இசைத்­தட்­டு­கள் உட்­பட தம்­மி­டம் இருப்­ப­தெல்­லாம் இசைக்­கு­ழுக்­கள் வெளி­யிட்ட முதல் பிர­தி­களும் அசல் இசைத்­தட்­டு­களும் ஆகும் என்று இவர் கூறி­னார்.

'தி பீட்­டல்ஸ்' பிர­பல ஆங்­கில இசைக்­கு­ழு­வின் பாடல்­களை முதன்­மு­றை­யாகக் கேட்­ட­போது மெய்­ம­றந்து போன திரு அழ­கிரி­சாமி அன்­றி­லி­ருந்து வானொலி, ரயி­லி­ல் வாக்­மே­னுடனும் இசை­யு­டன் பய­ணித்­தார்.

எனினும் அசல் இசைத்­தட்­டுக்கு ஈடு இணை­யில்லை என்று கூறும் இவர், மாண­வ­ராக இருந்­த­போது வேலைக்­குச் சென்று சேமிக்கும் பணத்தில் அவற்றை வாங்க வேண்­டும் என்று கனவு கண்­டார். 1970ல் அது ஈடே­றி­யது.

ஜோர்ஜ் ஹாரி­சா­னின் 'ஆல் திங்ஸ் மஸ்ட் பாஸ்' எனும் பாட­லின் அசல் இசைத்­தட்டு அவர் கைக்­குக் கிட்­டி­யது. ஐந்­தாண்­டு­கள் கழித்து வீட்­டில் இசை கேட்க சொந்­த­மாக கிரா­ம­போன் ஒன்றை அப்­போதே $400க்கு வாங்­கி­னார்.

ராணுவ வீர­ராகப் பணி­யாற்­றிய திரு அழ­கி­ரி­சாமி இசைத்­தட்­டு­களை வாங்­க மாதந்­தோ­றும் சில நூறு வெள்­ளி­க­ளைச் செல­வி­டு­வார். ஆண்­டுக்கு இரு முறை­யே­னும் அவர் ஐரோப்­பா­வில் நடந்த இசைத்­தட்­டுச் சந்தை­களுக்­குச் சென்று அசல் இசைத்­தட்­டு­களை வாங்­கிவந்துள்ளார்.

"இப்­போ­துள்ள மின்­னி­லக்க இசையை இசைத்­தட்­டோடு ஒப்­பி­டக்­கூட முடி­யாது. மின்­னி­லக்க இசை புகைப்­ப­டம் என்­றால் இசைத்­தட்டு ஓர் ஓவி­யம். அதில் உயி­ருண்டு. ஆழ­மான, மன­தைக் கட்­டிப்­போ­டும் இசையை இசைத்­தட்­டு­களில் மட்­டுமே கேட்டு உணர முடி­யும்," என்­றார் இவர்.

இசைத்­தட்­டுகளின் பிரபலம் 1990களில் இசைவட்டின் வரு­கை­யு­டன் மங்கிப் போனது. $10க்கும் குறை­வாக இசைத்­தட்­டு­கள் பல விற்­ப­னை­யா­கின. இப்­போதோ வர­லா­றும் மர­பு­டை­மை­யும் பேசும் இவை, ஆயி­ரக்­க­ணக்­கான வெள்­ளிக்கு விலை­போ­கின்­றன.

2011இல் திரு அழ­கி­ரி­சா­மி­யின் இசைத்­தட்­டுக் கடை உதய மா­னது. ஈ-பே தளத்­தில் முத­லில் விற்­கத் தொடங்­கிய அவர், ஓய்­வுக்­காலத் தொழிலாக பெனின்­சுலா பிளா­சா­வில் சொந்த வர்த்­த­கத்­தைத் தொடங்­கி­னார். சிங்­கப்­பூ­ருக்கு வரும் வெளி­நாட்­டி­ன­ரும் ஆர்­வம் கொண்ட இளை­யர்­களும் இவரை அதி­கம் நாடு­கின்றனர்.

ஆனால், திரு அழ­கி­ரி­சாமி எளி­தில் யாரி­ட­மும் இசைத்­தட்­டு­களை விற்­று­வி­டு­வ­தில்லை.

அவ்வாறு $8,000 மதிப்­புள்ள மிக அரி­ய­ இசைத்­தட்டை யாரி­ட­மும் விற்­கா­மல் அவர் வைத்­துள்­ளார். 'லீஃப் ஹவுண்ட்' எனும் இங்­கி­லாந்து இசைக்­கு­ழு­வின் 'க்ரோ­வர்ஸ் ஆஃப் தி மஷ்­ரூம்' எனும் பாட­லின் அந்த அசல்­பி­ரதி, சிங்­கப்­பூ­ரின் மிக விலை­யு­யர்ந்த இசைத்­தட்­டு­களில் ஒன்­றா­கும்.

"உண்­மை­யில் இசை ஆர்­வ­முள்­ளோர் வந்து கேட்­கும்­போது அவர்­க­ளு­டன் பிணைப்பு ஏற்­ப­டு­கிறது. இசைத்­தட்­டு­கள் ஒரு­வித வளம் என்று அறிந்­தி­ருப்­ப­வர்­ களி­டம் மட்­டுமே நான் விற்­கப் பார்க்­கி­றேன்," என்­றார் அவர்.