வாழ்வுக்குத் தொடர்புடைய தமிழ்

வாழ்வுக்குத் தொடர்புடைய தமிழ்

1 mins read
cdf76602-8a49-44bd-9616-8e2cf79165c2
-

தமது தந்தை சிறுவயதில் கூறிய மகாபாரத, ராமாயணக் கதைகள் திரு பார்கவ் மனதில் நிலைத்தூன்றியது. மனதுக்கு நெருக்கமான அக்கதைகளை தமது பள்ளிப் பருவத்தில் தொடர்ந்து வாசித் தார் பார்கவ் (படம்). அவையே அவர் பின்பற்றிய அறநெறிக் கோட்பாடுகளைச் செதுக்கியதென பின்னர் அவர் உணர்ந்தார். இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கும் முடிவெடுப்பதற்கும் பயன்பட்டுள்ள இந்த

இதிகாச பாடங்கள், அவருள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியதோடு ஏற்கெனவே மனதில் கொண்டிருந்த

நாடக எழுத்தாளரையும்

தட்டி எழுப்பின.

"தமிழில் சிந்திக்கப் பழகினால் நமது வாழ்க்கை யுடன் கலந்துவிடுகிறது அம்மொழி. அதற்கு வாசிப்பு மிக அவசியம் என்றே கருது கிறேன். அதனால் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன்," என்றார் பொதுச் சேவைத் துறையில் பணிபுரியும்

திரு பார்கவ், 29.