சமூகத்தை வலுப்படுத்தும் மொழி

சமூகத்தை வலுப்படுத்தும் மொழி

1 mins read
38453fcc-8ef0-4389-a231-ce8088c77d39
-

தமிழ்ச் சமூகம் சிங்கப்பூரில் தனித்துவமான சிக்கல்களை யும் அனுபவங்களையும் கொண்டது என்பது இளையர் அஷ்வாணி அதிகம் அலசி ஆராய்ந்த ஒன்றாகும். தம்மி டம் இருந்த அடையாளம் குறித்த தேடலை நிறைவுசெய் யும் தளமாக விளங்கியது, நாடகத்துறை. கவிதையும் நாடகமும் அஷ்வாணியின் உணர்ச்சி வெளிப்பாட்டுக் கருவிகள். இருமொழிப் படைப் பாளராக வலம்வரும் இவர், இனவாதம் போன்ற விவகாரங் கள் தாய்மொழியில் படைக்கப் படும்போது தரும் அனுபவம் மாறுபட்டது என உணர்கிறார்.

அதன் விளைவாக 2017ல் உருவானதே, அஷ்வாணியின் 'பழுப்பு' எனும் நாடகம். புலம்பெயர்ந்தோரின் தேடல், தமிழர்களின் அடையாளம் ஆகியன இதன் சாராம்சம்.

"தமிழில் எழுதுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அவற்றை இளையர்கள் பயன்படுத்தும்போது தமிழர் குறித்த சமூகப் புரிதலை மேம்படுத்தலாம்; தவறான கண்ணோட்டம் மாறலாம். அவ்வல்லமையை நாம் பெற்றி ருக்கிறோம் எனத் தெரிய வரும்போது மொழி மீதான பற்று வலுப்படுகிறது," என்றார் அஷ்வாணி அஷ்வத், 32. (படம்)