கலையும் மொழியும் தழைத்தோங்கும் காலம்

கலையும் மொழியும் தழைத்தோங்கும் காலம்

2 mins read

தமி­ழார்­வமே திரு வடி­வ­ழ­கன்-விக்­னேஸ்­வரி (படம்) தம்­ப­தி­யி­ன­ரைக் கலை­ஞர்­க­ளாக வளர்த்­தெ­டுத்­தது; கலைப்­பா­லம் அமைத்து இரு­ம­னத்தை திரு­ம­ண­மாக இணைத்­து­விட்­டது என­லாம். பதின்ம வய­தி­லி­ருந்தே தமி­ழை­யும் கலை­யை­யும் விடாப்­பி­டி­யா­கக் கொண்­டுள்ள இந்­தத் தம்­ப­தி­யின் பய­ணம் நாட­கம், நட­னம், இசை என தொட­ரு­கிறது.

நாடக மேடை­க­ளி­லும் தொலைக்­காட்­சியிலும் தோன்றி மக்­களை மகிழ்­வித்த திரு வடி­வ­ழ­கன், தமது சட்­டத்­துறை பணி­கள் கருதி 2012ல் கலைத்­து­றை­யி­லி­ருந்து சிறிது காலம் வில­கி­யி­ருந்­தார். அவ­ருள் தணி­யா­தி­ருந்த கலை­யார்­வமோ அவரை விட்­டு­வைக்­க­வில்லை. ரசி­கர்­களும் அவரை விட்­ட­பாடில்லை.

"பொது இடங்­களில் மூத்­தோர் சிலர் என்னை அடை­யா­ளம் கண்­டு­கொள்­வர். ஏன் நான் தொலைக்­காட்­சி­யில் தோன்­று­வ­தில்லை என்று கேட்டு அவர்­கள் வருத்­தம் தெரி­வித்­தது என்­னைப் பாதிக்­கவே செய்­தது," என்­றார் திரு ச.வடி­வ­ழ­கன், 51.

கொவிட்-19 காலத்­தின்­போது திரு வடி­வ­ழ­கன் திரைக்­குத் திரும்­பி­னார். 'வடி, ரெடி, வெடி' எனும் புது­மை­யான நகைச்­சுவை நிகழ்ச்­சியை வழி­ந­டத்தி பாராட்டுப் பெற்றார். தமிழ்­மொழி­யின் அழகை ரசிக்­கச் செய்ய நகைச்­சு­வை­யை­விட சிறந்­த­தொரு கருவி இல்லை என்­பது இவ­ரின் அனு­ப­வம்.

மறு­மு­னை­யில், இடை­வேளை இன்றி தமி­ழூட்­டிய கலைத்­துறை­யில் முழு­நே­ர­மாக இள­மை­யி­லி­ருந்தே பய­ணம் செய்து வரு­கி­றார் இவ­ரின் மனைவி திரு­மதி விக்­னேஸ்­வரி. இளம் வய­தில் கலை­யார்­வத்தை இவ­ரி­டம் அறி­மு­கப்­ப­டுத்தி இருந்­தார் இவரின் தாயார் திரு­மதி மனு­நீ­தி­வதி. அவர் சிங்­கப்­பூ­ரின் முதல் இந்திய பெண் தாளவாத்தி­யக் கலை­ஞர்.

இவ­ரின் வழி­காட்­டு­த­லில் தமிழ்ப் பாடல்­க­ளின் பொரு­ளு­ணர்ந்து அதற்­கேற்ப அபி­ந­யம் பிடித்­த­தன்­வழி தமி­ழார்­வ­மும் திரு­மதி விக்­னேஸ்­வ­ரிக்­குத் தொற்­றிக்­கொண்­டது.

"முன்பெல்லாம் கலைத்­துறையை முழு­நேர வாழ்க்­கைத்­தொ­ழி­லா­கப் பலர் கரு­த­வில்லை. ஓர் இந்­தி­யப் பெண்­ம­ணி­யாக சாதிக்க முடி­யுமா, சம்­பா­திக்க முடி­யுமா எனக் கேள்­வி­கள் எழுந்­தன. பத்­தாண்­டு­களில் இந்­நிலை முற்­றி­லும் மாறி கலை­யும் மொழி­யும் கொண்­டா­டப்­படும் என நான் அன்று அவர்­க­ளி­டத்­தில் கூறி­யது இன்று நன­வாகி உள்­ளது," என்­றார் திருமதி விக்னேஸ்­வரி.