மாணவர்களை இசையால் ஈர்க்க ஆசிரியர்களுக்கான பாடல் பயிலரங்கு

மாணவர்களை இசையால் ஈர்க்க ஆசிரியர்களுக்கான பாடல் பயிலரங்கு

2 mins read
d86bcf35-14da-4a5a-8445-3bc443f80843
-

சபிதா ஜெய­கு­மார்

சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் நடத்­திய தமி­ழ­வேள் நினை­வுக் கருத்­த­ரங்­கின் தொடர்ச்­சி­யாக 'அழ­கோடு பாமாலை' பயி­ல­ரங்கு இம்­மா­தம் 4ஆம் தேதி உம­றுப்­பு­ல­வர் தமிழ் மொழி நிலை­யத்­தில் நடை­பெற்­றது. பாலர் பள்ளி, தொடக்­கப் பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்­கான இப்­ப­யி­ல­ரங்கை வழி­ந­டத்­தி­னார் நாட்­டுப்­பு­றப் பாடல்­க­ளுக்­குப் புகழ்­பெற்ற பேரா­சி­ரி­யர் மதுரை சந்­தி­ரன்.

பாடல்­கள் மூலம் மாண­வர்­க­ளைக் கவ­ரும் வழி­களை அவர் ஆசி­ரி­யர்­க­ளுக்­குக் கற்­றுக்­கொ­டுத்­தார். பாடல்­க­ளின்­வழி எளிய முறை­யில் மாண­வர்­க­ளுக்கு வாழ்க்­கைப் பாடங்­க­ளைப் புகட்டு ­வ­து­டன் தமி­ழில் ஆர்­வத்­தை­யும் ஏற்­ப­டுத்த முடி­யும் என்று முனை­வர் சந்­தி­ரன் வலி­யு­றுத்­தி­னார்.

"வகுப்­பில் பாடங்­களில் மட்­டும் அதிக கவ­னம் செலுத்­தி­னால் மாண­வர்­கள் ஆர்­வம் இழந்­து­வி­டு­வர். குறிப்­பாக, பள்­ளி­யில் ஆரம்ப நிலை­யில் இருக்­கும் மாண­வர்­களை ஈர்ப்­ப­தற்கு, அவர்­க­ளின் எதிர்­பார்ப்புகளுக்கு ஏற்ப பாடல்­கள், இசை, நாட­கம் ஆகி­யவை சேர்ந்த பாடத்­திட்­டத்தை வடி­வ­மைக்க வேண்­டும். தமி­ழில் அதி­கம் புழங்­காத பிள்­ளை­களை இவ்­வா­று­தான் ஈர்த்­தாக வேண்­டும்," என்று அவர் கூறி­னார்.

பல நாட்­டுப்­பு­றப் பாடல்­கள் பாடி, அவை பிள்­ளை­க­ளுக்­குச் சொல்­லும் விழு­மி­யங்­க­ளைச் சுட்­டிக்­காட்­டிய அவர், நாட்­டுப்­பு­றப் பாடல் வகைகளை­யும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு விளக்­கி­னார்.

அதைத் தொடர்ந்து ஆசி­ரி­யர்­க­ளுக்­கான செய்­முறை பயிற்சி இடம்­பெற்­றது. ஆசி­ரி­யர்­கள் எழு­திய பாடல்­களை மெரு­கேற்­றிப் பாடிக் காட்­டிய முனை­வர் சந்­தி­ரன், சிறு­வர்­க­ளுக்கு ஏற்­ற­வாறு அவற்றை எவ்­வாறு பாடு­வது என்­றும் விவ­ரித்­தார்.

சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தின் தலை­வர் தன­பால் குமார், "மாண­வர்­க­ளின் இளம் பரு­வத்­தி­லி­ருந்து ஆழ்ந்த தாக்­கத்தை முத­லில் ஏற்­ப­டுத்­தும் பாலர் பள்ளி, தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் தமிழ் மொழி­யைப் போற்றி வளர்க்­கும் அடுத்த தலை­மு­றை­யி­னரை உரு­வாக்­கு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய உத்­தி­களை இப்­ப­யி­ல­ரங்கு வழங்­கி­யுள்­ளது," என்று குறிப்­பிட்­டார்.

பிசி்எஃப் பாலர் பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு­மதி கோப்­பெ­ருந்­தேவி, 34, பயி­ல­ரங்கு மிக­வும் பய­னுள்­ள­தாக இருந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

"தாளத்­து­ட­னும் கவிதை நயத்­து­ட­னும் பிள்­ளை­க­ளுக்கு பாடம் கற்­பித்­தால் அவர்­கள் விரை­வில் புரிந்­து­கொள்­வர் என்று உணர்ந்து கொண்­டேன்," என்­றார் அவர்.

"நான் முன்பு கலந்­து­கொண்ட பயி­ல­ரங்­கு­கள் போல இது அமை­ய­வில்லை. முனை­வர் சந்­தி­ரன் பாடல்­கள் பாடி பயி­ல­ரங்­கைத் தொடங்­கி­யது அனை­வ­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­தது. இப்­ப­யி­ல­ரங்கு பல்­வேறு கோணங்­களில் தமிழ் கற்­பித்­த­லைக் காண எங்­க­ளுக்கு உத­வி­யது," என்று அதில் கலந்­து­கொண்ட பெயர் குறிப்­பி­டாத பாலர் பள்ளி ஆசி­ரி­யர் ஒரு­வர் கூறி­னார்.

"தமிழ்ப் பண்­பாட்டை எளிய முறை­யில் மாண­வர்­க­ளுக்­குக் கற்­றுத்­த­ரும் உத்­தியை முனை­வர் சந்­தி­ர­னி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்­டேன். பாட­நூல்­களில் பாடல்­கள் ஏற்­கெ­னவே உள்­ளன. ஆனால் அவற்றை வேறு வழி­களில் எவ்­வாறு வகுப்­ப­றை­யில் போதிக்­க­லாம் என்று யோசிக்க பயி­ல­ரங்கு என்­னைத் தூண்­டி­யது," என்று கிராஞ்சி தொடக்­கப்பள்­ளி ஆசி­ரி­யர் திரு­மதி சரஸ்­வதி கூறினார்.

நாட்­டுப்­பு­றப் பாடல்­களில் விழு­மி­யங்­கள் நிறைந்­தி­ருப்­ப­தால் என் மாண­வர்­க­ளுக்கு அவற்றை அறி­மு­கம் செய்ய ஆவ­லாய் உள்­ளேன்," என்று திருமதி சரஸ்வதி உற்சாகத்துடன் சொன்னார்.